இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுசிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின. (2 கொரி 5:17)
ரமேஷ் சாகும் நிலையில் இருந்தான். இதயம் பலவீனம் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள்! யாருடைய இதயமாவது கிடைத்தால் பொருத்தலாம் என்றார்கள். ரமேஷின் பெற்றோர், "எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை! என சொல்ல ஆரம்பித்துவிட்டனர்! அவர்களது அதிர்ஷ்டம், மூளைச்சாவு அடைந்த சுரேஷின் இருதயம், இலவசமாகக் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவர் தெரிவித்தனர்! தொடர்ந்து பல செயல்பாடுகளின்மூலம், ரமேஷுக்கு சுரேஷின் இருதயம் பொருத்தப்பட்டது!
ரமேஷ் கண்விழிப்பதைப் பார்க்க, ரமேஷின் பெற்றோர் அவர்களோடு மருத்துவர் குழுவினரும் காத்திருந்தனர். திடீரென ஒரு வாகனத்தில் வந்த ஓர் குடும்பத்தினர், ரமேஷின் படுக்கை அருகே வந்து நின்று ரமேஷின் முகத்தையே உற்று நோக்கினர்! ரமேஷ் கண்விழிக்க, பெற்றோருக்கு எல்லையில்லா ஆனந்தம்! வந்த புது குடும்பத்தினருக்கோ கண்களில் கண்ணீர்! கடவுளே, எங்க புள்ளைக்கு மறுவாழ்வு கொடுத்திருக்கீங்க! நன்றி- அப்படின்னு மேலபார்த்து கையெடுத்தனர் ரமேஷின் பெற்றோர்! கடவுளே எங்க மகனைத் திரும்பக் கொடுத்தீங்க நன்றி-ன்னு மேலே பார்த்து கையெடுத்தது புதுக்குடும்பம்!
அவங்க யார்னு விசாரிச்சா, அப்போதான் தெரிஞ்சது.. அவங்க இறந்துபோன சுரேஷின் குடும்பமாம்! அவங்க சொன்னாங்க.. இனி ரமேஷ் எங்க பையனுங்க! - அப்படின்னு! ரமேஷின் பெற்றோர் சொன்னாங்க.. இல்லைங்க, ரமேஷ் நம்ம பையனுங்க.. அப்படின்னு! இதையெல்லாம் படுக்கையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த ரமேஷுக்கு புரிந்தது.. இனி நாம புது வாழ்க்கைய வாழப்போரோம்னு!
இதயம் சுரேஷோடது.. உடல் ரமேஷோடது.. வாழ்க்கை புதுசா இருக்கப்போகுது! - இப்படிப்பட்டதுதான் கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருத்தரின் வாழ்க்கையும்! பாவத்தில் சாகக்கிடந்த நமக்கு, கிறிஸ்துவின் தியாக மரணம், புதுவாழ்வு தந்தது. இனி வாழ்வது நாமல்ல.. இயேசுவே நம்மில் வாழ்கிறார்!
சரீரத்தின் மையமாகிய இதயம் இயேசுவாக இருந்தால், சரீரம் முழுவதும் அவரது கட்டுப்பாட்டுக்குள் வந்து, சிந்தனைகள் மாறி, புதுசா ஒரு வாழ்க்கை வாழ்வோமே, எல்லோரும் நம்மைப் பார்த்து, உங்கிட்ட ஏதோ மாற்றம் நடந்திருக்குன்னு கண்டுபிடிச்சு சொல்வாங்களே.. அதாங்க புது சிருஷ்டி! அதுக்கப்புறம், நாம ஆண்டவரின் பிள்ளைகள்! புது சிருஷ்டின்னா, சும்மா கிறிஸ்தவனா மாறுவது இல்லை! பரிசுத்தமா.. கிறிஸ்துவாகவே புதுசா வாழறது! ஆமென்!
