*ஐந்து வகை ஊழியங்கள்


எபேசியர் 4:12-13.

12. பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,


13. அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார்.

1) *அப்போஸ்தலர்*

ஒரு அப்போஸ்தலன் எப்பொழுது அத்தகைய விசுவாசப் பிரமாணத்தை உடையவனாயிருந்தான் என்று எனக்கு கூறுங்கள். அப்போஸ்தலருக்கென்று ஒரு விசுவாசப்பிரமாணம் உண்டாயிருக்குமானால் அது அப்போஸ்தலர் நடபடிகள் 2-ம் அதிகாரம் 38ம் வசனம் தான்.நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்தானம் பெற்றுக் கொள்ளுங்கள்.அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.இதுதான் அப்போஸ்தலர்களின் விசுவாசப்பிரமாணம்.அது வார்த்தையும் சத்தியமாயுமிருக்கிறது.பாவம் என்ற நோய்க்கு மருத்துவ சீட்டு அதுதான்.

2) *தீர்க்கதரிசி*

       தீர்க்கதரிசி என்ற பதத்திற்கு ஆங்கில மொழிப்பெயர்ப்பில் போதகர் என்று பொருள்படும்.பழைய ஏற்பாட்டின் *ஞானதிருஷ்டிக்காரன்* என்ற பதத்திற்கு,தேவனுடைய வார்த்தையை தன்னிடத்தில் வரப் பெற்றனாயிருந்து அதற்குரிய திவ்விய வெளிப்பாட்டையும், எதிர்நோக்கியுள்ள காரியங்களையும் முன் கூட்டியே அறிபவன் என்று பொருள்படும்.

*தீர்க்கதரிசிக்கு தேவனுடைய வார்த்தை உண்டாகிறது*

        தீர்க்கதரிசி ஒரு விசேஷித்த மனிதன்.தேவனுடைய வார்த்தை உண்டாகிறது.அவனுடைய உள்ளுணர்வும் முதலுணர்வும் ஒன்றுக்கொன்று மிக அருகாமையில் இருப்பதால்,அவன் சொப்பனம் காண உறக்கச் செல்வதில்லை.அவன் விழித்திருக்கும் போதே அதை காண்கிறான்.அது தேவன் தான் செய்ய வேண்டிய காரியமாகும்.என்ன நடக்கிறதென்று தீர்க்கதரிசி காண்கிறான்.

          ஒரு தீர்க்கதரிசி இனிமேல் நிகழப்போகிறவைகளை முன்கூட்டியே காண்கிறான்.அவன் *கர்த்தர் உரைக்கிறதாவது* !!!  நீங்கள் மனத்திரும்பாவிட்டால் தேவன் இந்த நகரத்தை அழித்து போடுவார் என்று கூற முடியும்.அவன் ஒரு கழுகு.அவன் வெகு தூரம்உயர பறக்கிறான்.அந்த உயரத்திலிருந்து அவன் பார்க்கும் போது தேவனுடைய கோபகலசம் ஊற்றப்படுவதை காண்கிறான்.அதைதான் தீர்க்கதரசி நோக்குகிறான்.அவன் இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் காண்பதில்லை.அவன் தூரத்தில் என்ன நடக்கிறது  என்று பார்க்கிறான்.

*ஒரு தீர்க்கதரிசியின் வருகை நியாயத்தீர்ப்பு சமீபமாயிருக்கிறது என்ற எச்சரிப்பின் அடையாமாய் இருக்கிறது*

தேசத்தில் ஒரு தீர்க்கதரிசி இருப்பாரேயானால் அப்பொழுது நியாயத்தீர்ப்பு தாக்க ஆயத்தமாயிருக்கிறது. அதன் பிறகு அடையாளங்களை செய்கிறார்.ஆகையால் அந்த அடையாளத்தை முன்னறிவிக்கிறார் என்பதையும் கவனியுங்கள்.அது நிறைவேறினால் அப்பொழுது செவிகொடுங்கள்.எண்ணாகமம் 12:6. அது நிறைவேறவில்லையென்றால் அதை மறந்துவிடுங்கள்.அது அவர் தருகின்ற ஒரு ஆவிக்குரிய பிரகாரமான அடையாளமாயிக்கக் வேண்டியதாயிருக்கிறது.

3) *சுவிசேஷகன்*

       சுவிசேஷகன் ஒரு விசேஷித்த மனிதன். அவன் தீப்பந்து போல் எரிந்து கொண்டிருப்பவர்.அவர் ஒரு நகரத்துக்குள்ளே பிரவேசித்து அவருடைய செய்தியைப் பிரசங்கித்து விட்டு.அங்கிருந்து புறப்பட்டு மற்றொரு இடத்துக்கு செல்கிறார்.

    இதோ இங்கே காளை,சிங்கம்,மனிதன், கழுகு ஆகியவை உள்ளன.அவைகள் இன்னும் இங்கே பூமியில் அவ்வாசல்களில் இருந்து கொண்டிருக்கவில்லையா? அவர்கள் தான் நான்கு சுவிசேஷங்களாகும்.அ வைகளில் ஒன்று மனிதனுடைய விவேகத்தோடும் இன்னொன்று கழுகின் வேகமாக செயல்படுகிற தன்மையோடும் போகின்றன. இன்னொன்று மேய்ப்பனாக இருக்கிறது.ஒன்று சுவிசேஷகனாயிருக்கிறது.ஒன்று சுவிசேஷகளைப் போல் பறந்து கொண்டேயிருக்கிறது.அவைகள் ஒவ்வொரு திசையிலும் காவல் செய்தனர்.

   அதாவது ஒரு காரியத்தை செய்ய வேண்டுமென்று உங்களுக்குத் தோன்றும் போது அதை செய்வது வேதப்பூர்வமானதா என்பதை கண்டுபிடியுங்கள்.உங்கள் ஸ்தானம்.நீங்கள் சுவிசேஷகர்:மேய்ப்பர்,போதகர்,தீர்க்கதரசி,தேவன் உங்களை எந்த ஸ்தானத்தில் இருக்க அழைத்திருக்காரோ அந்த ஸ்தானம் பாருங்கள்.அல்லது உங்களுக்கு அந்நிய பாஷைகள் பேசும்வரம்,பாஷைக்கு அர்த்தம் சொல்லும் வரம்,சபையில் உள்ள ஒன்பது ஆவிக்குரிய வரங்களில் ஏதாவது வரம்,சபைக்குள்ள நான்கு ஆவிக்குரிய உத்தியோகங்களில் ஏதாவதொரு ஸ்தானம் இருக்குமானால் முதலாவதாக தேவன் அழைத்தாரா என்பதை பாருங்கள்.

நீங்கள் ஒரு மனிதனை சலன புத்தியுள்ளவராயிருக்கக் கண்டு அவர் கர்த்தர் என்னை ஒரு மேய்ப்பனாக இருக்க அழைத்திருக்கிறார்.என்பாரானால்,மேய்ப்பன் சலன புத்தியுள்ளவராக இருக்க முடியாது.மேய்ப்பன் திடமானவர்,
நிலையுள்ளவர்.

       தேவன் என்னை போதகராக அழைத்திருக்கிறார்.அவர் வார்த்தையை எவ்விதம் வியாக்கியானம் செய்கிறார் என்பதை கவனியுங்கள்.அவர் எல்லாவற்றையும் குழப்புவாரானால் அப்பொழுது நீங்கள் அவர் உண்மையில் போதகர்தானா என்று சொல்லிவிடலாம்.

 *சுவிசேஷகர்கள் வயலில் தொடர்ந்து ஊழியம் செய்ய வேண்டுமா?*

     நிச்சயமாக எந்த விதத்திலும் அவர்கள் தொடர்ந்து ஊழியம் செய்ய வேண்டும்.ஒரு காரியத்தையும் மாற்ற வேண்டாம்.இந்த மணிவேலையில் இருப்பது போல ஜீவி.

இப்பொழுது குழப்பமாக்கி கொள்ள வேண்டாம்.அதைக் குறித்துதான் உங்களை முயற்சிக்கிறேன்.விசித்தரமாக இருக்க வேண்டாம்.எதையும் மாற்ற வேண்டாம்.ஆனால் நீங்கள்  எதாகிலும் தவறோ அல்லது தீமையோ செய்துக் கொண்டிருப்பீர்களால் மனந்திரும்புங்கள்.தேவனிடம் மனம் திரும்புங்கள்.நீங்கள் எப்பொழுதும் செய்தது போல சுவிசேஷ ஊழியத்தை தொடர்ந்து செய்யுங்கள்.

 4) *மேய்ப்பன்*

       *நீங்கள் உங்களுடைய மேய்ப்பனை (பாஸ்டரைவிட)விட மேலாக இருந்து விட முடியாது*

மறைவான மன்னா என்பது சிறப்பானதொன்றாகும்.அது முழு சபைக்கு உரியதாகும்.ஒரு விசேஷமான வெளிப்படுத்தலாயிருக்கிறது.ஏனெனில் மற்றவர்களுக்கு அவன் போதிக்க வேண்டியவனாய் இருக்கிறபடியால் அது அவனுக்கு கொடுக்கப்படுகிறது.மறைவான மன்னா என்பது மற்றவர்களுக்கு போதிக்கும்படி சபையின்தூதனுக்கு வேதத்தின் பேரில் ஏனையோரைக் காட்டிலும் சற்று கூடுதலான அறிவை தேவன் கொடுத்தலாகும்.அவன் அவ்வாறுதன் இருக்க வேண்டும் என எதிர்ப்பார்க்க படுகிறது.அதை நீங்கள் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.உங்களை போஷிப்பதற்காக தேவன் ஏற்படுத்தியுள்ள மேய்ப்பன் அவன்.

மிகவும் சூழ்ச்சியும் சாமர்த்தியமும் உள்ளவனாக சாத்தான் இருக்கிறான்.அதை தேவனுடைய வார்த்தையோடு சரிபார்த்து உங்களது மேய்ப்பனோடு அதைப்பற்றி கலந்தாலோசியுங்கள்.

*நீங்கள் உங்கள்  போதகரை நேசிக்க வேண்டும்*

    உங்களால் மனிதனுக்கு மரியாதை செலுத்த முடியாவிட்டால்,அவர் தேவனில் கொண்டுள்ள அவருடைய உத்தியோகத்துக்காவது அவருக்கு மரியாதை கொடுங்கள்.போதகர் வந்தால் அவரை மதியுங்கள்.சபையோர் போதகரை குறை கூறி ஏளனம் செய்து பேசுவதை நான் கண்டிருக்கிறேன்.நீங்கள் உங்கள் போதகரை நேசிக்க வேண்டும்.அவர் ஒரு மனிதரே,ஆனால் தேவன் அவரைப் போதகராக்கியிருக்கிறார். என்பதை நீங்கள் உணர வேண்டும்.பரிசுத்த ஆவியானவர் அவரை கண்காணிக்க நியமித்திருக்கிறார்.போதகர் என்ன செய்த போதிலும் அவர் தேவனுடைய ஊழியக்காரர் என்னும் முறையில் உங்கள் இருதயத்தில் அவருக்கு மதிப்பு கொடுத்தால் அதற்க்காக தேவன் உங்களை மதிப்பார்.
[05/11, 12:21 PM] ⚔Gideon⚔: 5) *போதகர்*

           போதகர் ஒரு விசேஷித்த மனிதன். அவர் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் கீழ் உட்கார்ந்து கொண்டு பரிசுத்த ஆவியின் உதவியினால் தேவனுடைய வார்த்தைகளை ஒன்று சேர்க்கிறார்.மேய்ப்பன் அல்லது சுவிசேஷகன் இவர்களில் ஒருவரும் கூட அவருடன் ஒப்பிட முடியாது.

          எபேசியர்கள் எவ்வாறு உலகத் தோற்றத்திற்கு முன்னே தேவனுடைய சுவீகார புத்திரராகும்படிக்கு முன் குறிக்கப்பட்டிருந்தனர் என்பதை பவுலால் அவர்களுக்கு அங்கே போதிக்க முடிந்தது என்பதை நாம் கவனிக்கிறோம்.
இப்பொழுது அவனால் கொரிந்தியர்களோ அதைக் குறித்து ஒன்றுமே அறிந்திருக்கவில்லை.அவர்கள் வெறுமனே அவர்கள் சிறு உள்ளுணர்வை அல்லது அதைப்போன்ற எதோ ஒன்றை சிறு உணர்ச்சிவசப்படுதலை உடையவர்களாயிருந்தனர்.அவர்கள் அதின்பேரிலே சார்ந்திருந்தனர்.எனவே அவனால் ஆழமான காரியங்களை அவர்களுக்குப் போதிக்க முடியும்.

   
           

*இயேசுவின் ஊழிய பாதையில்*

          ⚔கிதியோன்⚔

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.