*ஆபாச படத்தில் - பிசாசின் தந்திரம்* 👻
இன்றைய காலத்தில் வாலிபர்கள்,சிறுவர்கள் , ஆண்/பெண் , திருமணமானவர்கள், இரட்சிக்கப்பட்டவர்கள் , இரட்சிக்கப்படாதவர்கள், ஊழியர்கள் , விசுவாசிகள், பெரியபதவியில் இருப்பவர்கள் என்று பாகுபாடு இல்லாமல் அனைவரும் அடிமையாக இருக்கக்கூடிய பாவம் இது..
சிலர் இதை பாவம் என்றும் தெரிந்தும் அதிலிருந்து வெளியே வர முடியாமல் அடிமையாக உள்ளனர்.
இன்னும் சிலர் இதேல்லாம் பாவம் இல்லை என்று சொல்லிக்கொண்டு இந்த படங்களை துனிகரமாக பார்க்கின்றனர்.
இதற்கு பின்னால் *பிசாசின் மிகப்பெரிய தந்திரம்* உள்ளது.
இத்தந்திரம் என்ன என்பதனை இந்த செய்தியில் தியானிப்போம் .
ஜெபத்தோடு வாசியுங்கள் ஆவியானவர் உதவி செய்வார்.
காண்டாமிருகத்திற்குக்கொப்பான பெலனை கொண்ட இஸ்ரவேல் மக்கள்(தேவனுடைய பிள்ளைகள் ) (எண்ணாகமம் 23:22) எகிப்திலிருந்து கானானுக்கு செல்லும்போது அவர்களை எப்படியாவது அழித்துவிடவேண்டுமென்று மோவாபின் இராஜா துடிக்கின்றான் .
இதற்காக பல ஆயிரம் செலவு செய்து அம்மக்களை சபிப்பதற்காக பிலேயாம் என்ற தீர்க்கதரிசியை கொண்டு வருகின்றான்.
ஆனால் பிலேயாமால் எவ்வளவு போராடியும் தேவனுடைய பிள்ளைகளை சபிக்கமுடியவில்லை .
அவர்களை சுற்றி ஒரு பாதுகாப்பு கரம் இருந்தது. எனவே பிலேயாம் தேவனுடைய பிள்ளைகளுக்கு விரோதமாக ஒரு திட்டம் தீட்டினான் .
இந்த ஜனங்களுக்கு விரோதமாக மந்திரவாதமும் இல்லை, குறிசொல்லுதலும் இல்லை என்பதனை உணர்ந்தவனாய்
”உங்கள் ஸ்தீரிகளை அவர்களிடம் அனுப்பி அவர்களை கவர்ந்திழுத்து அவர்களை வேசித்தனம் செய்ய சொல்லுங்கள். அப்பொழுது இவர்கள் பெலன் குறைந்துவிடும் .
இவர்களை பாதுகாக்கின்ற தேவனே இவர்களுக்கு விரோதமாக திரும்பிவிடுவார்.
பின்பு அவர்களை எளிதாக அழித்துவிடலாம் ” என்று ஒரு சூதான ஆலோசனையை மோவாபின் ராஜாவுக்கு சொல்லுகின்றான்.
அவர்களும் அப்படியே தங்கள் ஸ்திரீகளை அனுப்பினார்கள்.
அந்த ஸ்தீரிகள் சென்று தேவனுடைய மக்களை வேசித்தனம் செய்ய தூண்டினார்கள்.
முடிவில் தேவபிள்ளைகளின் பெலன் குறைந்தது . இருபத்திநாலாயிரம்பேர் தேவனால் அழிக்கப்பட்டார்கள் .(எண்ணாகம் 25:9)
அதே போன்றுதான் இன்றும் தேவனுடைய பிள்ளைகளை அழிக்க பிசாசு துடிக்கின்றான்.
குறிப்பாக சபைக்கு ஒழுங்காக செல்லும்பிள்ளைகளை, வரங்களை பெற்ற தேவனுடைய பிள்ளைகளை , ஊழியம் செய்கின்ற பிள்ளைகளை அழிக்க பிசாசு வெறித்தனமாக இருக்கின்றான்.(1 பேதுரு 5:8)
ஆனால் அவனால் ஒன்றும் பண்ண முடியவில்லை . எனவே அவர்களை தேவனிடமிருந்து பிரிக்கவேண்டும் என்பதற்காக தந்திரமாக மொபைல் போன் , நெட் வழியாக உணர்ச்சிகளை தூண்டும் , ஆபாச படங்களை பார்க்கவைக்கின்றான்.
இதில் என்ன தவறு என்ற எண்ணத்தை படித்த மேதாவிகள் மூலம் ஆலோசனையாக கொடுக்கின்றான்.
பிசாசினால் இயக்கப்படும் ஆபாச படத்திற்கு ஒரு வல்லமை உண்டு.
அது என்னவெனில் இதில் சிக்குண்டவர்களே வேசித்தனம், விபச்சாரம், கண்களின் இச்சை, மாம்சத்தின் இச்சை , சுயபுணர்ச்சி , ஓரினச்சேர்க்கை , காமவிகாரம் என இப்படி ஏதாவது ஒரு பாவத்தை செய்ய வைக்காமல் விடாது .
அப்படி பாவம் செய்கின்ற நேரத்தில் பிசாசு அவர்களை இன்னும் அதிகமாக தாக்குகின்றான்.
மற்ற வேளைகளில் தாக்க முடியாத மாந்திரீகம் , பில்லிசூனியம் இந்த நேரத்தில் தாக்க முடியும். இதுதான் ஆபாச படத்தை காண்பித்து பிசாசு செய்யும் தந்திரமாகும் .
இதனை வாசிக்கின்ற தேவபிள்ளைகளே ஒருவேளை இந்த பாவத்திற்கு அடிமையாகி இருந்தால், சீக்கிரத்தில் வெளிவந்துவிடுங்கள் ,
இதற்காக தொடர்ந்து ஊக்கமாக ஜெபியுங்கள் .
*உங்களை அனுதினமும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திற்குள்ளாக கழுவி ஒப்புக்கொடுங்கள்* .
தயவு செய்து இது பாவம் இல்லை என்று உங்கள் ஆத்துமாவை வஞ்சிக்க இடம் கொடுக்காதீர்கள்.
இந்த செய்தி உங்களுடன் பேசியிருந்தால் முதலில் பரலோக பிதாவுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியானவருக்கும் முழு மகிமையை செலுத்துங்கள்.
*மகிமை கர்த்தருக்கே*.
___________________________
Note : Forwarded message as I received..