101
மனிதர்களின் செயல்களில்
ஒரு அலை இருக்கிறது.
அந்த அலை, வெள்ளத்தின் மூலம்
அதிர்ஷ்டத்தை நோக்கி செல்லும்.
***
102
கடவுள் அன்பின் வடிவத்தில் இருக்கிறார்.
ஒரு கணவன் மற்றும் மனைவியின் அன்பு
நம்மை உண்மைத் தன்மை
நிறைந்த இதயத்திற்கு அருகிலும்,
அறிவு கடவுளிடமும் வேறு
எந்த அனுபவத்தையும் விட,
கொண்டு செல்கிறது.
***
103
எங்கு எழுத்துக்கள் சுதந்திரமாக
இருக்கின்றனவோ,
ஒவ்வொரு மனிதனும்
எங்கு படிக்க முடிகிறதோ,
அங்கு எல்லாமே நல்ல நிலையில்
இருப்பதாகத்தான் அர்த்தம்.
***
104
மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால்,
நல்ல உடல் நலம் இருக்க வேண்டும்...
மோசமான ஞாபக சக்தி இருக்க வேண்டும்.
***
105
ஒரு செயல் சிறப்பான முறையில்
நடைபெற வேண்டுமென்றால்,
ஒரு நூறு கெட்ட செயல்கள்
மறக்கப்பட வேண்டும்.
***
106
இளம் தோள்களில் வயதான
தலைகளைப் பொருத்துவது
மிகவும் சிரமமான விஷயம்.
***
107
தன்னுடைய நல்ல எதிர்காலத்தைத்
தெரிந்து வைத்திருப்பவன்,
சந்தோஷமானவனாக இருப்பான்.
***
108
எவன் சந்தோஷங்கள் நிறைந்த
இதயத்தைக் கொண்டிருக்கிறானோ,
அவன் தொடர்ந்து விருந்து உண்பதற்கு
நிகரானவனாக இருப்பான்.
***
109
ஒரு பணம் நிறைந்த பர்ஸை விட
ஒரு சந்தோஷம் நிறைந்த
இதயம் மேலானது.
***
110
விருந்தாளிகளை சந்தோஷப்படுத்துவதை
மறந்து விடாதீர்கள். அதன் மூலம்
தங்களுக்கே தெரியாமல் சிலர்,
தேவதைகளை சந்தோஷப்படுத்தி
இருக்கலாம்.
***
111
ஒரு கடனை விட,
அன்பு அதிகமாக
பிணைக்கக் கூடியது.
***
112
ஒரு நல்ல சிரிப்பு ஒரு வீட்டின்
சூரியோதயமாக இருக்கிறது.
***
113
கேள்விகளைக் கேட்பதன் மூலம்
ஒரு மனிதன் நிறைய
கற்றுக் கொள்ள முடியும்.
***
114
கூர்ந்து கவனிப்பதற்கான
அருளை எங்களுக்குத் தா.
***
115
நீ அன்பு செலுத்தப்பட
வேண்டுமென்றால்,
நீ அன்பு நிறைந்தவனாகவும்,
அன்பு செலுத்துபவனாகவும் இரு.
***
116
மேலான நிலையில் இருக்கும்
மனிதன் தேடுவது
அவனுக்குள் இருக்கிறது.
சாதாரண மனிதன் தேடுவது
மற்றவர்களிடம் இருக்கிறது.
***
117
நிமிடங்கள் விஷயத்தில்
மிகவும் கவனமாக இருங்கள்.
மணிகள் தங்களைத் தாங்களே
பார்த்துக் கொள்ளும்.
***
118
எவன் மற்றவர்களுக்கு
தீங்கு செய்ய நினைக்கின்றானோ,
அவன் தனக்குத் தானே
அழிவைத் தேடிக் கொள்கிறான்.
***
119
நினைவுச் சின்னங்கள்
மிக உயர்ந்தவைதாம்.
நம் வாழ்க்கைகள் தகுதி
உடையவையாக இருக்கும் பட்சம்,
நம் நினைவுகளில் அவை இருக்கும்.
***
120
விருந்து வைத்திருக்கும்
வீட்டிற்குச் செல்வதை விட,
துக்க வீட்டிற்குச் செல்வது சிறந்தது.
***
121
நம் நண்பர்கள் இல்லாமல்
நாம் உயிர் வாழ்ந்து விட முடியும்.
ஆனால், பக்கத்து வீட்டுக்காரர்கள்
இல்லாமல் நாம் வாழ முடியாது.
***
122
அமைதிக்குப் பதிலாக போரைத் தேர்ந்தெடுக்கும்
அளவிற்கு யாரும் முட்டாள் அல்ல.
அமைதித் தன்மையின்போது,
மகன்கள் தந்தைகளைப் புதைக்கிறார்கள்.
ஆனால், போரில் தந்தைகள்,
மகன்களைப் புதைக்கிறார்கள்.
***
123
எந்த மனிதன் தான் தீர்மானிப்பதற்கு
முன்பு எதுவுமே தெளிவாக
இருக்க வேண்டும் என்று
கட்டாயம் நினைக்கின்றானோ,
அவன் எந்தச் சமயத்திலும்
தீர்மானிக்கவே மாட்டான்.
வாழ்வை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
வருத்தங்களையும் கட்டாயம்
ஏற்றுக் கொள்ள வேண்டும்.
***
124
அதிகமான அளவில்
அதிகமான சந்தோஷத்தை
அளிக்கக் கூடிய செயல் எதுவோ,
அந்த செயல் மிக சிறந்த ஒன்றே.
***
125
ஒரு குருவியின் இளமையை விட
கழுகின் முதுமை உயர்ந்தது.
***
126
பொது அறிவு, வெளிப்படையான
செயலாற்றும் போக்கு –
இவைதான் மனிதர்களை வியப்படைய
வைக்கும் விஷயங்கள்.
***
127
ஒரு மென்மையான பதில்
கோபத்தை விரட்டியடிக்கிறது.
அதே நேரத்தில் - கடுமையான வார்த்தைகள்
கோபத்தை உண்டாக்கும்.
***
128
எதிர்ப்பார்ப்புடன் திறந்து,
ஆதாயத்துடன் எந்தப்
புத்தகத்தை மூடுகிறோமோ,
அதுதான் ஒரு நல்ல புத்தகம்.
***
129
பகிர்ந்து கொள்வதற்காக
இருப்பதே மகிழ்ச்சி.
***
130
நீ என்ன விரும்புகிறாயோ,
அது உனக்குக் கிடைக்க
வில்லையென்றால்,
எது உனக்கு கிடைத்திருக்கிறதோ,
அதை நீ விரும்ப வேண்டும்.
***
131
முட்டாளின் இதயம் அவனுடைய
வாயில் இருக்கிறது.
ஆனால், புத்திசாலியின் வாய்
அவனுடைய இதயத்தில் இருக்கிறது.
***
132
ப்ளம் மரம் எந்த அளவிற்கு
உயரமாக இருக்கின்றதோ,
அந்த அளவிற்கு ப்ளம்,
நன்கு பழுத்திருக்கும்.
***
133
புலர்காலைப் பொழுதிற்கு
சற்று முன்னால்
இருப்பதுதான் இருட்டு.
***
134
அந்நியான செயல்கள் செய்வதன் மூலம்
உண்டாகும் துன்பத்தை விட, அதை செய்வது-
மிகவும் கேவலமான விஷயமாகும்.
***
135
கடுமையாக உழைக்கும்
ஒரு மனிதனின் தூக்கம்
இனிமையானது.
***
136
பிள்ளைகள் தங்களின் பெற்றோரை
எப்போது சரி செய்கிறார்களோ,
அப்போது சட்டம் சந்தோஷப்படுகிறது.
***
137
பெரும்பாலான கடுமையான
பொய்கள் அமைதியான
சூழ்நிலையில்தான் கூறப்படுகின்றன.
***
138
கடவுளின் பக்கம் எது இருக்கிறதோ,
அதுதான் பெரும் பலம் கொண்டது.
***
139
செயல்களைக் கொண்ட
மனிதனாக இல்லாமல்
வார்த்தைகளைக் கொண்ட
மனிதனாக இருப்பவன்,
களைகளால் நிறைந்திருக்கும்
ஒரு தோட்டத்திற்கு ஒப்பானவன்.
***
140
தனக்கு எஜமானனாக
எவன் இருக்கிறானோ,
அவன் வெகு சீக்கிரமே
மற்றவர்களுக்கு எஜமானனாக
ஆகி விடுவான்.
***
141
காயம் பட்டவர்களுக்கு
மட்டுமே எப்போதும் கெட்ட நேரம்
வந்து சேரும் என்று கூறுவதற்கில்லை.
***
142
எல்லா பொருட்களும்
மண்ணிலிருந்துதான் பிறக்கின்றன.
அனைத்துப் பொருட்களையும்
திரும்பவும் மண்ணே
எடுத்துக் கொள்கிறது.
***
143
கடவுளே கூட
இரண்டு மலைகளை
அவற்றிற்கு நடுவில்
ஒரு பள்ளம் இல்லாமல்
உருவாக்க முடியாது.
***
144
எங்கு இசை இருக்கிறதோ,
அங்கு தவறான
செயல்கள் நடைபெறாது.
***
145
அதிகமான வயது அல்ல –
கூர்மையான பார்வைதான்
அறிவைக் கொண்டு வரும்.
***
146
பிறரிடம் பார்க்கும்
நல்ல விஷயங்களை
நீ விரும்ப ஆரம்பித்தால்,
அவற்றை உன்னிடம்
நீ உண்டாக்கிக் கொள்வாய்.
***
147
உன்னிடம் சில கவிதைத்
தன்மைகளை உண்டாக்காமல்,
உன்னால் எந்த இடத்திலும்
கவிதையைப் பார்க்க முடியாது.
***
148
மிகப் பெரிய மரம்
பலமான காற்றை
தன்னை நோக்கி
வரச் செய்கிறது.
***
149
மனிதர்களிடம் நம்பிக்கை வை.
அவர்கள் உனக்கு
உண்மையுள்ளவர்களாக இருப்பார்கள்.
அவர்களை உயர்வாக நடத்து.
அவர்கள் உயர்வானவர்களாக
நடந்து கொள்வார்கள்.
***
150
இடைவெளி அன்பை கூர்மைப்படுத்துகிறது.
இருத்தல் அதிக உறுதியனாதாக ஆக்குகிறது.
***
