201
நீ நண்பனாக ஆக்கப்படும்போது,
அதைப் பற்றி ஞாபகத்தில் வைத்திரு.
நீ நண்பர்களைச் சேர்க்கும்போது,
அதை மறந்து விடு.
***
202
மிகவும் சிறியதற்கும்
மிகவும் பெரியதற்கும்
இடையில் இருக்கும்
ஸ்டேஷனுக்குப் பெயர்தான் -
சந்தோஷம்!
***
203
ஒரு தடவை
பேசுவதற்கு முன்னால்
இரண்டு தடவைகள் கேள்.
***
204
ஒரு வீடு இல்லாத
ஒரு மனிதன்
ஒரு கூடு இல்லாத
பறவையைப் போன்றவன்.
***
205
ஒரு செயல் நம்பிக்கையுடன்
செய்யப்படவில்லையென்றால்,
இதயம் நொறுங்கி விடும்.
***
206
சந்தோஷமற்று இருப்பவர்களிடம்,
நேரம் எவ்வளவு மெதுவாக
நகர்ந்து கொண்டிருக்கிறது!
***
207
தன்னால் அவன்
காயம்பட்டுக் கொள்ளலாமே தவிர,
அவனால் காயம்பட்டவர்கள்
யாரும் இல்லை.
***
208
எந்த இதயம்
பெருந்தன்மை கொண்டதாகவும்
அன்பு மயமானதாகவும் இருக்கிறதோ,
அது பெரும்பாலும் கடவுளை ஒத்தது.
***
209
தாவி குதிப்பதற்கு முன்னால்,
கூர்ந்து பார்.
***
210
ஏதாவது பயனுள்ள
ஒன்றைச் செய்வதற்காக
கிடைக்கும் நேரத்திற்குப்
பெயர்தான் ஓய்வு.
***
211
இன்று என்னை
நன்றாக வாழ விடுங்கள்.
நாளை என்ன என்று
யாருக்குமே தெரியாது.
***
212
மனிதனின்
மிகப் பெரிய எதிரியே
மனிதன்தான்.
***
213
பிறருக்கு எதிராக இருக்கும்
நம் மனங்களைத் துடைத்து,
பிரகாசமாக வைத்துக் கொள்வது
நல்லது.
***
214
தனக்கு நினைவுச் சின்னம் என்ற
ஒன்று தேவையே இல்லை
என்று யார் நினைக்கிறார்களோ,
அவர்கள்தான் அதற்குத் தகுதியானவர்கள்.
***
215
அதிர்ஷ்டமற்ற தன்மையைத்
தாங்கிக் கொள்ளும் சக்தி
யாருக்கு இல்லாமலிருக்கிறதோ,
அவர்கள் நல்ல அதிர்ஷ்டத்தை
ஏற்றுக் கொள்வதற்கும்
தகுதி இல்லாதவர்களே.
***
216
எல்லா மனிதர்களிடமும்
மிகவும் சுதந்திரத் தன்மையுடன்
இருக்கக் கூடிய மனம் எதுவோ,
அதுதான் புனிதத் தன்மை
கொண்ட மனம்.
***
217
குழந்தைகள்
இருப்பதால் மட்டுமே,
நல்ல அன்னைமார்கள்
உண்டாகி விட முடியாது.
***
218
ஒரு நோய்வாய்ப்பட்ட
மனிதனுக்கு பொறுமைதான்
மிகச் சிறந்த மருந்து.
***
219
எவன் தன்னுடைய நாட்டை
மிகச் சிறந்த நாடாக
ஆக்க வேண்டும்
என்று முயற்சிக்கின்றானோ,
அவன்தான் தன் நாட்டின் மீது
அதிகமான அன்பு வைத்திருப்பவன்.
***
220
தன்னுடைய கருத்தை
எந்தச் சமயத்திலும்
மாற்றிக் கொள்ளாமல் இருப்பவன்,
தேங்கிக் கிடக்கும் நீருக்கு ஒப்பானவன்.
மனதின் தவளைகள்
அதில் பெருகிக் கொண்டிருக்கும்.
***
221
எந்தவொரு மனிதன்
வீட்டில் விருந்தாளிகளை
வரவேற்காமல் இருக்கிறானோ,
அவன் வெளியே
மிகவும் குறைந்த அளவிலேயே
உபசரிக்கப்பவர்களைச் சந்திப்பான்.
***
222
ஒரு ஆசிரியர்
எல்லையைத் தாண்டி
பாதிப்பை உண்டாக்கிக்
கொண்டிருப்பார்.
தன்னுடைய ஆதிக்கம்
எங்கு நிற்கும் என்று
அவர் எந்தச் சமயத்திலும்
கூற மாட்டார்.
***
223
ஒரு பாதுகாப்பான
இடத்தில் இருந்து கொண்டு
ஒரு மனிதன்
மிகவும் எளிதாக அறிவுரை
கூற முடியும்.
***
224
என் தாத்தா யார்
என்று எனக்குத் தெரியாது.
ஆனால், அவருடைய பேரனாக
வரப் போவது யார்
என்பதைத் தெரிந்து கொள்வதில்
நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன்.
***
225
ஒவ்வொரு வருடமும்
அறுவடை என்ற ஒன்று வந்தாலும்,
அது ஒவ்வொரு நாளும் வராது.
***
226
தானியம் எப்போது
முழு விளைச்சலுக்கு
வந்து விட்டதோ,
அப்போது அறுப்பதற்கான
நேரம் வந்து விட்டது.
***
227
உண்மையான அப்பாவித்தனம்
எதைப் பற்றியும் வெட்கப் படாது.
***
228
தங்களுடைய விஷயங்களை விட
மற்றவர்களின் விஷயங்களில்
மனிதர்கள் மிகச் சிறப்பாக
தீர்ப்பு கூறுகிறார்கள்.
***
229
சிந்தனையே இல்லாமல் கற்பது,
உழைப்பை வீண் செய்வதைப் போன்றது.
கற்காமலே சிந்தித்துக் கொண்டிருப்பது
மிகவும் ஆபத்தானது.
***
230
கடவுள் சொர்க்கத்திலிருந்து
சூரியனை நீக்கி விட்டாலும்,
அப்போதும் நாம் கட்டாயம்
பொறுமையுடன் இருக்க வேண்டும்.
***
231
மனிதர்கள் உறங்கிக்
கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் இறக்கும்போது,
கண் விழிக்கிறார்கள்.
***
232
மூடப்பட்டிருக்கும் ஒரு நூல்,
ஒரு மரக் கட்டையைப் போன்றது.
***
233
புரிந்து கொள்ளாமலே
படிப்பதில் என்ன
பிரயோஜனம் இருக்கிறது?
***
234
நீ கடவுளுக்கும்
சாத்தானுக்கும்
சேவை செய்ய முடியாது.
***
235
திருமண வாழ்க்கையை
ஆழமானதாக ஆக்குவதே
அன்புதான்.
***
236
காலை வேளையில் மலைக்கு.
மாலைப் பொழுதில் நீர் ஊற்றுக்கு.
***
237
ஒரு அன்னையை
வாழ்வுடன் பிணைக்கச்
செய்து கொண்டிருப்பவர்களே
பிள்ளைகள்தான்.
***
238
ஒரு பெயரில் என்ன இருக்கிறது?
ஒரு ரோஜாவை
என்ன பெயர் கூறி அழைத்தாலும்,
அது இனிய நறுமணத்தைக்
கொண்டதாகவே இருக்கும்.
***
239
யார் அன்பு செலுத்துகிறார்களோ,
அவர்கள் சொர்க்கத்திலிருந்து
ஒரு எட்டு வைக்கும்
தூரத்தில் இருக்கிறார்கள்.
***
240
நீங்கள் நேராக
நின்று கொண்டிருக்கும் பட்சம்,
உங்களுடைய நிழல்
குறைபாடுகளுடன் இருந்தால்,
நீங்கள் அதற்காக கவலைப்படாதீர்கள்.
***
241
எல்லோரும்
எந்த மனிதனை
இரண்டாவது இடத்திற்குப்
போகும்படி செய்கிறார்களோ,
அவன் சந்தேகமே இல்லாமல்
முதல் இடத்திற்கு
செல்லக் கூடிய தகுதி உடையவனாக
இருக்கிறான்.
***
242
பொன், நெருப்பால்
முயற்சி செய்யப்படுகிறது.
தைரியமான
மனிதர்கள் சண்டையால்
தீர்மானிக்கப்படுகிறார்கள்.
***
243
நீங்கள் ஏழையாக இருந்தால்,
உங்களின் நல்ல குணங்களைக்
கொண்டு நீங்கள் யார் என்பதை
காட்டுங்கள்.
பணக்காரனாக இருந்தால்,
உங்களுடைய நல்ல செயல்களின்
மூலம் யார் என்பதை காட்டுங்கள்.
***
244
ஒரு மென்மையான பதில்,
கோபத்தை இருக்கும்
இடமே தெரியாமல் விரட்டி விடும்.
***
245
உயரமான கட்டிடங்களில்
இருக்கும் மேல் மாடி
பெரும்பாலும் காலியாகத்தான்
இருக்கும்.
***
246
என்னுடைய
கவுரவத்திற்கு
காவலனாக
இருப்பவன் நானே.
***
247
உங்களுடைய வீட்டை
என்றைக்கு நீங்கள் சுத்தம்
செய்யாமல் இருக்கிறீர்களோ,
அன்று எதிர்பாராத விருந்தாளிகள்
வருவார்கள்.
***
248
உண்மையான பிரச்னைகளை
சீர் செய்து விட முடியும்.
கற்பனையான
பிரச்னைகளைத் தான் வெற்றி
கொள்ள முடியாது.
***
249
இரண்டு நண்பர்களுக்கு இடையே
நீதிபதியாக இருப்பவன்,
அவர்களில் ஒருவனை
இழந்து விடுவான்.
***
250
இளமையில் அறிவாக இருப்பது,
வயதான காலத்தில்
அனுபவமாக ஆகிறது.
***
