வரலாற்று புத்தகங்களுக்கு ஒரு முன்னுரை
யோசுவா முதல் எஸ்தர் வரை
யோசுவா முதல் எஸ்தர் வரை
1. எபிரேய சபைக் கட்டளைகள்: (8 புத்தகங்கள்)
அ) முந்தின தீர்க்கதரிசிகள்:
யோசுவா, நியாயாதிபதிகள், சாமுவேல், இராஜாக்கள் (4 புத்தகங்கள்)
ஆ) எழுத்துப் படைப்புகள்:
நாளாகமம், எஸ்றா, நெகேமியா, ரூத், எஸ்தர் (4 புத்தகங்கள்)
கிரேக்கக் கட்டளைகள்: 12 புத்தகங்கள் (யோசுவா முதல் எஸ்தர் வரை)
2. எழுத்துப் படைப்பின் காலம்:
அ) யோசுவா முதல் 2இராஜாக்கள் வரை - ஏறக்குறைய கி.மு.561.
ஆ) நாளாகமம் - ஏறக்குறைய கி.மு.450.
3. வரலாற்றுக் கால அளவு:
அ) யோசுவா முதல் 2இராஜாக்கள் வரை: கானானுக்குள் நுழைந்தது முதல் பாபிலோனிய சிறையிலிருந்து ராஜாவாகிய யோயாக்கீனின் விடுதலை வரை - கி.மு.1400, 1200 - 561.
மொத்தம்: 650 - 850 வருடங்கள்.
ஆ) நாளாகமம்: சவுல் ராஜாவின் மரணம் முதல் எஸ்றா மற்றும் நெகேமியாவின் ஊழியம் வரை (கி.மு.1011 - 450)
மொத்தம்: 550 வருடங்கள்.
4. கருப்பொருட்கள்:
அ) தீர்க்கதரிசன வரலாறு
ஆ) ராஜத்துவம்
இ) ஆசாரிய வரலாறு: ஆலயம் மற்றும் ஆராதனை
ஈ) மனிதனின் பங்கு
6. யோசுவா
அ) பின்னணி:ஆசிரியர்: பெயர் தெரியவில்லை. யோசுவா அல்லது சாமுவேல் எனக் கருதப்படுகிறது.
காலம்: ஏறக்குறைய கி.மு.1440 அல்லது கி.மு.1250
மூலாதாரம்: யாசேரின் புத்தகம் (யோசுவா: 10:13).
எந்நிலையில் எழுதப்பட்டது: நியாயாதிபதிகளின் காலத்தில் (ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய பார்வைக்கு சரியாகத் தோன்றினவைகளைச் செய்த ஒரு காலம்) அப்போதிருந்த இஸ்ரவேலர்கள், தேவனுடைய நியாயப் பிரமாணத்திற்குக் கீழ்ப்படியும்படி தங்களை அறிவுறுத்தும் “சாட்சியின் கல்லைச்” சுமந்து கொண்டு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தைத் தாங்கள் மேற்கொண்டதை நினைவுபடுத்திக் கொள்வதன் தேவை. (யோசுவா: 4:19-24; 24:26,27).
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: “யோசுவா”
எபிரேயு: யெகோசுவா (Yehoshua) “யேகோவா இரட்சிப்பானவர்”
கிரேக்கு: “யேசஸ்” (Yesus) “இரட்சிப்பு” , “விடுவிப்பவர்”
கருப்பொருள்: தேவனுடைய மக்கள் கர்த்தருக்குள் கீழ்ப்படியும்போது, தங்களுடைய சுதந்திரத்தைச் சுதந்தரிப்பதில் பெற்றிருக்கும் பெரிய வல்லமை.
நோக்கம்: தேவனுடைய மக்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை யோசுவாவின் காலத்தில் பெற்றுக் கொண்டதையும், அதன் பின்பு, ஆபிரகாமிற்கு அளிக்கப்பட்ட தேவ வாக்குத்தத்தின் நிறைவேறுதலாக ஒவ்வொரு கோத்திரத்திற்கும் அத்தேசம் பிரித்தளிக்கப்பட்டதையும் எடுத்துரைப்பது.
முக்கிய வசனம்: யோசுவா: 21:43,45 - “இந்தப் பிரகாரமாகக் கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கொடுப்பேன் என்று அவா்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தையெல்லாம் கொடுத்தார்; அவர்கள் அவைகளை சுதந்தரித்துக் கொண்டு , அவைகளிலே குடியிருந்தார்கள்... கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தார்க்குச் சொல்லியிருந்த நல் வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப் போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று.”
7. நியாயாதிபதிகள்
அ) பின்னணி:ஆசிரியர்: தெரியவில்லை. சாமுவேல் எனக் கருதப்படுகிறது.
காலம்: ஏறக்குறைய 1000 கி.மு.
(நாம் பெற்றிருக்கும் இப்புத்தகத்தின் இறுதியான படிவம், பிற்பாடு கி.மு.721 - ல் இறுதியாக வடிவமைக்கப்பட்டது. (நியாயாதிபதிகள்: 18:30).
மூலாதாரம்: வீரகாவியங்களும், பாடல்களும்
எந்நிலையில் எழுதப்பட்டது:
யோசுவாவிற்கும் சாமுவேலிற்கும் இடையே இருந்த குழப்பமான கொள்கைகள், இஸ்ரவேல் தேசத்திற்கு உறுதியை அளிக்கக்கூடிய ஒரு முடியாட்சியின் தேவையைப் பிரதிபலித்தன.
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: “நியாயாதிபதிகள்”
எபிரேயு: “சோபெடிம்” (Shopetim) “நியாயாதிபதிகள்” “ஆட்சித்தலைவர்கள்”
கிரேக்கு: “கிரிடாய்” (Kritai) “நியாயாதிபதிகள்”
கருப்பொருள்:
இஸ்ரவேல் மக்கள் தேவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளத் தவறியபடியால், நியாயமற்ற பழி மற்றும் விடுதலையின் சுழற்சியில் அவர்கள் அகப்பட்டார்கள்.
நோக்கம்:
இஸ்ரவேலின் தேவனுடைய உடன்படிக்கை - ஆளுகையின் முழுமையையும், பரிசுத்தத்தையும் பாதுகாப்பதற்காக, மையத்தில் தலைமுறை வழியான அரசாட்சி தேவையென்பதை எடுத்துக்காட்டுதல்.
முக்கியவசனம்:
நியாயாதிபதிகள்: 2:16,17 - “கர்த்தர் நியாயாதிபதிகளை எழும்பப் பண்ணினார்; அவர்கள் கொள்ளையிடுகிறவர்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார்கள். அவர்கள் தங்கள் நியாயாதிபதிகளின் சொல்லைக் கேளாமல் அந்நிய தேவர்களை பின்பற்றிச் சோரம்போய், அவைகளைப் பணிந்து கொண்டார்கள்...”
8. ரூத்
அ) பின்னணி:ஆசிரியர்: பெயர் தெரியவில்லை. சாமுவேல் எனக் கருதப்படுகிறது.
காலம்: ஒருவேளை ஏறக்குறைய கி.மு.1000 (ரூத்: 4:7)
மூலாதாரம்: அறியப்படவில்லை
எந்நிலையில் எழுதப்பட்டது:
தாவீது ராஜாவின் வம்ச வழியைக் காட்டி தேவனுடைய அன்பு யூத எல்லைகளுக்கு அப்பாற்பட்டது என்பதை எடுத்துக் காட்டுவது.
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: “ரூத்”
எபிரேயு: “ரூட்” (Rut) “ரூத்”, “தோழி”
கிரேக்கு: “ரோட்” (Rout) “ரூத்”
கருப்பொருள்: ஒரு புற ஜாதியானுக்கு மீட்பு
நோக்கம்:
ஒரு விதவையான புறஜாதிப் பெண்ணிடம் இன சகிப்புத்தன்மையுயைம், இரக்கத்தையும் காண்பிப்பதன் மூலம், தாவீது ராஜாவிற்கு ஒரு குடும்ப மரபுக் கிளை வழியை அளித்தல்.
முக்கிய வசனம்:
ரூத்: 1:16 - “நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மை விட்டுத் திரும்பிப் போவதைக் குறித்து, என்னோடே பேச வேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்மடைய தேவன் என்னுடைய தேவன்.”
9. “1சாமுவேல், 2சாமுவேல்”
அ) பின்னணி:ஆசிரியர்: பெயர் அறியப்படாதவர். சாமுவேல் எனக் கருதப்படுகிறது.
(எபிரேய பழைய ஏற்பாட்டில் 1சாமுவேல் மற்றும் 2சாமுவேல் ஆகிய இவ்விரண்டு புத்தகங்களும் ஒரே புத்தகமாக உள்ளது)
காலம்: கி.மு.930 மற்றும் கி.மு.722 க்கும் இடைப்பட்ட காலம்
மூலாதாரம்: சாமுவேல், நாத்தான் மற்றும் காத்தின் நடபடிகள் (1நாளாகமம்: 29:29).
குறிப்பிடப்பட்டுள்ள காலம்: ஏறக்குறைய கி.மு.1100 - 1000
(நியாயாதிபதிகளின் முடிவிலிருந்து, தாவீதினுடைய ஆட்சியின் உச்ச நிலை வரை)
எந்நிலையில் எழுதப்பட்டது:
நியாயாதிபதிகளின் ஒரு பெலவீனமான ஆட்சிக்குப் பதிலாக, சாமுவேல், சவுல் மற்றும் தாவீது ஆகியோரின் காலத்தில் ஒரு பலமான முடியாட்சி இடம் பெற்றதைக் கருத்தில் கொள்ள வேண்டிய தேவை.
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: “சாமுவேல்”
எபிரேயு: “செமுயேல்” (Shemuel) “தேவன் செவி கொடுத்தார்”
கிரேக்கு: “பேசிலியோன் A.B” (Basileion A.B) “ராஜயம் 1,2”
கருப்பொருள்:
1சாமுவேல்: தீர்க்கதரிசியாகிய சாமுவேலும், சவுல் ராஜாவின் உயர்வும், வீழ்ச்சியும்.
2சாமுவேல்: தேவனால் ராஜாவாக தெரிந்து கொள்ளப்பட்ட தாவீது - ராஜாவின் குறிப்பிடத்தக்க ஆட்சி
நோக்கம்:
1சாமுவேல்: இஸ்ரவேலின் ஒரு இறையாட்சி (தேவன் நியாயாதிபதிகளின் மூலமாக ஆட்சி செய்தல்), ராஜாவாகிய சவுலின் கீழ் ஒரு முடியாட்சியாக (மனிதனின் ஆட்சி) மாற்றமடைந்ததை எடுத்துக் காட்டுதல்.
2சாமுவேல்: தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ராஜாவாகிய தாவீதின் கீழ், முடியாட்சி நிலை நிறுத்தப்பட்டதை எடுத்துக் காட்டுதல்.
முக்கிய வசனம்:
1சாமுவேல்: 8:7; 12:14 - “... அவர்கள் உன்னைத் தள்ளவில்லை; நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள்... நீங்களும் உங்களை ஆளுகிற ராஜாவும் உங்கள் தேவனாகிய கர்த்தரை பின்பற்றுகிறவர்களாயிருப்பீர்கள்”
2சாமுவேல்: 7:8,16 - “... நீ இஸ்ரவேல் என்கிற என் ஜனங்களுக்கு அதிபதியாயிருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை நான் ஆட்டு மந்தையை விட்டு எடுத்தேன்... உன் வீடும், உன் ராஜ்யமும், என்றென்றைக்கும் உனக்கு முன்பாக ஸ்திரப்படடிருக்கும்; உன் ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும்”.
11. “1இராஜாக்கள்” மற்றும் 12. “2இராஜாக்கள்”
அ) பின்னணி:
ஆசிரியர்: பெயர் தெரியவில்லை. எரேமியா எனக் கருதப்படுகிறது.
(எபிரேய பழைய ஏற்பாட்டில் 1இராஜாக்கள் மற்றும் 2இராஜாக்கள் ஒரே புத்தகமாக உள்ளது)
காலம்: கி.மு.560 மற்றும் 538 - க்கு இடைப்பட்ட காலமாக இருக்கலாம்.
மூலாதாரம்:
1. சாலமோனுடைய நடபடி புத்தகம் (1இராஜாக்கள்: 11:41)
2. இஸ்ரவேல் இராஜாக்களின் நாளாகமப் புத்தகம் (1இராஜாக்கள்: 14:19; 15:31; 16:5,14,27; 22:39; 2இராஜாக்கள்: 1:18)
3. யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகம் (1இராஜாக்கள்: 14:29; 15:7,23; 22:45; 2இராஜாக்கள்: 8:23; 12:19).
குறிப்பிடப்பட்டுள்ள காலம்:
ஏறக்குறைய கி.மு.975 - 560 (சாலமோனின் ஆட்சி முதல் பாபிலோனில் யூதர்கள் நாடு கடத்தப்பட்டது வரை)
எந்நிலையில் எழுதப்பட்டது:
வடக்கு மற்றும் தெற்கு இராஜ்யங்கள் சிறைப் பிடிக்கப்பட்டதை விளக்க வேண்டிய தேவை.
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: “இராஜாக்கள்”
எபிரேயு: “மெல்கிம் A.B” (Melchin A.B) “ராஜாக்கள்” , “ராஜ்யங்கள்”
கிரேக்கு: “பேசிலியோன் C.D” (Basileion C.D) “ராஜ்யம் 3, 4”
கருப்பொருள்: இஸ்ரவேல் மற்றும் யூதாவின் உயர்வு, பிரிவு, வீழ்ச்சி மற்றும் தோல்வி.
நோக்கம்: இஸ்ரவேலும், யூதாவும் தேவனோடிருந்த தங்களுடைய உடன்படிக்கையை எவ்வாறு தொடர்ச்சியாக மீறினர்கள் என்பதையும், அதன் விளைவாக அந்நிய தேசங்களால் சிறைபிடிக்கப்பட்டு, அவர்கள் அடைந்த தண்டனையையும் எடுத்துக் காட்டுதல்.
முக்கியவசனம்:
1இராஜாக்கள்: 9:4-7 - “நான் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் நீ செய்து, என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்ளும்படிக்கு, என் சமுகத்தில் மன உத்தமும் செம்மையுமாய் உன் தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல நடப்பாயானால் ... உன் தகப்பனாகிய தாவீதோடே நான் சொன்னபடியே, இஸ்ரவேலின் மேலுள்ள உன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப் பண்ணுவேன் ...நீ என்னை விட்டு பின்வாங்குவாயானால்... நான் இஸ்ரவேலுக்குக் கொடுத்த தேசத்திலே, நான் பரிசுத்தமாக்கின இந்த ஆலயத்தை என் சமுகத்தை விட்டுத் தள்ளுவேன்”
2இராஜாக்கள்: 17:19,20 - “யூதா ஜனங்களும் தங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளைக் கைக்கொள்ளாமல் இஸ்ரவேல் உண்டாக்கின வழிபாடுகளில் நடந்தார்கள். ஆகையால் கர்த்தர் இஸ்ரவேல் சந்ததியாரையெல்லாம் புறக்கணித்து, அவர்களைத் தமது முகத்தை விட்டுத் தள்ளு மட்டாக ஒடுக்கி, அவர்களைக் கொள்ளைக்காரர் கையில் ஒப்புக் கொடுத்தார்”
13. “1நாளாகமம்” மற்றும் 14. “2நாளாகமம்”
அ) பின்னணி:ஆசிரியர்: பெயர் தெரியவில்லை. எஸ்றா எனக் கருதப்படுகிறது.
(1நாளாகமம் மற்றும் 2நாளாகமம் எபிரேய பழைய ஏற்பாட்டில் ஒரே புத்தகமாக உள்ளது)
காலம்: ஏறக்குறைய கி.மு.450 - 400
மூலாதாரம்: சாமுவேல், நாத்தான், காத் (1நாளாகமம்: 20:29)
குறிப்பிடப்பட்டுள்ள காலம்: ஏறக்குறைய கி.மு.1025 - 560
எந்நிலையில் எழுதப்பட்டது:
பாபிலோனிலிருந்து யூதர்கள் திரும்பி வந்தவுடன், இஸ்ரவேல் மற்றும் குறிப்பாக யூதாவின் சரித்திரம் எழுதப்பட வேண்டிய தேவை ஏற்பட்டது; ஏனென்றால், கடந்த காலத்தின் துயரச் சம்பவங்கள் மீண்டும் நிகழாதபடி, தேவனுடைய உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிய வேண்டிய தேவையை உறுதிப்படுத்த வேண்டும்.
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: “நாளாகமம்”
எபிரேயு: “டைபர் ஹேயாமின் 1,2” (Dibre Hrayamin 1,2) “நாள்” 1,2 ன் “காரியங்கள்“, “வார்த்தைகள்”
கிரேக்கு: “பேரல்லைபோமெனன்” (Paraleipomenon 1,2) “விலக்கப்பட்ட காரியங்கள் 1,2”
கருப்பொருள்: எபிரேய தேசத்தின் ஆவிக்குரிய மரபு
நோக்கம்: அந்நிய தேசத்திலிருந்து திரும்ப வந்த யூதர்களுக்கு அவர்களுடைய ஆவிக்குரிய மரபைப் போதித்தல்; அவர்கள் தங்கள் முன்னோர்கள் செய்த தவறுகளைச் செய்யாதபடி, மோசேயின் உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிவதற்காக இந்தப் போதனை அளிக்கப்படுகிறது.
முக்கியவசனம்:
1நாளாகமம்: 9:1,2; 10:13,14 - “இஸ்ரவேலர் எல்லாரும் தங்கள் வம்ச வரலாற்றின்படி எண்ணப்பட்டார்கள் ... யூதா கோத்திரத்தார் தங்கள் துரோகத்தினிமித்தம், பாபிலோனுக்கு சிறைப்பிடித்துக் கொண்டு போகப்பட்டார்கள். தங்கள் காணியாட்சியிலும், தங்கள் பட்டணங்களிலும் முன் குடியிருந்தவர்கள் இஸ்ரவேலரும் ஆசாரியரும் லேவியரும் நிதனீமியருமே... சவுல் கர்த்தரைத் தேடாமல், அஞ்சனம் பார்க்கிறவர்களைத் தேடினதினிமித்தம் செத்துப்போனான். அதற்காக அவர் அவனைக் கொன்று, ராஜ்யபாரத்தை ஈசாயின் குமாரனாகிய தாவீது வசமாகத் திருப்பினார்.”
2நாளாகமம்: 36:15,16 - “அவர்களுடைய பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தையும் தமது வாசஸ்தலத்தையும் காப்பதற்கான இரக்கமுள்ளவராயிருந்தபடியால், அவர்களிடத்துக்குத் தம்முடைய ஸ்தானாபதிகளை ஏற்கெனவே அனுப்பினார். ஆனாலும், அவர்கள் தேவனுடைய ஸ்தானாபதிகளைப் பரியாசம் பண்ணி, அவருடைய வார்த்தைகளை அசட்டை செய்து, அவருடைய தீர்க்கதரிசிகளை நிந்தித்தபடியால், கர்த்தருடைய உக்கிரம் அவருடைய ஜனத்தின்மேல் மூண்டது; சகாயமில்லாமல் போயிற்று”.
15. “எஸ்றா” 16. “நெகேமியா”
அ) பின்னணி:
ஆசிரியர்: பெயர் தெரியவில்லை. எஸ்றா எனக் கருதப்படுகிறது.
(எஸ்றா மற்றும் நெகேமியா, எபிரெய பழைய ஏற்பாட்டில் ஒரே புத்தகமாக உள்ளது)
காலம் : ஏறக்குறைய கி.மு.440
மூலாதாரம்:
1. எஸ்றா மற்றும் நெகேமியாவின் வம்ச அட்டவணைகள் (எஸ்றா: 7:27; 8:1; நெகேமியா: 1 - 7; 11:12)
2. கணக்கெடுப்பு மற்றும் பிறபட்டியல்கள் (எஸ்றா: 2:1; நெகேமியா: 7:6)
3. கோரேசின் வாக்கு (எஸ்றா: 1:1)
குறிப்பிடப்பட்டுள்ள காலம்: கி.மு.538 முதல் 445 வரை
எழுதப்பட்ட காலம்:
சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த யூதர்கள், கர்த்தருக்கு தொடர்ந்து உண்மையுள்ளவர்களாயிருக்கும்படி, எஸ்றா மற்றும் நெகேமியாவின் கீழ் ஆலயமும், மதில்களும் கட்டப்பட்டதையும், இக்காலகட்டத்தில் ஏற்பட்ட சீர்திருத்தங்களையும் பதிவு செய்வதன் தேவை.
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: “எஸ்றா”
எபிரேயு: “எஸ்டிறா” (Esdra) “எஸ்றா, யாவே உதவுகிறார்”
கிரேக்கு: எக்ஸ்டிறாஸ் (Exdras) “எஸ்றா”
தலைப்பு: “நெகேமியா”
எபிரேயு: “நெமியா” (Nehmiah) “நெகமியா, யாவெயின் ஆறுதல்”
கருப்பொருள்:
நாடுகடத்தப்பட்ட யூதர்களின் மீட்சி; ஆலயத்தை மீண்டுமாக கட்டுதல் மற்றும் நியாயப்பிரமாணத்தை மீண்டுமாக நிறுவுதல், இவை மூலமாக சமயப்பிரகாரமான வாழ்க்கையை மீண்டுமாக நிலைநிறுத்துதல்.
நோக்கம்:
எஸ்றா: கோரேசின் கட்டளை எவ்வாறு யூதர்களின் மீட்புக்கும் ஆலயத்தை திரும்பக் கட்டுவதற்கும், மனந்திரும்பின சிறுபான்மையினருக்கு தீர்க்கதரிசிகள் அளித்த வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற நிறுவப்பட்ட சமயப்பிரகாரமான சீர்திருத்தங்களைக் கொண்டுவர எவ்வாறு ஒரு காரணமாக அமைந்தது என்பதைக் காட்டுதல்.
நெகேமியா: நெகேமியாவின் கீழ் யூதர்கள் திரும்பி வந்தது: எருசலேமின் மதில்கள் கட்டப்படுவதற்கும், மோசேயின் உடன்படிக்கைக்கு மீண்டுமாக ஒப்புவித்தலுக்கும் எவ்வாறு காரணமானது என்பதைக் குறிப்பிடுதல்.
முக்கிய வசனங்கள்:
எஸ்றா: 6:14; 7:10 - “அப்படியே யூதரின் மூப்பர் கட்டினார்கள்; தீர்க்தரிசியாகிய ஆகாயும், இத்தோவின் குமாரனாகிய சகரியாவும் தீர்க்கதரிசனம் சொல்லி வந்தபடியினால் அவர்களுடைய காரியம் கைகூடி வந்தது; அவர்கள் இஸ்ரவேலின் தேவனுடைய கட்டளைப்படியேயும், கோரேஸ், தரியு, பொ்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா என்பவர்களுடைய கட்டளைப்படியேயும் கட்டி முடித்தார்கள். ... கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும், நீதி நியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்.”
நெகேமியா: 2:17; 9:2 - “நாம் இனி நிந்தைக்குள்ளிருக்காதபடிக்கு, எருசலேமின் அலங்கத்தைக் கட்டுவோம் வாருங்கள்... இஸ்ரவேல் சந்ததியார் மறு ஜாதியாரையெல்லாம் விட்டுப் பிரிந்து வந்து நின்று, தங்கள் பாவங்களையும், தங்கள் பிதாக்களின் அக்கிரமங்களையும் அறிக்கையிட்டார்கள்”
17. எஸ்தர்
அ) பின்னணி:
ஆசிரியர்: பெயர் தெரியவில்லை. (மொர்தெகாயாக இருக்கலாமோ?)
காலம்: கி.மு. 450 - 400
மூலாதாரம்: அறியப்படவில்லை.
குறிப்பிடப்பட்டுள்ள காலம்:
சொ்சஸ்! (அகாஸ்வேரு), கி.மு.486 - 465. ஆமானின் சூழ்ச்சி தோல்வி அடைந்ததைக் கொண்டாடும் யூதர்கள் திருவிழா. (Peast of Pruim) தோராவில் குறிப்பிடப்படாததால், அப்பண்டிகை எவ்வாறு தோன்றியது என்பதைக் குறிப்பிடுதல்.
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: “எஸ்தர்”
எபிரேயு: “ஹடாசா” (Hadassah) “பசுமை மாறா நறுமண மலர்ச் செடிவகை”
கிரேக்கு: “எஸ்தர்” (Esther) (பொ்சிய மொழியில் “ஸ்டாரா” (Stara) (Star) ? எனப்படும் வார்த்தையிலிருந்து வந்தது.)
கருப்பொருள்: தெய்வீக அருளின் காரணமாக யூதர்கள் தம் எதிரிகளின் மீது பெற்ற வெற்றி.
நோக்கம்:
தோராவில் குறிப்பிடப்படாத ஒரு பண்டிகை, பொ்சியனான ஆமானின் சூழ்ச்சி மற்றும் அவனுடைய வீழ்ச்சியிலிருந்து எவ்வாறு தோன்றியது என்பதையும், தேவன் தம்முடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்காக தம்முடைய மக்களை முக்கியமான பதவிகளில் வைப்பார் என்பதையும் குறித்த ஒரு வரலாற்றுக் குறிப்பைத் தெரிவித்தல்.
முக்கியவசனம்:
எஸ்தா்: 4:14 - “நீ இந்தக் காலத்தில் மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும்... நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும்?”
கவிதை மற்றும் ஞான இலக்கியத்திற்கு ஒரு முன்னுரை
யோபு முதல் உன்னதப் பாட்டு வரை
புத்தகங்கள்:
1. கவிதை சார்ந்தவை:யோபு முதல் உன்னதப் பாட்டு வரை
புத்தகங்கள்:
அ) புத்தகங்கள்: யோபு, சங்கீதம், நீதிமொழிகள், உன்னதப்பாட்டு, புலம்பல்.
ஆ) மற்ற புத்தகங்களின் பகுதிகள் லாமேக்கின் புலம்பல் (ஆதியாகமம்: 4:23,24)
1. ஈசாக்கு (ஆதியாகமம்: 27:27 - 29) மற்றும் யாக்கோபின் (ஆதியாகமம்: 49:2 - 27) ஆசீர்வாதங்கள்.
2. மோசே மற்றும் மிரியாமின் பாட்டு (யாத்திராகமம்: 15:1 -18,21).
3. தீர்க்கதரிசன இலக்கியம்.
2. ஞானம் பற்றியவை:
புத்தகங்கள்: யோபு, நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதப்பாட்டு மற்றும் சில சங்கீதங்கள் :1,10,14,19,37,49,73,90,112.
எபிரேய கவிதைகளின் தன்மை:
பொருள் விளக்கம்:எபிரேய கவிதை மற்றும் பாடலில், அதில் அடங்கியுள்ள சிந்தனைகள் ஒரே ஒலியில் அமைக்கப்படுகின்றன, அதிலுள்ள வார்த்தைகள் அல்ல, இது பேலியிலிஸம் (Pallelism) என்று அழைக்கப்படுகிறது: “ஒத்த சிந்தனைகளை வெளிப்படுத்தும் இரண்டு வரிகள் ஒன்றாக எழுதப்படுகின்றன.”
வகைகள்:
1. பாடுதற்கேற்ற (பாடல்) - சங்கீதங்கள்.
2.அறிவுறுத்துபவை (போதனை) - நீதிமொழிகள்.
3.நாடகவடிவிலுள்ளவை (கதை) - யோபு.
எபிரேய ஞானத்தின் தன்மை:
பொருள் விளக்கம்:“ஹோக்மா” (Hokhmah) “ஞானம்” . தேவனோடும் மனிதர்களோடும் வெற்றியுள்ள வாழ்க்கை வாழ்வதற்கான நடைமுறை அறிவை “ஹோக்மா” (Hokhmah) அளிக்கிறது. எபிரேய ஞானம் பிரத்தியேகமானது. ஏனெனில், அது கர்த்தருக்கு பயப்படுதலை அடிப்படையாகக் கொண்டது.
வகைகள்:
1. பழமொழிகள் “மஷால்” (Mashal), வாழ்க்கையைக் குறித்த சுருக்கமான மற்றும் மிகக் குறிப்பான முதுமொழிகள் (நீதிமொழிகள்).
2.நாடக வடிவத்திலுள்ள கதை (யோபு).
3.உருவகம் (நீதிமொழிகள்)
18. யோபு
அ) பின்னணி:
ஆசிரியர்: பெயர் தெரியவில்லை. (சில வேத பண்டிதா்கள் மோசே எனக் கருதுகின்றனர்)
காலம்: தெரியவில்லை. (யோபு மற்றும் அவருடைய நண்பர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் பொதுவான வாழ்க்கை முறை, கி.மு.2000 - 1800 ன் காலகட்டத்தைச் சோ்ந்த பழக்கவழக்கங்களை ஒத்திருக்கின்றன.)
எந்நிலையில் எழுதப்பட்டது:
ஆசிரியரையும், காலத்தையும் சரியாக கணிக்க முடியவில்லை என்பதால், எதற்காக எழுதப்பட்டது என்பதை அறிய முடியவில்லை. அது தேவனுடைய மக்கள் துன்பத்தை அனுபவித்த ஒரு காலமாக இருக்கலாம்.
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: “யோபு”
எபிரேயு: “ஐயோப்” (Iyyob) “யோபு” , “திரும்ப வருதல், மனந்திரும்புதல்” என்ற பொருளாக இருக்கலாம்.
கிரேக்கு: “ஐயோப்” (Job) “யோபு”
கருப்பொருள்: “துன்பத்தின் முக்கியத்துவம்”
நோக்கம்: நீதிமான்களின் துன்பத்தில் தேவன் வெளிப்படுத்தும் அவருடைய தன்மை ஞானம் மற்றும் வல்லமையை அறிதல். முடிவாக நாம் அவரையும், அவருடைய நன்மையையும், நீதியையும் முழுமையாக நம்பமுடியும் என்பதையும் எடுத்துக் காட்டுதல்.
முக்கிய வசனம்: யோபு: 42:2,5 - “தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்... என் காதினால் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது”
19. சங்கீதங்கள்
அ) பின்னணி:
ஆசிரியர்:
1. தாவீது 73 சங்கீதங்கள் (புத்தகம் 1 ல் 37; புத்தகம் 2 ல் 18, புத்தகம் 3 ல் 1, புத்தகம் 4 ல் 2, புத்தகம் 5 ல் 15)
2. ஆசாப் - 12 சங்கீதம் (சங்கீதம்: 50; 73 - 83)
3. கோராகின் புத்திரர் - 11 (சங்கீதம்: 42 - 49, 84,87,88)
4. சாலமோன் - 2 (சங்கீதம: 72, 127)
5. மோசே - 1 (சங்கீதம்: 90)
6. ஏத்தான் - 1 (சங்கீதம: 89)
7. பெயர் அறியப்படாதவர்கள் - 50
காலம்: பெரும்பாலானவை தாவீதின் காலத்தை சோ்ந்தவை. (ஏறக்குறைய கி.மு.1000); சில மோசேயின் காலத்தைச் சோ்ந்தவை (ஏறக்குறைய கி.மு.1400 - 1200). சில பாபிலோனிய சிறையிருப்பின் காலத்தைச் சோ்ந்தவை (ஏறக்குறைய கி.மு.586 - 538) சங்கீதங்கள் 90, 137 பார்க்கவும்.
எதற்காக எழுதப்பட்டது:
புத்தகம் 1 (சங்கீதங்கள் 1 - 4) பெரும்பாலான சங்கீதங்கள், ஒரு பெரிய புத்தகமாக எழுதப்பட்ட தாவீதின் ஜெபங்களாகும்; இச்சங்கீதங்களை தாவீது அல்லது அவனுடைய ஆட்சியில் அவனுடைய உத்தரவின் பேரில் வேறொருவர் சீரமைத்திருக்கலாம்.
புத்தகம் 2 (சங்கீதங்கள் 42 - 72) மற்றும் புத்தகங்கள் 3 (சங்கீதங்கள் 73 - 89) இஸ்ரவேல் தேசம் ஆவிக்குரிய விழிப்பைப் பெற்ற பிற்பட்ட காலகட்டத்தில் இச்சங்கீதங்கள் சேகரிக்கப்பட்டிருக்கலாம். (எசேக்கியா கி.மு.725 அல்லது கி.மு.625).
புத்தகங்கள் 4 (சங்கீதங்கள் 90 - 106) மற்றும் புத்தகங்கள் 5 (சங்கீதங்கள் 107 - 150). இவை பல்வேறுபட்ட சங்கீதங்கள் மற்றும் ஜெபங்களின் தொகுப்பு; இவற்றில் சில, எருசலேமில் உள்ள ஆலயத்திற்குச் செல்லும் யாத்திரையின்போதும், ஆராதனையின்போதும் பயன்படுத்தப்பட்டன.
ஆ) பின்னணி:
தலைப்பு: “சங்கீதங்கள்”
எபிரேயு: “டெஹில்லிம்” (Tehillim) “துதிகள்” , துதியைக் குறித்து 40 சங்கீதங்கள். ஜெபத்தைக் குறித்து 75 சங்கீதங்கள்.
கிரேக்கு: “சால்டீஸியன்” (Psaltesion) “பாடல்கள்”
கருப்பொருள்: தேவனுடைய மக்கள் தனியாகவும் கூட்டாகவும் ஏறெடுத்த துதியும், ஜெபமும்.
நோக்கம்: இஸ்ரவேலின் தேவன் தம்முடைய மக்களின் கூக்குரலைக் கேட்டு, அவர்களுக்கு இரங்கி, அவர்களை விடுவிப்பதால், தேவன் தங்களுடைய துதிக்கும், நன்றிக்கும் பாத்திரர் என்பதை வெளிப்படுத்ததல் (இந்த ஐந்து பெரும் பிரிவுகளும் - புத்தகங்கள் 1 முதல் 5 வரை துதியுடன் முடிவடைகின்றன)
முக்கிய வசனம்: சங்கீதம்: 145:20,21 - “ கர்த்தர் தம்மில் அன்புகூறுகிற யாவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார். என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக; மாம்ச தேகமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கக்கடவது.”
20. நீதிமொழிகள்
பின்னணி:
ஆசிரியர்:
1. சாலமோன் (நீதிமொழிகள்: 1:1-9; 18; 10:1-22:16; 25:1-29; 27). ஏறக்குறைய 375 நீதிமொழிகள்.
2. “ஞானமுள்ள மனிதர்கள்” (22:17-23:22; 23:23-24)
3. ஆகூர் (30:1-33)
4. ராஜாவாகிய லேமுவேல் (31:1-9; 31:10-31)
காலம்: சாலமோனின் காலம் (ஏறக்குறைய கி.மு.971 - 931); 1இராஜாக்கள்: 4:32 பார்க்கவும்.
எதற்காக எழுதப்பட்டது: ஞானமுள்ள மொழிகளால் வாலிபருக்கு ஞானத்தையும், சரியான வாழ்க்கையையும் குறித்துப் போதிக்கிறதற்காக “காலத்தை வென்ற ஞானத்தின்” ஒரு தொகுப்பை உருவாக்க வேண்டிய தேவை.
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: “நீதிமொழிகள்”
எபிரேயு: “மிஷேல்” (Mishell) “நீதிமொழிகள், பழமொழி”
கிரேக்கு: “பரோய்மியா” (Paroimia) “நீதிமொழிகள், பழமொழி”
கருப்பொருள்: கர்த்தருக்குப் பயப்படுதலை அடிப்படையாகக் கொண்ட ஞானத்தின் வார்த்தைகள்.
நோக்கம்: இளந்தலைமுறையினர் ஞானமுள்ள, தெய்வீக வாழ்க்கையை வாழும்படி, ஞானமுள்ள மனிதர்கள் அளித்துள்ள நடைமுறை அறிவைப் பதிவு செய்தல்.
முக்கிய வசனம்: நீதிமொழிகள்: 1:7 - “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டை பண்ணுகிறார்கள்”
21. பிரசங்கி
அ) பின்னணி:
ஆசிரியர்: பெயர் தெரியவில்லை. சாலமோன் எனக் கருதப்படுகிறது. (பிரசங்கி: 1:1,16; 2:7,8)
காலம்: சாலமோனின் காலம் (ஏறக்குறைய கி.மு.971 - 931)
எப்போது எழுதப்பட்டது:
ராஜாவாகிய சாலமோனின் சொந்த வாழ்க்கையிலிருந்த மாயையின் மூலம், மற்றவர் கற்றுக் கொள்ளும் வகையில், அவனுடைய மரணத்திற்கு முன்பாக அவை எழுதப்பட்டன.
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: “பிரசங்கி”
எபிரேயு: “கோஹிலெட்” (Gohelet) “கூட்டிச் சோ்ப்பவர்”
கிரேக்கு: “எக்லெசியாஸ்ட்ஸ்” (Ekklesiastes) “கூட்டிச் சோ்ப்பவர்”
கருப்பொருள்: தேவனுக்குப் புறம்பான வாழ்க்கையின் மாயைகளைக் குறித்த பிரசங்கங்கள்.
நோக்கம்: கர்த்தருக்குப் பயப்படுதலுக்குப் புறம்பாக, வாழ்க்கையின் பிரயாசங்களில் காணப்படும் வெறுமையைத் தெளிவாக எடுத்துக்காட்டுதல்.
முக்கிய வசனம்: பிரசங்கி: 12:13 - “காரியத்தின் கடைத் தொகையைக் கேட்போமாக, தேவனுக்கு பயந்து, அவர் கற்பனைகளைக் கைக் கொள்; எல்லா மனுசர் மேலும் விழுந்த கடமை இதுவே.”
22. உன்னதப்பாட்டு
அ) பின்னணி:
ஆசிரியர்: சாலமோன் (உன்னதப்பாட்டு: 1:5; 3:7,9,11; 8:11,12)
காலம்: சாலமோனின் ஆட்சி (ஏறக்குறைய கி.மு.971 - 931)
எந்நிலையில் எழுதப்பட்டது:
உறுதியாகத் தீர்மானிக்கப்படவில்லை.
கருத்து விளக்கம்:
1. தொடர் உருவகமானவை: தேவனும் இஸ்ரவேலும், கிறிஸ்துவும் சபையும்.
2. நாடக வடிவமானது: சாலமோன் மற்றும் சூலாமியப் பெண்ணின் காதல் கதை.
3. எழுத்துச் சார்ந்தது: சிற்றின்பம் சார்ந்த காதல் பாடல்கள், கவிதைகள்.
4. நீதி சார்ந்தது: உண்மையான அன்பின் அதிசயத்தையும், தூய்மையையும் போதிக்கிறது.
5. அன்பின் உணர்வு சார்ந்தது: திருமணப் பாடல்கள்.
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: “உன்னதப்பாட்டு”
எபிரேயு: ஷிர் அஸ்ரிம் (Shir has Shirim) “உன்னதப்பாட்டு” “ஒரு மிகச் சிறந்த பாடல்”
கிரேக்கு: “அஸ்மா” (Asms) “பாடல்”
கருப்பொருள்: ஒரு மணப்பெண்ணிற்கும், மணவாளனுக்குமிடையே உள்ள அன்பின் காதல் பாடல்கள்.
நோக்கம்: ஒரு ஆணிற்கும், பெண்ணிற்குமிடையே உள்ள அன்பின் அழகையும், மென்மையையும் எடுத்துக் காட்டுதல்; தேவன் மனுக்குலத்தின் மீது பாராட்டும் நெருங்கிய, ஆழமான அன்பிற்கு ஒரு அடையாளமாகவும் விளக்கப்படுகிறது.
முக்கியவசனம்: சாலமோனின் உன்னதப்பாட்டு: 8:6 - “நீர் என்னை உமது இருதயத்தின் மேல் முத்திரையைப் போலவும், உமது புயத்தின் மேல் முத்திரையைப் போலவும் வைத்துக் கொள்ளும். நேசம் மரணத்தைபோல் வலிது; நேச வைராக்கியம் பாதாளத்தைப் போல கொடிதாயிருக்கிறது.”
தீர்க்கதரிசிகளுக்கு ஒரு முன்னுரை
(ஏசாயா முதல் மல்கியா வரை)
(ஏசாயா முதல் மல்கியா வரை)
அ) இனவாரியாக பிரித்தல்: (பெறுபவர்களின்படி)
1. இஸ்ரவேலுக்கு - ஓசியா, ஆமோஸ்
2. யூதாவுக்கு - யோவேல், ஏசாயா, மீகா, செப்பனியா, புலம்பல், எரேமியா, ஆபகூக், ஆகாய், சகரியா, மல்கியா.
3. நினிவேக்கு (அசீரியா) - யோனா, நாகூம்.
4. பாபிலோனுக்கு - தானியேல்
5. பாபிலோனில் நாடு கடத்தப்பட்டவர்களுக்கு - எசேக்கியேல்
6. ஏதோமிற்கு - ஒபதியா
ஆ) தீர்க்கதரிசியின் பொருள் விளக்கம்:
வார்த்தைகள்: (1நாளாகமம்: 29:29,30).
1. நபி (Nabi) - “(தேவனால்) அழைக்கப்படட்வர்”
2. ரோயே (Roeh) - “ஞானதிருஷ்டிக்காரன்” (“பார்த்தல்” என்ற மூல வார்த்தையிலிருந்து).
3. ஹோசே (Hozeh) - “ஞானதிருஷ்டிக்காரன், தீர்க்கதரிசி” (“பார்த்தல்” என்ற மூல வார்த்தையிலிருந்து).
தேவன் தம்முடைய வார்த்தையையும், சித்தத்தையும் (முதன்மையாகத் தம்முடைய மக்களுக்கு) அறிவிக்கும்படி, தமது சார்பில் பேசுவதற்காக தெரிந்தெடுத்து அழைக்கும் ஒரு மனிதன் “தீர்க்கதரிசி” எனப்படுகிறான்.
விளக்கம்:
1. “முன்னறிந்து கூறுதல்” (அடிக்கடி) - தேவனுடைய சார்பில், பொதுவாக நிகழ் காலத்தைக் குறித்தத் தேவனுடைய சித்தத்தை முன்னறிந்து கூறுதல்.
2. “முன்னறிவி” (அவ்வப்போது) - தேவனுடைய சார்பில், முன்குறிக்கப்பட்ட எதிர்கால சம்பவங்களை மையமாகக் கொண்ட, நிகழ்காலத்திற்குரியவைகளைக் குறித்தத் தேவனுடைய சித்தத்தைக் குறிப்பாகக் கூறுதல்.
இ) தீர்க்கதரிசனத்தின் தன்மை:
மூலாதாரம்: இயற்கைக்கு அப்பாற்ப்பட்டது. (2பேதுரு: 1:20,21)
வழிவகைகள்:
1. சொப்பனங்களும், இரவு தரிசனங்களும் (எண்ணாகமம்: 12:6)
2. தரிசனங்களும், மிகையான உணர்வுகளும் (ஏசாயா: 2:1; 29:7; ஆமோஸ்: 1:1; மீகா:1:1)
3. தேவனோடு நேரடியாக எதிர்ப்படுதல் (2இராஜாக்கள்: 20:1-6; ஏசாயா: 6:1-10, 38:4)
4. வெளிப்படுத்தலுடன் வரலாற்றுச் சம்பவங்கள் (எரேமியா: 21:1,2; 36:1-26; 42:7-22)
5. தீர்க்கதரிசியின் வாழ்க்கைச் சூழ்நிலை (ஏசாயா: 39:1-8)
நோக்கம்: நெறிமுறை சார்ந்தது (ஆமோஸ்: 4:12; 2பேதுரு: 3:11; 1யோவான்: 3:3)
தோற்றம்: இரட்டைப் பரிமாணம்.
- “எப்போது” என்பதைவிட, “என்ன” மற்றும் “யார்” என்பவை தெளிவாயிருப்பதால், காலத்தின் பரிமாணம் துல்லியமாக இல்லாவிட்டாலும் எப்போதும் ஓரளவிற்கு சரியாக உள்ளது. (ஏசாயா: 13:6, எசேக்கியேல்: 30:3, யோவேல்: 1:5, ஒபதியா: 15, செப்பனியா: 1:7,14, மத்தேயு: 10:23, 16:28, 24:34, யாக்கோபு: 5:8,9, 1தெசலோனிக்கேயர்: 4:15, பிலிப்பியர்: 4:5, வெளிப்படுத்தல்: 1:1,3, 22:6,10,12,20).
மாதிரிப் படிவம்: சமநிலையடைந்தது:
1. பாவத்திற்காக தேவன் அளித்த நியாயத்தீர்ப்பு தற்போதைய துயரத்தின் காரணமாகும்; எனவே, “வரவிருக்கும் “கர்த்தரின் நாளைச்” (தேசங்களின் நியாயத்தீர்ப்பு) சந்திப்பதற்காக மனம் வருந்தி, தேவனிடம் திரும்புங்கள். தேவன் மன்னிப்பை அளித்து, மீண்டும் ஆசீர்வதிப்பார். மேசியாவின் யுகமும், ஒரு உயரிய நிலை உள்பட மகிமையான எதிர்காலமும் வரவிருக்கிறது.
2. (கள்ளத்தீர்க்தரிசிகளுக்கான) சோதனைகள். நிறைவேறுதல்: உபாகமம்: 18:20-22.
3. தேசிய நீதி (உபாகமம்: 13:1-5, எரேமியா: 23:13,14)
4. தனிப்பட்ட நீதி (எரேமியா: 23:9-12, மத்தேயு: 7:15-20)
23. ஏசாயா
அ) பின்னணி:
காலம்: ஏறக்குறைய கி.மு.740 - 681 - உரியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா மற்றும் மனாசே முதலியோரின் ஆட்சி.
எந்நிலையில் எழுதப்பட்டது:
அசீரியர்களின் தாக்குதல்களின் பயம் காரணமாக, தேவனுடைய மக்கள் தங்களுடைய பாதுகாப்பிற்காக கர்த்தரின் மீது தங்களுடைய நம்பிக்கையை வைப்பதற்கான தேவை (கி.மு.734 ல் இஸ்ரவேல் மற்றும் சீரியாவுடனான நெருக்கடி; கி.மு.701 ல் அசீரியாவுடனான நெருக்கடி).
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: “ஏசாயா”
எபிரேயு: “யேஷாயாகூ” (Yeshayahu) “தேவன் இரட்சிப்பானவர்”
கிரேக்கு: “ஏசாயாஸ்” (Esias) “ஏசாயா”
கருப்பொருள்: தேவன் ஒருவரே இரட்சிப்பானவர். எனவே, அவரை மட்டும் விசுவாசியுங்கள்.
நோக்கம்: எருசலேமும், யூதாவும் தங்களைச் சுற்றியுள்ள தேசங்களின் மீது நம்பிக்கை வைக்காமல் தம் இரட்சிப்பிற்காக தேவனை மட்டும் விசுவாசிப்பதன் மூலம் அவர்களைத் திரும்பவும் தேவனுடைய உடன்படிக்கையினிடமும் நீதியினிடமும் அழைத்தல்.
முக்கியவசனம்: ஏசாயா: 49:6 - “யாக்கோபின் கோத்திரங்களை எழுப்பவும், இஸ்ரவேலில் காக்கப்பட்டவர்களைத் திருப்பவும், நீர் எனக்குத் தாசனாயிருப்பது அற்பகாரியமாயிருக்கிறது; நீர் பூமியின் கடைசி பரியந்தமும் என்னுடைய இரட்சிப்பாயிருக்கும்படி, உம்மை ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைப்பேன் என்கிறார்.”
24. எரேமியா
அ) பின்னணி:
ஆசிரியர்: எரேமியா, பாரூக்கு (எரேமியா: 36:12)
காலம்: ஏறக்குறைய கி.மு.627 - 575 - யோசியா, யெகாகஸ், யோயாக்கீம், யோயாக்கீன் மற்றும் சிதேக்கியா (எரேமியா: 1:1-3) முதலானோரின் ஆட்சி.
எப்போது எழுதப்பட்டது: அதிகரித்துக் கொண்டு போகும் யூதாவின் மீறுதல், மற்றும் பாபிலோனியர்களால் யூதாவிற்கு நேரிடக்கூடிய அழிவு ஆகியவற்றினால் எரேமியாவின் மூலம் தேவனுடைய மதிப்பீட்டின் வார்த்தை அளிக்கப்பட வேண்டிய தேவை.
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: “எரேமியா”
எபிரேயு: “யிமேயாகூ” (Yimeyahu) “தேவன் நிலைநிறுத்துகிறார், உயர்த்துகிறார்”
கிரேக்கு: ஜெரேமியாஸ் (Jeremias) “எரேமியா”
கருப்பொருள்: மனந்திரும்புதல் அல்லது நீக்குதல்
நோக்கம்: தேவனுக்கு விரோதமாக செயல்பட்டு, அவரை விட்டு விலகின யூதா, மீண்டும் மனந்திரும்பி அவாிடம் திரும்புவதற்காக, வரவிருக்கிற நியாயத்தீர்ப்பைக் குறித்து யூதாவை எச்சரித்தல்.
முக்கியவசனம்: எரேமியா: 4:14 - “எருசலேமே, நீ இரட்சிக்கப்படும்படிக்கு உன் இருதயத்தைப் பொல்லாப்பறக் கழுவு; எந்த மட்டும் அக்கிரமநினைவுகள் உன் உள்ளத்திலே தங்கும்.”
25. புலம்பல்
அ) பின்னணி:
ஆசிரியர்: பெயர் தெரியவில்லை. எரேமியா எனக் கருதப்படுகிறது.
காலம்: ஏறக்குறைய எருசலேமினுடைய வீழ்ச்சியின் காலத்தில், கி.மு.586 (அல்லது கி.மு.575).
எந்நிலையில் எழுதப்பட்டது: தேவனுடைய பரிசுத்த நகரமாகிய எருசலேமின் பயங்கரமான அழிவைக் குறித்துத் தேவனுடைய தீர்க்கதரிசி துயரத்துடன் புலம்பும்படி எருசலேமின் வீழ்ச்சி ஏவுகிறது.
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: “புலம்பல்”
எபிரேயு: “ஈகா” (Ekah) “அந்தோ! ஓ! எப்படி!”
கிரேக்கு: “த்ரேநோய்” (Threnoi) “புலம்பல்கள், அரற்றுதல்”
கருப்பொருள்: எருசலேமின் பயங்கரமான வீழ்ச்சியைக் குறித்துத் துயரமான புலம்பல்கள்.
நோக்கம்:
எருசலேம் தன்னுடைய விக்கிர ஆராதனையிலிருந்து (தேவனைப் புறக்கணித்தல்) மனந்திரும்ப மறுத்ததன் காரணமாக அடைந்த வீழ்ச்சியைக் குறித்து, தீர்க்கதரிசியாகிய எரேமியா அனுபவித்த மிகுதியான துயரத்தை வெளிப்படுத்துதல்.
முக்கிய வசனம்: புலம்பல்: 2:17 - “கர்த்தர் தாம் நினைத்ததை செய்தார்; பூர்வ நாட்கள் முதற் கொண்டு தாம் கட்டளையிட்ட தமது வார்த்தையை நிறைவேற்றினார்.”
26. எசேக்கியேல்
அ) பின்னணி:
ஆசிரியர்: எசேக்கியேல்
காலம்: ஏறக்குறைய கி.மு.597 - 571 - யோயாக்கின் மற்றும் சிதேக்கியாவின் ஆட்சி (எசேக்கியேல்:1:2)
எந்நிலையில் எழுதப்பட்டது:
கி.மு.586 ல் எருசலேம் அடைந்த முடிவான வீழ்ச்சியைக் குறித்து தேவன் அளித்த எச்சரிப்பையும், மனந்திரும்புகிறவர்களுக்கு அவர் வாக்களித்த மீட்பையும் குறித்து தேவன் கூறினவற்றை, பாபிலோனிற்கு நாடு கடத்தப்பட்ட யூதர்கள் அறிய வேண்டியதன் தேவை.
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: “எசேக்கியேல்”
எபிரேயு: “யெகஸ்கல்” (Yehezgel) “தேவன் பெலப்படுத்துகிறவர்”
கிரேக்கு: “லெசேக்கியேல்” (Lesekiel) “எசேக்கியேல்”
கருப்பொருள்:
மனந்திரும்புகிறவர்களுக்கு தேசமும், ஆலயமும் திரும்ப அளிக்கப்படும் என்ற வாக்குத்தத்தோடு தேவனுடைய காவலாளி யூதாவிற்கு அளிக்கும் எச்சரிப்புகள்.
நோக்கம்:
யூதாவிற்கு அளிக்கப்படவிருக்கும் நியாயத்தீர்ப்பையும், மீதியான நீதிமான்களுக்கு அளிக்கப்படவிருக்கும் மீட்பையும் குறித்து எச்சரிப்பதற்காக மதிலின் மீது ஒரு காவலாளியாக நிற்பது.
முக்கியவசனம்:
எசேக்கியேல்: 18:31,32 - “நீங்கள் துரோகம் பண்ணின உங்களுடைய எல்லாத் துரோகங்களையும் உங்கள் மேல் இராதபடிக்கு விலக்கி, உங்களுக்குப் புது இருதயத்தையும் புது ஆவியையும் உண்டு பண்ணிக் கொள்ளுங்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் ஏன் சாகவேண்டும்? மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை.”
27. தானியேல்
அ) பின்னணி:
ஆசிரியர்: தானியேல்
காலம்:
ஏறக்குறைய கி.மு.605 -536 - நேபுகாத்நெச்சார், அவெல் - மர்துக், நாகிலேசர், நாபோநிதஸ், பெல்ஷாத்சார், கோரேஸ்/ தரியு (தானியேல்: 1:1,21) முதலானோரின் ஆட்சி
எந்நிலையில் எழுதப்பட்டது:
நெருக்கத்திலுள்ள தேவனுடைய மக்கள், தானியேலுடைய விடுதலையின் அனுபவங்களாலும், வருங்கால நிகழ்ச்சிகளின் தரிசனங்களாலும் ஊக்குவிக்கப்பட வேண்டியதன் தேவை.
ஆ) உள்ளடக்கம்:
தலைப்பு: தானியேல்
எபிரேயு: “தானியேல்” (Daniel) “தேவன் என்னுடைய நியாயாதிபதி”
கிரேக்கு: “தானியேல்” (Daniel) தானியேல்
கருப்பொருள்: தம்முடைய மக்களை விடுவிப்பதற்காக உலகத்தின் வல்லமைகளை ஆளுகை செய்யும் தேவனுடைய சர்வ வல்லமை.
நோக்கம்:
தேவன் அனைத்து தேசங்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் என்றும், அவர் தம்முடைய மக்களை இன்றும், என்றும் விடுவிப்பதற்காக குறுக்கிடுகிறார் என்றும் தேவனுடைய மக்களுக்கு எடுத்துக் காட்டுவதன் மூலம் அவர்களை ஊக்குவித்தல்.
முக்கியவசனம்:
தானியேல்: 7:13,14 - “இதோ மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார் ... சகல ஜனங்களும் ஜாதியாரும் பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரீகமும் கொடுக்கப்பட்டது.”