பொன்மொழிகள் 1



1.
ஒரு சந்தோஷமான

வாழ்க்கை என்பது

மனதின்

அமைதித்தன்மையைப்

பொறுத்தது.


***

2

எவன் ஒருவன்

பொறுமைசாலியாக

இருக்கிறானோ, அவன்

தான் நினைத்ததை

கட்டாயம் அடைவான்.

***

3

கிரீடங்களை விட

கனிந்த இதயங்கள்

மேலானவை.

***

4

நீ உன்னுடைய

நண்பனுக்கு பணம் தந்து

உதவ முடியாமற் போகும்பட்சம்,

ஒரு ஆறுதல்

வார்த்தையைக் கூறி

அவனுக்கு உதவலாம்.

***

5

உனக்கு

நிழல் தரும்

மரத்திற்கு

மரியாதை கொடு.

***

6

கற்றுக் கொள்வதற்கு

விருப்பமில்லாமல்

இருப்பதை விட,

அறியாமை

கொண்டவனாக இருப்பது

வெட்கப் படக் கூடிய

செயல் அல்ல.

***

7

நம்மிடம் இருக்கும்

சந்தோஷத்தைப்

பிறருடன் பங்கிட்டுக்

கொள்ளும்போது,

அந்த சந்தோஷமே

இரண்டு மடங்குகளாக

பெருகுகிறது.

***

8

நாமும் வாழ்ந்து,

பிறரையும் வாழ

வைப்பதுதான்

பொதுவான சட்டத்தின்

அடிப்படை.

***

9

அறிவு என்பது

சிறகைப் போன்றது.

அந்த சிறகைக் கொண்டு

நாம் சொர்க்கத்திற்கே

பறந்து செல்லலாம்.

***

10

ஒருவன் என்றைக்கு

சிரிக்காமலே

இருக்கிறானோ,

அந்த நாள் தொலைந்து

போன நாளே.

***

11

எவன் ஏழைகளுக்கு

கடன் தருகிறானோ,

அவனுக்கு

கடவுளிடமிருந்து

வட்டி கிடைக்கும்.

***

12

வாழ்வின் ரகசியம் என்பது -

நீ என்ன நினைக்கிறாயோ,

அதை செய்யாமல்

இருப்பது அல்ல.

எதை செய்யப் போகிறாயோ,

அதை விரும்புவதுதான்.

***

13

அதிர்ஷ்டத்தின்

விளையாட்டுதான்

ஒரு மனிதனின்

வாழ்க்கை.

***

14

மனித வாழ்க்கை மீது

ஆண் கொள்ளும் விருப்பம்

ஒரு பகுதியாக இருக்கலாம்.

ஆனால்,  முழு இருத்தலுமே

பெண்ணுக்கு

அதில்தான் இருக்கிறது.

***

15

பழக்க, வழக்கங்களும்

சம்பிரதாயங்களும்

வேறுபடலாம்.

ஆனால்,  மனிதனின்

இயற்கை குணம் ஒன்றுதான்.

***

16

கடவுள்

எவற்றையெல்லாம்

ஒன்று சேர்த்து வைத்திருக்கிறாரோ,

அதை மனிதன்

பிரிக்காமல் இருக்க வேண்டும்.

***

17

ஒரு மனிதன்

ஒரு பெண்ணை காதலிக்க,

ஒரு பெண் ஒரு ஆணைக் காதலிக்க -

அப்போது சொர்க்கத்திலிருந்து

தேவதைகள் புறப்பட்டு வந்து

அவர்கள் இருக்கும் வீட்டில் அமர்ந்து,

அவர்களின் சந்தோஷத்திற்காக பாடுவார்கள்.

***

18

பிறரின் வீழ்ச்சியிலிருந்து,

நீ தவிர்க்க வேண்டிய

பாவங்கள் என்ன என்பதைக்

கற்றுக் கொள்.

***

19

இது காலி பர்ஸ்தான்.

ஏனென்றால்,

இது முழுக்க

மற்ற மனிதர்களின்

பணம்தான் இருக்கிறது.

***

20

கடவுள்

எல்லா இடங்களிலும்

இருக்க முடியாது.

அதனால்தான் அவர்

அன்னைமார்களைப் படைத்தார்.

***

21

யார் தங்களின் கருத்துக்களை

எந்த சமயத்திலும்

திருத்திக் கொள்ளாமல்

இருக்கிறார்களோ,

அவர்கள் உண்மையின் மீது

கொள்ளும் விருப்பத்தை விட,

தங்களின் மீது

வைத்திருக்கும் விருப்பம்

அதிகமானது.

***

22

நம்முடைய மிகப் பெரிய சந்தோஷம் -

வாய்ப்பு நம்மை எப்படிப்பட்ட

வாழ்க்கையை வாழ

செய்திருக்கிறது என்பதில் இல்லை.

அதற்கு மாறாக, நல்ல

மனச்சாட்சியின் விளைவு,

நல்ல உடல் நலம், தொழில்,

ஈடுபடும் எல்லா

முயற்சிகளிலும் இருக்கக் கூடிய

முழுமையான சுதந்திரம்...

இவற்றில்தான் இருக்கிறது.

***

23

மனித இனத்திற்கு

பயனுள்ளவனாக இரு.

அதன்மூலம்

மனித உயிர்களின் மீது

அன்பு செலுத்துவதைப் பற்றி

தெரிந்து கொள்வாய்.

***

24

செயல்படாமல் இருப்பது

சிறிய ஆசைகளைக்

குறைத்து,

பெரிய ஆசைகளை

அதிகரிக்கச் செய்யும்.

***

25

சிந்திக்க தெரியாதவர்களுக்கு

கேளிக்கைதான்

சந்தோஷத்தை

அளிக்கக் கூடிய விஷயம்.

***

26

பகுத்தறிவு வாதிகளுக்கும்

மூடத்தனங்களுக்குமிடையே

சாத்தான்

உலகைப் பிரித்து

வைத்திருக்கிறது.

***

27

ஒவ்வொரு பேரத்தையும்

தெளிவாகவும் வெளிப்படையாகவும்

செய்யுங்கள்.

அப்படியென்றால்தான்,

பின்னர் யாரும் குறை கூறாமல் இருப்பார்கள்.

***

28

ஒரு மனிதனின்

செழிப்பான வாழ்வின்

இறுதியில்தான்,

நாம்

அவன் சந்தோஷமாக

இருப்பதாக கூறுவோம்.

***

29

நாம் எவற்றையெல்லாம்

வெறுக்கிறோமோ,

அதற்குக் கீழே நம்மை

பலமான வெறுப்பு நசுங்கிக்

கிடக்கும்படி செய்து விடும்.

***

30

இயற்கை, நேரம், பொறுமை -

இவை மூன்றுதான்

மிகச் சிறந்த மருத்துவர்கள்.

***

31

எல்லா விஷயங்களிலும்

அழகு என்ற ஒன்று இருக்கிறது.

ஆனால், எல்லோருமே

அதை பார்ப்பதில்லை.

***

32

ஒரு கழுகு

ஒரு புறாவை

அழிப்பது, புகழுக்குரிய

விஷயமல்ல.

***

33

எவன் தன்னைத்தானே

மிகவும் பெரிதாக

நினைத்துக் கொண்டிருக்கிறானோ,

அவன் தாழ்த்தப்படக் கூடியவன்.

எவன் தன்னைத் தானே

அடக்கமாக நினைத்துக்

கொண்டிருக்கிறானோ,

அவன் உயர்த்தப்படக் கூடியவன்.

***

34

ஒரு காயத்தை

உண்டாக்குவதை விட,

அதை பெற்றுக் கொள்வது

நல்லது.

***

35

பீப்பாயை வைத்து

ஒயினைப் பற்றி

நீ முடிவு செய்து

விட முடியாது.

***

36

ஒருவன் கற்க வேண்டிய

விஷயங்களை ஒப்பிட்டுப்

பார்க்கும்போது, எந்த மனிதனும்

புத்திசாலி இல்லை.

***

37

ஒரு பவுண்ட்

சட்டத்திற்கு நிகரானது

ஒரு பென்னி எடையைக்

கொண்ட அன்பு.

***

38

யார் சுதந்திரத்தை

விரும்புகிறார்களோ,

அவர்களுக்குத்தான்

கடவுள் சுதந்திரத்தை

அளிக்கிறார்.

***

39

ஒரு நீண்ட வாழ்க்கை

சிறந்ததாக இல்லாமல்

இருக்கலாம். ஆனால்,

ஒரு சிறந்த வாழ்க்கை

நீண்டு நிற்கக் கூடியது.

***

40

வெறுப்பு இருக்கும் இடத்தில்

ஒரு எருமையைக்

கொன்று வைக்கப்படும்

விருந்தை விட,

அன்பு இருக்கும் இடத்தில்

காய்கறிளை வைத்து

நடத்தப்படும் விருந்து

உயர்வானது.

***

41

மனித இதயத்திலேயே

புனிதமான விஷயம்

உண்மையாக இருப்பதுதான்.

***

42

ஒரு மனிதன் எப்படி நடந்து

கொள்ள வேண்டுமோ,

அப்படி நடப்பவன்தான்

மனிதன்.

***

43

திருமணங்கள்

சொர்க்கத்தில்

நிச்சயிக்கப் படுகின்றன.

***

44

ஒரு வீட்டின்

தலைவர்தான்

தன்னுடைய வீட்டிற்கு

மரியாதையைக்

கொண்டு வர வேண்டும்.

வீடு, அதன்

உரிமையாளருக்கு அல்ல.

***

45

மனம்தான்

புனிதமானதாக

இருக்க வேண்டும்.

குருதி அல்ல.

***

46

ஒரு கஞ்சனிடம்

எது இல்லாமல் இருக்கிறதோ,

அதைவிட

எது அவனிடம் இருக்கிறதோ -

அதுவே அவனுக்கு

உதவப் போவது இல்லை.

***

47

தாங்கள் பார்த்திராத

ஒன்றின் மீது யார்

இன்னும் நம்பிக்கையுடன்

இருக்கிறார்களோ,

அவர்கள்

ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்.

***

48

தன்னுடைய

குழந்தை அழும்போது,

ஒரு தாய் நடனத்திற்கான

இசையைக் கேட்க மாட்டாள்.

***

49

மிகவும் கொடூரம்

நிறைந்த அரக்கனின்

மனதில் அமைதியை

உண்டாக்கக் கூடிய

வசீகர தன்மைகள்

இசைக்கு இருக்கிறது.

***

50

எவன் ஆட்சி

செய்யப் படுவானோ,

அவனைத் தவிர

வேறு யாரும்

ஆட்சி செய்ய முடியாது.

***

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.