Type Here to Get Search Results !

இயேசுவுக்கு அன்பாயிருந்தவன் என்று யோவான் அழைக்கப்பட காரணம் என்ன❓யோவான் 19:26, 20:2, 21:20*




*இயேசுவுக்கு அன்பாயிருந்தவன் என்று   யோவான் அழைக்கப்பட காரணம் என்ன❓யோவான் 19:26, 20:2, 21:20*

யோவான் மாத்திரம் அல்ல, பேதுருவும் யாக்கோபும் அன்பாய் தான் இருந்தார்கள். ஆனாலும் யோவான் ஒருபடி மேலே என்று தான் சொல்ல வேண்டும்.

ஏன் இவர்கள் மேல் இயேசு அன்பாயிருந்தார் ?
இவர்கள் இயேசுவை மீதி சீஷர்களை காட்டிலும் அதிகமாய் *விசுவாசித்தார்கள்*, அதனால் அவர்கள் இயேசு சொன்னவைகளை செயல்படுத்தவும் செய்தார்கள்.

இயேசுவிடம் அன்பாக இருப்பவர் எவரும் அவர் கட்டளைகளை கடைப்பிடிப்பார்கள் இல்லையா ? (யோவான் 14:15) அது போல இவர்கள் மற்ற சீஷர்களை காட்டிலும் இயேசுவின் கட்டளைகளை *விசுவாசித்து கடைப்பிடித்தார்கள்*. விசுவாசமில்லாமல் தேவனிடத்தில் பிரியமாய் இருப்பது கூடாத காரியம்.(எபிரேயர் 11:6)

இயேசு கெத்சமெனே தோட்டத்தில் பிடிக்கப்பட்டபொழுது எல்லா சீஷர்களும் ஓடித்தான் போனார்கள். ஆனால் இயேசுவுக்கு அன்பாய் இருந்த பேதுருவோ, யாக்கோபோ அவருடன் சிலுவையில் அறையப்படும் போது இல்லை. தன்னையும் பிடிப்பார்கள் என்ற போதிலும் யோவான் தைரியமாக இயேசுவோடு இருந்தார். இயேசுவும் தன் தாயை யோவானுக்கு தாயாய் அருளினார். தன் உயருக்கு பயப்படாமல் விசுவாசத்தினால் இயேசுவோடு இருந்தபடியால் அவர் இரத்தசாட்சியாக மரியாமல் நீண்ட வயதுவரை வாழ்ந்து நித்திரை அடைந்தார். ஆனால் யாக்கோபோ முதல் இரத்தசாட்சியாக தலை வெட்டப்பட்டார், பேதுரு இரத்தசாட்சியாக சிலுவையில் அறையுன்டார்.

*லூக்கா 17 :33*
33 தன் ஜீவனை இரட்சிக்க வகைதேடுகிறவன் அதை இழந்துபோவான், இழந்துபோகிறவன் அதை உயிர்ப்பித்துக்கொள்ளுவான்.

இதனால் என்ன ?

*இயேசுவுக்கு அன்பாயிருந்தவன் என்று   யோவான் அழைக்கப்பட காரணம் என்னவென்றால் இயேசுவை விசுவாசித்து அவருடைய கட்டளைகளை பின்பற்றி தன் ஜீவனை இரட்சிக்க வகைத்தேடாமல் அதை இயேசுவுக்காக கொடுக்க ஆயத்தமாக இருந்ததே.*

*வசனக்குறிப்பு:* Verse References

*மத்தேயு 26 :37*
37 *பேதுருவையும் செபெதேயுவின் குமாரர் இருவரையும்* கூட்டிக்கொண்டுபோய், துக்கமடையவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.
*மாற்கு 14 :33*
33 *பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும்* தம்மோடே கூட்டிக்கொண்டுபோய், திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.

*மாற்கு 9 :2*
2 ஆறு நாளைக்குப்பின்பு, *இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும்* அழைத்து, உயர்ந்த மலையின்மேல் அவர்களைத் தனியே கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்.

*மாற்கு 5 :36 - 37*
36 அவர்கள் சொன்ன வார்த்தையை இயேசு கேட்டவுடனே,ஜெபஆலயத்தலைவனை நோக்கி,பயப்படாதே,விசுவாசமுள்ளவனாயிரு என்று சொல்லி.
37 *பேதுருவையும்,யாக்கோபையும்,யாக்கோபின் சகோதரன் யோவானையும்* தவிர, வேறொருவரும் தம்மோடே வருகிறதற்கு இடங்கொடாமல்.

*மாற்கு 13 :3*
3 பின்பு, அவர் தேவாலயத்துக்கு எதிராக ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில்,பேதுருவும், யாக்கோபும் யோவானும் அந்திரேயாவும் அவரிடத்தில் தனித்துவந்து.

*லூக்கா 22 :8*
8 அப்பொழுது அவர் *பேதுருவையும் யோவானையும்* அழைத்து: நாம் பஸ்காவைப் புசிக்கும்படிக்கு நீங்கள் போய், அதை நமக்கு ஆயத்தம்பண்ணுங்கள் என்றார்.

*அப்போஸ்தலர் 3 :1*
11 குணமாக்கப்பட்ட சப்பாணி *பேதுருவையும் யோவானையும்* பற்றிக்கொண்டிருக்கையில், ஜனங்களெல்லாரும் பிரமித்து, சாலொமோன் மண்டபம் என்னப்பட்ட மண்டபத்திலே அவர்களிடத்திற்கு ஓடிவந்தார்கள்.

*அப்போஸ்தலர் 4 :13*
13 *பேதுருவும் யோவானும்* பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, *அவர்கள் இயேசுவுடனே கூட இருந்தவர்களென்று அறிந்து கொண்டார்கள்.*

*அப்போஸ்தலர் 4 :19*
19 *பேதுருவும் யோவானும்* அவர்களுக்குப் பிரதியுத்தரமாக; *தேவனுக்குச் செவிகொடுக்கிறதைப்பார்க்கிலும் உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ* என்று நீங்களே நிதானித்துப்பாருங்கள்.


WhatsApp பகிர்வு

Post a Comment

0 Comments