51
கடவுள் தன்னுடைய
சொர்க்கத்தில் இருக்கிறார்.
உலகில்
உள்ள அனைத்தும்
ஒழுங்காக இருக்கின்றன.
***
52
குழந்தையின் எதிர்கால விதி
எப்போதும்
ஒரு தாயின் செயலில்தான்
இருக்கிறது.
***
53
சுதந்திரமாக
ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும்
கடலை விட,
சர்வாதிகாரத் தன்மையில்
நிலவும்
அமைதியைத்தான்
பிடிவாதக்கார மனிதர்கள்
விரும்புவார்கள்.
***
54
வாழ்க்கைக்கு நாம்
ஒரு புதிய விதியை
உண்டாக்குவோம்.
எந்த அளவிற்கு தேவையோ,
அதைவிட சற்று
அதிகமான அன்புடன்
எப்போதும் இருப்பதே அது.
***
55
எந்தச் சந்தையிலும்,
நூறு முனகல்களுக்கு
நிகரானது ஒரு சிரிப்பு.
***
56
சந்தோஷத்திற்கான
எல்லா வாய்ப்புகளையும்
இயற்கை உருவாக்கித் தருகின்றது.
ஆனால், அதை எப்படி
பயன்படுத்திக் கொள்வது
என்ற விஷயம்
அவர்களுக்கு தெரிய வேண்டும்.
***
57
ஒரு மனிதன்
எந்த அளவிற்கு
காயமுற்றானோ,
அந்த அளவிற்கு எளிதில்
அவன் குணமடைந்து விட
முடியாது.
***
58
எங்கு உங்களின்
பொக்கிஷம் இருக்கிறதோ,
அங்குதான் உங்களின்
இதயம் இருக்கும்.
***
59
எங்கோ தூரத்தில்
மாமிசத்தை வறுப்பதை விட,
வீட்டில் ரொட்டியை
காய வைப்பது மேலானது.
***
60
காலை உணவிற்கு
முந்தைய ஒரு மணி நேரம்,
எஞ்சிய நாளின்
இரண்டு மடங்கிற்கு நிகரானது.
***
61
அறிவே இல்லாத
ஒரு மனிதன்
இறந்து போன
மனிதனுக்கு ஒப்பானவன்.
***
62
இப்போதைய இனிய
சந்தோஷங்களை
கவலைகள்
நினைத்துப் பார்க்கும்.
***
63
உன்னுடைய
கஞ்சியை ஆற
வைப்பதற்கு
உன் மூச்சை வைத்திரு.
***
64
யார்
அறிவிற்காக தாகத்துடன்
இருக்கிறார்களோ,
அவர்களுக்கு அது கிடைக்கும்.
***
65
ஒரு மனிதன்
இதயத்தில் என்ன
எழுதப் பட்டிருக்கிறதோ,
அதைக் கொண்ட அவனுக்கான
சட்டம் பற்றிய நூல்
எங்கே இருக்கிறது?
***
66
ஏமாற்றுக்காரர்கள்
பிறரின் மீது ஆதிக்கம்
செலுத்துவதில் ஆரம்பித்து,
தங்களைத் தாங்களே
ஏமாற்றிக் கொள்வதில்
முடிக்கிறார்கள்.
***
67
நம் வாழ்வின்
வலையே
நல்லது, கெட்டது
எல்லாம் கலந்த
நூல்களால் ஆனதுதான்.
***
68
அன்பில்
பயம் என்பதே இல்லை.
ஆனால்,
உண்மையான அன்பு
பயத்தை
விரட்டியடித்து விடும்.
***
69
பெரும்பாலானவர்களின்
கருத்துதான், எது சரி
என்பதற்கான இறுதி முடிவு அல்ல.
***
70
ஒரு மனிதன்
தன்னைத் தானே
எந்த அளவிற்கு எடை போட்டு
வைத்திருக்கிறானோ,
அதற்கேற்றபடிதான்
அவன் மதிப்பிடப் படுகிறான்.
***
71
ஒவ்வொரு மனிதனும்
ஒரு முதலாளியும்,
ஒரு வேலைக்காரனும்....
இரண்டுமேதான்.
***
72
ஒரு கவலையில் இருக்கும் மனிதன்
எவ்வளவு நாட்கள் வாழ்கிறானோ,
அவ்வளவு நாட்கள்
ஒரு சந்தோஷத்தில் திளைக்கும்
மனிதனும் வாழ்கிறான்.
***
73
அவசரத்தால்தான்
தவறுகள் உண்டாகின்றன.
எதையும் நிதானமாக
செய்வதன் மூலம்
எந்த சமயத்திலும்
அது உண்டாவதில்லை.
***
74
பணம் தன்னுடைய
வேலைக்காரனாக
இல்லையென்றால்.
அது உன்னுடைய
முதலாளியாக இருக்கும்.
***
75
காதால் கேட்கும் பாடல்கள்
இனியனவாக இருக்கலாம்.
ஆனால்,
இன்னும் கேட்காமல் இருப்பவை,
கேட்ட பாடல்களை விட
மிகவும் இனிமையானவை.
***
76
பிறரை வேதனைப்பட
செய்யாதீர்கள்.
அதே போல
மற்றவர்களிடமிருந்து
வேதனைகளை
வாங்கவும் செய்யாதீர்கள்.
***
77
என்ன காரணத்திற்காக என்று
உனக்கு தெரியாமல் இருக்கும் பட்சம்,
நீ ஒரு மனிதனைப் பற்றி கேவலமாக
எந்த சமயத்திலும் பேசாதே.
அது ஒரு காரணத்திற்காகத்தான் என்று
உனக்கு தெரியும் பட்சம்,
உனக்குள் நீயே கேட்டுக் கொள்:
'நான் ஏன் இதை கூற வேண்டும்?'
***
78
நாம் எல்லோருமே ஏதோ ஒரு வகையில்
மிருகத்தனமாக நடந்து கொள்ள தயாராக இருக்கிறோம்.
ஒரு கெட்ட மனிதனுக்கும், ஒரு நல்ல மனிதனுக்குமிடையே
உள்ள வித்தியாசமே - அதை தேர்ந்தெடுப்பதற்கான
காரணத்தில்தான் இருக்கிறது.
***
79
இந்த வாழ்வின் பெரும்பாலான
நிழல்கள் நம்முடைய சொந்த சூரியோதயத்தில்
நிற்பதால் உண்டாகுபவைதான்.
***
80
ஒரு சிங்கத்தின் கர்ஜனையை விட
ஒரு அழகான பெண்ணின் முனகள்
சத்தம் நீண்ட தூரம் கேட்கும்.
***
81
மேல் நாட்டு தத்துவ ஞானிகள் கூறுவார்கள்:
'நான் எதை கொடுத்தேனோ, அதை வைத்திருந்தேன்.
நான் எதை செலவழித்தேனோ, அதை வைத்திருந்தேன்.
எதை வைத்திருந்தேனோ, அதை இழந்து விட்டேன்.’
***
82
ஒரு சூரியனை நோக்கி சுடுபவன்,
ஒரு மரத்தை நோக்கி சுடுபவனை விட
உயரமாக சுடுவான்.
***
83
எது அழகாக இருக்கிறதோ,
அது நல்லது. அதே போல
எது நல்லதாக இருக்கிறதோ,
அது மிக விரைவில்
அழகானதாக ஆகி விடும்.
***
84
எந்தவொரு மனிதனும்
அவன் தன் மனதில்
நினைத்துக் கொண்டிருக்கும்
அளவிற்கு எந்த சமயத்திலும்
மிகவும் சந்தோஷமான மனிதனாகவோ,
மிகவும் கவலைகள் நிறைந்த
மனிதனாகவோ இருக்க முடியாது.
***
85
ஒரு பரந்த மனம் எப்போதும்
போவதற்கு தயாராக இருக்கும்.
அதற்கு எந்தவொரு
ஆயத்தமும் தேவையில்லை.
***
86
நல்ல நிலையில் இருக்கும்
நாய்க்கு உதவுவதைவிட,
நொண்டியாக இருக்கும் நாய்க்கு
எப்போதும் உதவுங்கள்.
***
87
மரியாதைக்குரிய இடத்தில்
இருக்கும் மனிதர்களுக்கு
ஒரு சொல் என்பது
ஒரு விலங்கைப் போன்றது.
***
88
அன்பு இல்லாத இடத்தில்
உண்மையான புனிதத்தன்மைக்கு
இடமே இல்லை.
***
89
உண்மைக்கு மிகவும் அருகில்
வரக்கூடிய ஒரு நகைச்சுவை,
ஒரு அடையாளத்தை பின்னால்
விட்டு விட்டே செல்கிறது.
***
90
நாம் எல்லோருமே
பாவச் செயல்கள்
செய்திருப்பவர்கள்தாம்.
தீர்ப்பு கூறுவதில்
அவசரப் படாதீர்கள்.
***
91
எப்படி கற்றுக் கொள்ள வேண்டும்
என்பதை யார் தெரிந்து
வைத்திருக்கிறார்களோ,
அவர்கள் தேவையான அளவிற்கு
தெரிந்து வைத்திருப்பவர்களே.
***
92
ஒரு மனிதன் எப்படி வாழ்கிறானோ,
அதே மாதிரியே இறப்பான்.
ஒரு மரம் எப்படி கீழே விழுகிறதோ,
அப்படித்தான் அது கிடக்கும்.
***
93
உங்களுடைய கடிதங்களையே
திரும்பத் திரும்ப படித்துக்
கொண்டிருக்காதீர்கள்.
***
94
மலை முஹம்மதுவைத் தேடி
வரவில்லையென்றால்,
முஹம்மது கட்டாயம் மலையைத்
தேடிச் செல்ல வேண்டும்.
***
95
ஒரு தியாகியை
உருவாக்குவது மரணமல்ல –
அதற்கான காரணம்தான்.
***
96
குணமாவதில்
பெரும் பங்கு வகிப்பது
குணமாக வேண்டும்
என்ற விருப்பம்தான்.
***
97
கடவுள்களின் அரவை இயந்திரங்கள்
மெதுவாகத்தான் அரைக்கும்.
ஆனால், அவை மிகவும்
சிறப்பாக அரைக்கும்.
***
98
எந்த மனிதனும் ஒரு தவறை
செய்யத்தான் செய்வான்.
ஆனால், ஒரு முட்டாளைத் தவிர
வேறு யாரும் அதிலேயே வாழ்ந்து
கொண்டிருக்க மாட்டார்கள்.
***
99
உன்னால் ஒரு மலையை அளக்க
முடியவில்லையென்றால்,
ஒரு சமவெளியை உன்னால்
பார்க்கவே முடியாது.
***
100
இயற்கை ஒன்றையும்
அறிவு இன்னொன்றையும்
எந்த சமயத்திலும் கூறுவதில்லை.
***
