மாற்கு 6,7. ஆம் அதிகாரம் வினாடி வினா
*1.* இந்த ஜனங்கள் தங்கள் உதடுகளினால் என்னை ______*பண்ணுகிறார்கள்.*
1.பதில்:
*மாற்கு7:6*
கனம்பண்ணுகிறார்கள்.
2.திடன்கொள்ளுங்கள் நான் தான் பயப்படாதிருங்கள் என்று *யார் யாரிடம்* கூறினார்?
2. பதில்: *மாற்கு6:50*
இயேசு சீஷர்களிடம்.
3. *எந்தப் பகுதிக்கு* போகும்படி இயேசு தம்முடைய சீஷர்களை அனுப்பினார்?
*a)* பெத்தானியா
*b)*பெத்சாயிதா
*c)*பெத்தேல்
3. பதில்: *மத்தேயு6:45.*
b) பெத்சாயிதா.
4. *அல்லவா* என்ற வார்த்தை மாற்கு 6 ஆம் அதிகாரத்தில் வருகிறது... *சரியா? தவறா?*
4.பதில்
*மாற்கு6:3.*
சரி.
5. *யோசேப்பு, மரியாளின்* பிள்ளைகள் பெயரினைக் கூறுக?
5. பதில்
மாற்கு 6:3
யாக்கோபு,
யோசே,
யூதா,
சீமோன்
6.யோவான் ______ *,*______ உள்ளவன்?
6. பதில்
*மாற்கு6:20*.
நீதியும், பரிசுத்தம் உள்ளவன்.
7.யோவான் தலையை கொண்டு வர வேண்டாம் என்று *ஏரோது சேவகனுக்கு* கூறினான்..
*சரியா? தவறா?*
7.பதில்:
*மாற்கு6:27*
தவறு [கொண்டுவரச் சொன்னான்.]
8.இயேசு நோயாளிகளுக்கு *எதைப்* பூசி சொஸ்தமாக்கினார்?
*a)* எண்ணெய்
*b)*தண்ணீர்
*c)*பரிமளம்
8.பதில்:
*மாற்கு6:13.*
a)எண்ணெய்
9. பதில்
*மாற்கு6:56.*
சரி.
10. *கொர்பான்* என்னும் காணிக்கை கொடுத்து விட்டால் *______* தீர்ந்தது?
10. பதில்
*மாற்கு 7 :11*
கடமை
11. *தீர்க்கத்தரிசி* ஒருவன் எங்கு கனவீனமடையான் என்று இயேசு கூறுகிறார்?
11. பதில்
*மாற்கு6:4.*
தன் ஊரிலும் தன் இனத்திலும், தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான்.
12. *______* தேசத்தாளாகிய கிரேக்க ஸ்தீரி?
12.பதில்
*மாற்கு7:26*
சீரேபேனிக்கியா
13.எப்பத்தா என்றால் என்ன அர்த்தம்?
13. பதில்
*மாற்கு7:34*
திறக்கப்படுவாயாக.
14. கேட்கிறதற்கு ஒருவன் எது இருந்தால் கேட்கக்கடவன்?
*a)* செவியுள்ளவனாயிருந்தால்.
*b)*மனமுள்ளவனாயிருந்தால்.
*c)*காதுள்ளவனாயிருந்தால்
14. பதில்:
*மாற்கு7:16*
c) காதுள்ளவனாயிருந்தால்
15. மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலிருந்தப் படியால் இயேசு அவர்களைக் கண்டு *மனதுருகினார்* *சரியா? தவறா?*
15. பதில்
*மாற்கு6:34.*
சரி
16.அவர்கள் கடலைக் கடந்து *எந்த நாட்டிற்கு வந்து* கரை பிடித்தார்கள்?
*a)* கெனேசரேத்
*b)* கேனெசரேத்
*c)*கெனெசரேத்
16. பதில்
*மாற்கு6:53.*
a)கெனேசரேத்
17. ______ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது?
17. பதில்
*மாற்கு7:6*
இருதயமோ
18. பரிசேயர் முன்னோர் பாரம்பரியத்தைக் கைக்கொள்ளவில்லை.. *இது சரியா? தவறா?*
18.பதில்
*மாற்கு7:3*
தவறு [கைக்கொண்டனர்.]
19.அப்பம் சாப்பிட்ட புருஷர் ஏறக்குறைய *எத்தனைப் பேர்?* *எத்தனை அப்பம்? எத்தனை மீன்?*
19.பதில்
*மாற்கு 6:44,38.*
ஐயாயிரம்
ஐந்து , இரண்டு
*கடைசிக் கேள்வி:*
*20._______* பண்ணும்படி ஒரு மலையின் மேல் இயேசு எறினார்?
*a)குணமாக்கும்படி*
*b)தனித்திருக்கும்படி*
*c)ஜெபம்பண்ணும்படி*
20. பதில்
*மாற்கு6;46*
c)ஜெபம்பண்ணும்படி