மாற்கு 10&11 ஆம் அதிகாரங்கள் வினாடி வினா





மாற்கு 10&11 ஆம் அதிகாரங்கள் வினாடி வினா



🌹1. *மனுஷகுமாரன் யாரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படுவார்?*
  
பிரதான ஆசாரியரிடத்திலலும், வேத பாரகரிடத்திலும். *மாற்கு 10:33*.

🌹2. *மனுஷக்குமாரன் எதற்காக வரவில்லை? எதற்காக வந்தார்?*

ஊழியம்கொள்ளும்படி வராமல்,  ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாக தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார். *மாற்கு10:45*

🌹3. *நாங்கள மொத்தம் பனனிரண்டு பேர் ஆனால் எங்களில் இரண்டுபேர் எங்களை எரிச்சல்படுத்தினார்கள் அவர்கள் யார்?*
யாக்கோபு, யோவான். *மாற்கு10:41*

🌹4. *நான் கற்பனைகளைக் கைக் கொண்டவன் செல்வ சீமான் எனக்கு ஒரு ஆசை நித்திய ஜீவனைப் பெற வேண்டும் இயசுவைப் பின்பற்ற வேண்டும் என்று ஆனால் என்னிடத்தில் ஒரு குறைவுண்டு  என்றார் இயேசு என்ன குறை? அவர் என்னை எங்கே பொக்கிஷம் சேர்த்து வைக்கச் சொன்னார்? அவரைப் பின்பற்ற நான் எதை எடுக்க வேண்டும்?*
நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு,  என்னைப் பின்பற்றி வா என்றார். *மாற்கு10:21*

🌹5. *ஒலிவமலைக்கு அருகான ஊர் என்ன ஊர்?*
பெத்பகே பெத்தானியா *மாற்கு 11:1.*

🌹6. *பர்திமேயு நசரேயனாகிய இயேசுவை எப்படிக் கூப்பிடத் தொடங்கினான்?*
இயேசுவே, தாவீதின் குமாரனே எனக்கு  இரங்கும். *மாற்கு10:47*

🌹7. *இயேசு தன் சீஷர்களிடத்தில் எப்படிப்பட்டக் கழுதைக் குட்டியைக் காண்பீர்கள் என்றார்?*
மனுஷர் ஒருவரும்  ஒருக்காலும் ஏறியிராத ஒரு கழுதைக் குட்டி கட்டியிருக்க காண்பீர்கள். *மாற்கு11:2.*

🌹8. *நான அழகான இலைகளைக் கொண்ட மரம் ஆனால் கனியோ இல்லை அதற்கான காலமும் இல்லை. அதனால் சபிக்கப்பட்டேன் நான் யார்? என்னை சபித்தவர் யார்?*
அத்திமரம் *மாற்கு11:13,14* இயேசு *மாற்கு11:20,21.*

🌹9. *இயேசு தேவாலயத்திலே உலாவிக் கொண்டிருக்கையில் யாரெல்லாம் இயேசுவினிடத்திற்கு வந்தார்கள்?*
பிரதான ஆசாரியரும், வேதபாரகரும்  *மாற்கு11:27*

🌹10. *நான் வழியை ஆயத்தம்பண்ண வந்தவன், நான் மிகவும்  வித்தியாசமான முறையில் வாழ்ந்தவன், நான் யாருக்கும் அஞ்சாதவன், என்னிடத்தில் இயேசு ஸ்நானம் பெற்றார். ஆனால் நான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ மனுஷரால் உண்டாயிற்றோ என்று இயேசு கேட்டார் நான் யார்?*
 யோவான் *மாற்கு11:30.*          
        🌹_🌷_🌹

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.