பரம முன்னேற்பாடு

பரம முன்னேற்பாடு 

அற்ப விசுவாசிகளே ! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? (மத்.6:30). 

துணிமணிகள் மிகுந்த விலை உள்ளவையாய் இருக்கின்றன. மாற்று ஆடை எங்கிருந்தது வருமோ என்று அற்ப விசுவாசிகள் கவலைப்படுகிறார்கள். பாதரட்சைகளின் அடிப்பாகம் தேய்திருக்கிறது. புதுப் பாதரட்சைகளின் அடிப்பாகம் தேய்ந்திருக்கிறது. புதுப் பாதரட்சைகள் வாங்குவது எப்படி என்று கலங்குகிறோம். அக்கவலைக்கெல்லாம் முன்னேற்பாடாக நம் கர்த்தர்  அன்பாதரவுடன் என்ன செய்திருக்கிறார் என்று பாருங்கள். சாலோமோன் முதலாய் உடுத்திராதவிதமாகக் காட்டுப் புல்லை உடுத்துவித்துள்ளார். அப்படிப்பட்டவர் தம் சொந்த மக்களை உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? நிச்சயம் என்பதை நாம் அறிவோம். ஒருவேளை நம் ஆடைகளில் கிழிந்துள்ள பாகங்கள் தைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் நமக்கு ஆடைகள் எப்படியும் இருக்கும். 

ஏழை போதகர் ஒருவரின் உடமைகள் மிகவும் பழமையானவையாயும் கிழிந்ததும் இருந்தன. ஆனால் அவர் கர்த்தருடைய  ஊழியக்காரரானபடியால்  தமக்கான உடைகளை கர்த்தர்  அளிப்பார் என்று எதிர்பார்த்தார். இந்நூலின் ஆசிரியர் போதகரான நண்பர் ஒருவரைப் பார்க்கச் சென்று அவர் ஆலயத்தில் பிரசங்கம் செய்தார். பணம் சேர்த்து அந்தப் போதகருக்கு உதவவேண்டும் என்னும் எண்ணம் அவருக்கு வரவே ஏழைப் போதகருக்குப் புது உடைகள் கிடைத்தன. இவ்விதமாக கர்த்தருக்கென்று உழைத்தவர்களுக்குத் தேவையான உடைகளை கர்த்தர்  அளித்துள்ளதற்குப் பல எடுத்துக்காட்டுகளை நாம் அறிந்திருக்கிறோம். மனிதன் பாவஞ் செய்தபோது அவனுக்கு ஆடைகள் தேவைப்பட்டவிதமாக அவனைப் படைத்தவர், இரக்கமாக அவனுக்கு அவற்றை அளித்தார். நம் ஆதித் தாய் தந்தையர்க்கு கர்த்தர்  அளித்திருந்த ஆடைகள் மனுஷன்  தங்களுக்கென உண்டுபண்ணினவைகளைவிடச் சிறந்தவைகளாய் இருந்தன, தியாணிப்போம், ஜெபிப்போம்
ஆமென்.
🙏     JSR

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.