இயேசு எப்பொழுது மரணமடைந்தார்.?


இயேசு  எப்பொழுது மரணமடைந்தார்.?

யூதர்கள் 24 மணி நேரங்களை  பன்னிரண்டு மணி வேளைகளாக பிரித்துள்ளனர். அதாவது
முதலாம் மணி வேளை =  6 to 7 am
இரண்டாம் மணி வேளை  = 7 to 8 am
மூன்றாம் மணி வேளை  = 8 to 9 am
நான்காம் மணி வேளை =  9 to 10 am
ஐந்தாம் மணி வேளை  = 10 to 11 am
ஆறாம் மணி வேளை  = 11 to to 12 pm
ஏழாம் மணி வேளை  = 12 to 1 pm
எட்டாம் மணி வேளை  = 1 to 2 pm
ஒன்பதாம் மணி வேளை  = 2 to 3 pm
பத்தாம் மணி வேளை  = 3 to 4 pm
பதினோராம் மணி வேளை  = 4 to 5 pm
பன்னிரண்டாம் மணி வேளை  = 5 to 6 பின்


யோவா-19:14 அந்த நாள் பஸ்காவுக்கு ஆயத்தநாளும் ஏறக்குறைய ஆறுமணி நேரமுமாயிருந்தது. (‘ஆறாம் மணி” அல்ல ‘ஆறுமணி”) அப்பொழுது அவன் யூதர்களை நோக்கி: இதோ உங்கள் ராஜா என்றான்.இவ்வசனத்தின்படி இயேசு விசாரணைக்காக ஒப்புக்கொடுக்கப்படும் போது காலை 6 மணி

மாற்-15:25 அவரைச் சிலுவையில் அறைந்தபோது மூன்றாம்மணி  வேளையாயிருந்தது. (‘மூன்று மணி‘ அல்ல ‘மூன்றாம் மணி‘)
இவ்வசனத்தின்படி காலை 9 மணியளவில் இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
மத்-27:45 ஆறாம்மணி நேரமுதல் ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று.
மாற்-15:33 ஆறாம்மணி நேரமுதல் ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம்  உண்டாயிற்று.
லூக்-23:44 அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி நேரமாயிருந்ததுளூ ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரமுண்டாயிற்று.
இவ்வசனங்களின்படி 12 மணி முதல் மாலை 3 மணி வரை பூமியெங்கும் இருள் சூழ்ந்தது.
மாற்-15:34. ஒன்பதாம்மணி நேரத்திலே இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார் அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
இவ்வசனத்தின்படி மாலை 3 மணியளவில் இயேசு மரணமடைந்தார்.

1.   இயேசு விசாரணைக்காக ஒப்புக்கொடுக்கப்படல் – காலை 06 மணி
2.   இயேசு சிலுவையில் அறையப்படல் – காலை 09 மணி
3.   பூமியெங்கும் அந்தகாரம் உண்டாதல் – மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை
4.   இயேசு மரணமடைதல் – மாலை 03 மணி

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.