பொன்மொழிகள் 4



151

தெய்வீக முரண்பாடுகளின்

ஆச்சரியச் சின்னமே பெண்.

***


152

எறும்பை விட

சிறப்பாக நீதி போதனை செய்ய

யாராலும் முடியாது.

அது எதுவுமே கூறுவதில்லை.

***

153

சோம்பேறித்தனமான மனிதனுக்கு

மிகவும் குறைந்த அளவிலேயே

ஓய்வு கிடைக்கும்.

***

154

இரவு வேளைகளில்

தொடர்ந்து கண்ணீர்

வந்து கொண்டிருக்கலாம்.

ஆனால், காலையில்

சந்தோஷம் வந்து விடும்.

 ***

155

ஏராளமான பேர்

தங்களின் ஞாபக சக்தியைப் பற்றி

குறைப்பட்டுக் கொள்வார்கள்.

ஆனால், மிகச் சிலரே

தங்களின் தீர்மானமெடுக்கும்

சக்தியைப்ப் பற்றி குறைப்படுவார்கள்.

***

156

நல்லது என்பது

ஒரே ஒரு விஷயம்தான்.

அது- அறிவு.

கெட்டது என்பது

ஒரே ஒரு விஷயம்தான்.

அது - அறியாமை.

***

157

தவறே செய்யாமல்

எந்த மனிதன் இருக்கிறானோ,

அவனுக்கு சட்டம் என்பதே

தேவையில்லை.

***

158

ஏமாற்றுவதை விட,

ஏமாற்றப்படுவது

எவ்வளவோ மேலானது.

***

159

பின்னோக்கி பார்த்துத்தான்

வாழ்வைப் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால், அது முன்னோக்கி

வாழப்பட வேண்டும்.

***

160

திறமை வாய்ந்த சோம்பேறிகளின்

எண்ணிக்கையை

இயந்திரங்கள் பெரிய அளவில்

அதிகரித்திருக்கிறது.

***

161

தைரியம் ஒரு மனிதனை

சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும்

அழைத்துக் கொண்டு செல்கிறது.

***

162

உருண்டு கொண்டிருக்கும்

ஒரு கல் தன்னுடன்

எதையுமே சேகரித்துக்

கொண்டு செல்லாது.

***

163

உன் பர்ஸ் முழுக்க

ணத்தை வைத்திருப்பதை விட,

ஏராளமான நூல்களை

படிக்க முயற்சி செய்.

***

164

தேவை என்ற ஒன்று சிறிதளவு

தைரியத்தையாவது தரும்.

***

165

புதியன என்று எதுவுமே இல்லை.

எல்லாமே மறக்கப்பட்டவைதான்.

***

166

சொர்க்கம் மழை பெய்ய வேண்டும்

என்று விரும்பினாலோ,

உன் அன்னை இன்னொரு திருமணம்

செய்து கொள்ள வேண்டும்

என்று ஆசைப் பட்டாளோ,

அதைத் தடுக்க எதனாலும் முடியாது.

***

167

அனைத்து மானிட அறிவையும்

இரண்டே சொற்களில்

அடக்கி விடலாம் :

காத்திருத்தல்,

நம்பிக்கையுடன் இருத்தல்.

***

168

பொன் ஆட்சி செய்யாத காலம்

எதுவோ, அதுதான்

பொற்கால ஆட்சி.

***

169

செய்யக் கூடாது என்று

நினைக்கும் செயலை,

செய்யாமல் இரு.

உண்மை அல்லஎன்று நினைப்பதை,

கூறாமல் இரு.

***

170

புனிதத் தன்மை இல்லாத இடத்தில்,

சந்தோஷம் இருக்காது.

***

171

எந்த மனிதன் தன்னுடைய

நேர்மைத் தன்மையை இழக்கிறானோ,

அவன் இழப்பதற்கு எதுவுமே இல்லை.

***

172

இதயம்

நெருப்பிற்குள் இருக்கும்போது,

வாய்க்குள்ளிருந்து கொஞ்சம்

நெருப்புப் பொறிகள்

வெளியே வரத்தான் செய்யும்.

***

173

வாழ்வு என்ற ஒன்று

எவ்வளவு நாட்கள் இருக்கிறதோ,

அவ்வளவு நாட்கள்

நம்பிக்கை என்ற ஒன்றும்

இருக்கும்.

***

174

ஒரு ஆரோக்கியமான உடல்,

ஆன்மா தங்கக் கூடிய

விருந்தினரின் மாளிகையாக இருக்கிறது.

நோய் பாதித்த உடல்,

சிறைச் சாலையாக இருக்கிறது.

***

175

ஒவ்வொரு இதயத்திற்கும்

அதற்கென்று இருக்கக் கூடிய

வேதனை இருக்கத்தான்

செய்கிறது.

***

176

மிகவும் உயரமாக

இருக்கும் மரத்திற்குத்தான்

மிகப் பெரிய வீழ்ச்சி இருக்கும்.

***

177

எல்லா திருமண கேக்குகளிலும்,

நம்பிக்கைதான்

இனிப்பு நிறைந்த கனியாக இருக்கிறது.

***

ஒரு சோம்பேறி மனிதன்

சாத்தானின் விளையாட்டு

நண்பனாக இருக்கிறான்.

***

178

அறிவாளி மனிதர்கள்

திட்டங்களுடன் இருப்பார்கள்.

நம்மில் பெரும்பாலோர்

அவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்போம்.

***

179

ஒரு நண்பனை இழப்பதை விட,

ஒரு நகைச்சுவையை இழக்கலாம்.

***

180

கருணை என்ற

சூரியயோதயத்தில்தான்,

நல்ல குணங்கள் வளர்கின்றன்.

***

181

வராமல் இருப்பதை விட,

தாமதமாக வந்தது நல்லதுதான்.

ஆனால், எந்தச் சமயத்திலும்

தாமதமாக வராமல் இருப்பது நல்லது.

***

182

உழக் கூடிய கோவேறு கழுதையைப்

பற்றி தெரிந்து கொள்.

நெய்யக் கூடிய புழுவைப் பற்றி

தெரிந்து கொள்.

***

183

அரை உண்மையாக இருப்பது

பெரும்பாலும்

ஒரு பெரிய பொய்யாகத்தான்

இருக்கும்.

***

184

ஒவ்வொரு மனிதனின்

வாழ்க்கையுமே கடவுளின்

விரலால் எழுதப்பட்ட

குழந்தைகள் கதைதான்.

***

185

நெஞ்சில் அன்பு

வைத்திருப்பவன் எவனோ,

அவன் தன் இரண்டு பக்கங்களிலும்

சிறகுகளை வைத்திருக்கிறான்.

***

186

ஆண் வேலை செய்யலாம்,

சிந்திக்கலாம்.

ஆனால், பெண்ணால்தான்

உணர முடியும்.

***

187

நல்ல பெண்கள்

நிறைந்த சமுதாயம்,

நல்ல பழக்க வழக்கங்களுக்கான

அடிப்படையாக இருக்கிறது.

***

188

செயல்படும்போது கசப்பாக இருப்பது,

நினைத்துப் பார்க்கும்போது

இனிப்பானதாக இருக்கலாம்.

***

189

மனங்கள் இல்லாத சரீரங்களை

கடை வீதியில் இருக்கும்

சிலைகளுடன் ஒப்பிடலாம்.

***

190

பணத்தின் மீது

கொண்டிருக்கும் ஈடுபாடுதான்

எல்லா பாவங்களுக்கும்

மூல காரணமாக இருக்கிறது.

***

191

நான் ஏன் ஒரு சிலையை வைத்திருக்கிறேன்

என்று கேட்கும் மனிதர்களை விட,

நான் ஏன் ஒரு சிலையை வைக்காமல் இருக்கிறேன்

என்று கேட்கும் மனிதர்களைத்தான் சந்திக்கிறேன்.

***

192

அவர்களின் தாய் எப்படி உருவாக்குகிறார்களோ,

அப்படி உருவாகுபவர்கள்தான் மனிதர்கள்.

***

193

நீ உன் மீது எந்த அளவிற்கு

அன்பு வைத்திருக்கிறாயோ,

அந்த அளவிற்கு உன் பக்கத்து

வீட்டுக்காரர்களிடமும் அன்பு செலுத்து.

***

194

வாழ்வு மிகவும் சிறியது.

நம்முடன் இருண்ட பயணத்தில்

பயணம் செய்து வருபவர்களின்

இதயங்களில் சந்தோஷங்களை

உண்டாக்க நமக்கு பெரும்பாலும்

நேரமே கிடைப்பதில்லை.

வேகமாக அன்பு செலுத்த ஆரம்பியுங்கள்!

சீக்கிரம் பரிவுடன் இருங்கள்!

***

195

நமக்கு தெரிந்த எல்லா உலகங்களிலும்

எது மிகவும் சிறந்ததாக இருக்கின்றதோ,

அதைத்தான் எல்லோருமே விரும்புகிறார்கள்.

***

196

நம்மைப் பற்றி நல்ல வகையில்

மனிதர்களைப் பேசச் செய்வதற்கான

ஒரே வழி - நல்ல செயல்களைச்

செய்வதுதான்.

***

197

முதலில் உதவி என்று

வந்து நிற்கும்நிலைமை

பின்னர் ஆட்சி செய்வது என்று

மாறி விடும்.

***

198

ஒரு மனிதன் எந்த அளவிற்கு

நல்ல குணங்களுடன் இருக்கிறானோ,

அந்த அளவிற்கு மிகவும் குறைவாகவே

அவன் பிற மனிதர்களை

மோசமானவர்கள் என்று சந்தேகப் படுவான்.

***

199

ஒவ்வொரு அரசனும் அடிமைகளின்

வம்சத்திலிருந்துதான் உருவாகிறான்.

அதேபோல ஒவ்வொரு அடிமையும்

தங்களின் முன்னோர்களிடம்

அரசர்களைக் கொண்டிருக்கிறான்.

***

200

ஒரு மிகச் சிறந்த ஒவியன்

ஒரு மிகச் சிறந்த ஓவியத்தை

மிகவும் சிறிய க்யான்வாஸில்

வரைந்து விடுவான்.

***

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.