கிறிஸ்தவம் மேற்க்கத்திய மார்க்கம் அல்ல*

யூர்களின் வருகை:*

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே இந்தியாவில் யூதர்கள் குடியேறினர் என வரலாறு சொல்கிறது. சாலமோன் ராஜா காலத்தில் இஸ்ரவேல் தேசத்தை விட்டு வந்த இந்த யூதர்கள் இந்திய மண்ணில் வசிக்க தொடங்கினர்.
அக்காலத்தில் கிரேக்கர்கள், ரோமர்களோடு சேர்த்து இந்த யூதர்களையும் 'யவனர்கள்' என இந்தியர்கள் அழைத்தனர். மத்திய கிழக்கு தேசங்கள் பலவற்றுடன் பாரதம் அன்றே வணிக உறவு கொண்டிருந்தது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. வணிகத்திற்காக வந்த இந்த யூதர்கள் பெரும்பாலும் கேரளாவில் வசித்து வந்தனர்.

*தோமாவின் (ஆசிய கண்டத்திலிருந்து - ஜெருசலேம்)  வருகை:*

பல கிறிஸ்தவ தேசங்களை சென்றைடையும் முன்பே, இயேசு கிறிஸ்துவின் நற்ச்செய்திகள் இந்தியாவை வந்து சேர்ந்தது. இயேசு உலகிற்கு செய்ய வேண்டிய தன் நற்தொண்டுகளை நிறைவேற்றிய பின்பு, பரலோகம்ச் சென்றார். கர்த்தர் பரலோகத்திற்கு சென்ற பிறகு, அவரது சீடர்கள் கர்த்தரின் நற்செய்தியை உலகிற்கு அறிவிக்கும் புனிதப்பணியில் ஈடுபட்டனர். அப்போது நிகழ்ந்த ஒரு சம்பவத்தை பற்றி "தோமாவின் திருப்பணிகள்" என்ற பழங்கால் நூல்
(கி.பி 300) இவ்வாறு கூறுகிறது.
ஒவ்வொருவரும் எப்பகுதிக்கு சென்று நற்செய்தி அறிவிக்க வேண்டும் என அவரது சீஷர்கள் தங்களுக்குள் சீட்டுப் போட்டனர். அப்போது இயேசுவின் பன்னிரு சீடர்களுள் ஒருவரான தோமாவின் பெயருக்கு இந்தியா விழுந்தது. ஆனால், இந்திய தேசம் தனக்கு எவ்விதத்திலும் ஒத்து வராது, தன்னால் இந்தியாவிற்கு நற்செய்தி அறிவிக்க செல்ல முடியாது என தோமா மறுத்தார். சீஷர்கள் எவ்வளவு வற்புறுத்தியும் தோமாவின் பிடிவாதம் மாறவில்லை.

இறுதியாக இயேசுவே அவருக்கு காட்சி அளித்து அவரை இந்திய மண்ணிற்கு புறப்பட்டு செல்லுமாறு கூறுகிறார். அதற்கும் தோமா, "ஆண்டவரே, நீர் அனுப்ப விரும்பும் வேறு எந்த தேசத்திற்கும் என்னை அனுப்பும், ஆனால் இந்தியாவிற்கு மட்டும் என்னை அனுப்ப வேண்டாம்" என வேண்டினார். எனவே, இந்தியாவிற்கு நற்செய்தி அறிவிக்கும் பணி தடைப்பட்டு போகிறது. ஆனால் கர்த்தர் தோமாவின் மனதை பண்படுத்த ஒரு சின்ன நாடகத்தை அரங்கேற்றுகிறார். ஒரு நாள், இந்திய வியாபாரி ஒருவன் மத்திய கிழக்கு பக்கம் வந்து, தனக்கென ஒரு தச்சனை விலைபேச சந்தைக்குள் நுழைந்தான். அங்கு தோமாவும் உலாவி வந்தார். அப்போது இந்திய வியாபாரி முன், மனித உருவில் காட்சியளிக்கிறார் இயேசு. இருவரும் பேரம் பேச தொடங்கினர். தனக்கு தெரிந்த நல்ல தச்சன் ஒருவன் உள்ளதாகவும், அவன் தனக்கு கீழ்ப்பட்டவன் என்றும் கூறிய இயேசு, தோமாவை காட்டினார். அதனை ஏற்ற இந்திய வியாபாரியும் சில வெள்ளிக் காசுகளைக் கொடுத்து இயேசுவிடம் இருந்து தோமாவை விலைக்கு வாங்கினான். விலைபேசி முடிந்த உடன், தோமாவை நோக்கி சென்ற வியாபாரி, அவரது எஜமானிடம் இருந்து அவரை விலைக்கு பெற்ற செய்தியை கூறினான். தன்னை விற்றுப்போட்ட அந்த நபர் யார் என நோக்க, வியாபாரி காட்டிய திசையை நோக்கி திரும்பினார் தோமா. அங்கு கர்த்தர் நின்று கொண்டிருந்தார். அவர் இயேசு தான் என அறிந்தவுடன் "ஆம், நான் அவருக்கு அடிமை தான்" என தோமா ஒப்புக் கொள்கிறார். உடனே அந்த வியாபாரியும் அவரை இந்தியாவிற்கு அழைத்து செல்ல கப்பல் ஏற்றினான். இவ்வாறு, தோமாவின் வருகை இந்தியாவிற்கு நிகழ்கிறது.

அதன் பின்பு, அவர் குனதோபாரசு என்ற இந்திய பார்த்திய அரசனிடம் கொண்டுவரப்பட்டார். அரசருக்கு ஒரு அரண்மையை கட்டும் பணி நடந்தது. அதற்கான தச்சு வேலைகள் தோமாவிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஆனால், அரண்மனை கட்ட மன்னர் அளித்த கொடைகளை எல்லாம் தோமா தான தர்மத்திற்கும், நற்பணிகளுக்கும் செலவிட, சினமுற்ற மன்னன் அவரை தண்டித்தார். இதன் பின்பும் அவரது நற்பணி தொடர்ந்தது, பல அற்புதங்களை நிகழ்த்தி தான் மெய்யான தேவனிடத்தில் இருந்து வந்த தூதுவன் என நிருபித்து காட்டினார், பல மக்களை அன்பை நோக்கி வழி நடத்தினார். பின்னர், தெற்கு பகுதியை நோக்கி நகர்ந்த தோமா தன் சுவிசேசத்தை அறிவிக்க தொடங்கினார். அப்போது தென் இந்தியாவை மஹாதேவன் என்ற அரசன் ஆண்டுவந்ததாக தோமாவின் திருப்பணிகள் கூறுகிறது.

கேரளாவில் அமைந்துள்ள முசிறி துறைமுகத்தில் தான் தோமா தரையிறங்கினார் என்று இந்த நாள் வரை அங்குள்ள மக்கள் நம்புகின்றனர். தென் பாரத மக்களிடத்தில் அன்பின் தெய்வமாம் இயேசுவை போதித்து வந்த தோமா ஏழு திருச்சபைகளையும் நிறுவினார். மலங்கரா, கொள்ளம், கொக்கமங்களம், சாயல், பாலையூர், பரவூர், நிறனம் ஆகிய ஊர்களில் இவர் நிறுவிய திருச்சபைகளாக சில தேவாலயங்கள் போற்றப்பட்டு வருகின்றன. பின்பு, குமரி வழியாக தமிழகத்தில் புகுந்த திருவடியார் தமிழ் மண்ணிலும் அன்பை போதித்தார். அக்கால அரச குடும்பத்தினர் சிலரை இயேசுவின் சீஷர்களாக்கிய குற்றத்திற்காக திருத்தூதர் தோமா கொல்லப்பட்டார். அவரது உடல் மயிலாப்பூரில் அடக்கம் செய்யப்பட்டது என அக்கால தென் இந்திய கிறிஸ்தவர்கள் நம்பினர்.

பின்னர், முதலாம் வாசுதேவரின் ஆட்சியின் போது, திருத்தூதரின் பெரும்பாலான படிமங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு எடிசா என்ற மத்திய கிழக்கு நகரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது என கூறப்படுகிறது. இவை எல்லாம் நெடுங்காலமாக தென் இந்திய கிறிஸ்தவ மக்களிடையே நிலவி வரும் நம்பிக்கைகள். சாந்தோம் தேவாலயம்
பாலையூர் தேவாலயம், கேரளம் தோமா நிறுவிய ஏழு சபைகளுள் ஒன்றாக நம்பப்படுகிறது. ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்பே இந்திய மண்ணில் கிறிஸ்தவம் வேறூன்றி இருந்தது என வரலாறு சொல்கிறது. இவர்கள் தோமாவழி கிறித்தவர்கள் என்று அழைக்கப்பட்டனர். தோமாவழி கிறிஸ்தவர்கள், இந்திய யூதர்கள் குறித்த இச்செய்திகள் எல்லாம் இந்திய மண்ணில் கிறிஸ்தவம் தோன்றிய வரலாற்றின் தொடக்கங்கள்.
இந்திய வேதங்களில் சில நம்பிக்கைகள்:
ஒரு சில கிறிஸ்தவ நம்பிக்கைகள் இந்திய வேதங்களில் காணப்படுகின்றன. (இந்த நூல்கள் பரிசுத்த ஆவியானவரின் தூண்டுதலால் எழுதப்பட்டதல்ல, இந்து வேதங்களில் கிறிஸ்தவ நம்பிக்கைகள் ஊடுருவி இருந்ததை அறியவே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

இயேசு கிறிஸ்து பற்றி அறிய பைபிளை மட்டும் பயன்படுத்துங்கள். ஏனென்றால் இந்து வேதங்களில் கிறிஸ்துவைப்பற்றி எழுதியுள்ளவைகள் பைளில் சொல்லப்பட்டவைகளே.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.