மனிதன் பரிணாமத்தின் படி
தோன்றியவனா ? - 2
6. சிலர் காடுகளில் வாழ்ந்த பண்டைய மனிதர்களின் முக தோற்றத்தையும், அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறைகளையும் சுட்டி காட்டி, மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான் என்பதற்கு இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? என கேட்கின்றனர். இவர்கள் சொல்வது போல் பண்டைய மனிதர்கள் காடுகளில் வாழ்ந்தவர்கள் அல்ல. மாறாக இன்றைய நவீன அறிவு அன்று இல்லாத காரணத்தால், அவர்களுக்கு தேவையான எல்லாவற்றையும் அவர்கள் இயற்கையில் இருந்து பெற வேண்டிய நிலை இருந்தது. அதனால் தான் மரங்கள், விலங்குகள், மலைகள் அதிகமாக இருந்த இடங்களில் அவர்கள் வாழ்ந்தார்கள். இப்படி இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தவர்களை தான் இன்றைய நவீன கால நாம் காடுகளில் வாழ்ந்தவர்கள் என்று கேவலமாக சொல்கிறோம். மேலும் இன்றைய நவீன கால கருவிகள் அன்று கண்டு பிடிக்கப்படவில்லை என்பதால் தான், அவர்கள் இலைகளையும், விலங்குகளின் தோல்களையும் ஆடைகளாக அணிந்தார்கள். அன்று இயற்கை பாதிப்படையாமல் இருந்ததால் அவர்கள் உடலில் ரோமங்கள் அதிகம் வளர்ந்தன. நாம் இப்போது அணிகின்ற ஆடைகள் எல்லாமே வேதி பொருள்களால் ஆனவைகள் அல்லது வேதி பொருட்களை பயன் படுத்தி தயாரிக்கப்பட்டவைகள். எனவே தான் உடலில் ரோமங்களை இழந்தது மட்டுமல்லாமல் தலையில் கூட முடிகளை இழந்து வருகிறோம். ( நான் படித்தது வேதியல் பாடத்தை தான். என்னுடைய அறிவிற்கு எட்டியதின் படி இன்று பெண்களுக்கு வருகின்ற மார்பக புற்று நோய்க்கு பல காரணங்கள் இருந்தாலும் ஒரு முக்கியமான காரணம் அவர்கள் இறுக்கமாக அணிகின்ற உள்ளாடை தான். காரணம் அதில் பயன்படுத்துகின்ற வேதி பொருள்கள் தான் வருடங்கள் ஆக ஆக பாதிப்பை ஏற்படுத்துகிறது. தொழில் பாதிக்கும் என்பதால் யாரும் இதை சொல்வதில்லை.) மேலும் வாகனங்கள் கண்டு பிடிக்க படாததினால் மக்கள் குறிப்பிட்ட இடங்களில் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தார்கள். அதுபோல் எழுத்துக்களும், மொழிகளும் கண்டு பிடிக்க படாததினால் பலவிதமான ஒலிகளை எழுப்பி தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தி வந்தார்கள். இன்றைய நவீன சமையல் முறைகள் இல்லாததினால் காய்கறிகளையும், இறைச்சிகளையும் பச்சையாகவும் சுட்டும் சாப்பிட்டார்கள். இப்படி சொல்லி கொண்டே போகலாம். நாமும் ஆடை முதல் உணவு வரை அவர்கள் செய்ததைத்தான் இன்றும் செய்கிறோம். ஆனால் கொஞ்சம் மாறுதலாக. மேலும் ஆரோக்கியத்தையும், அன்பையும் விஞ்ஞானம் என்று சொல்லி இழந்து நிற்கிற நாம் ஆரோக்கியமாகவும், அன்பாகவும் வாழ்ந்த அவர்களை காட்டு வாசிகள் என்று சொல்கிறோம்.
இதில் நான் சொல்ல வந்த செய்தி என்னவென்றால் இன்றைய மனிதர்களாகிய நாம் குழந்தை பிறந்தது முதல் மூன்று, நான்கு வயது வரை அவர்களின் தலை, கழுத்து, மூக்கு, முகம், கை கால்கள் எல்லாவற்றையும் குழந்தையின் உடலுக்கு சரியான வடிவம் கிடைப்பதற்காக தடவி விடுகிறோம். பற்கள் நீண்டு விடாமல் இருக்க வாயை அடிக்கடி மூட சொல்கிறோம். அப்போது தான் குழந்தை வளர வளர உடல் அழகான ஒரு தோற்றத்திற்கு வருகிறது. நாம் இப்படி செய்யாவிட்டால் குழந்தையின் உடல் அமைப்பும், முகமும் விகாரமாக மாறி விடும். இது நாம் அனைவரும் கண்கூடாக கண்ட உண்மை. இந்த முறையை நாம் மருத்துவ வளர்ச்சியின் காரணமாக பெற்றிருக்கிறோம். ஆனால் பண்டைய மனிதர்கள் நாம் பெற்ற அளவுக்கு இந்த மருத்துவ அறிவை பெறவில்லை. அதனால் குழந்தைகள் பிறந்தது முதல் அப்படியே வளர ஆரம்பித்ததால், அவர்களுடைய முகமும் உடலும் ஒரு வடிவம் பெறாமலேயே வளர்ந்தது. விகாரமாக காட்சி அளித்தது. இன்று நாமும் நம்முடைய குழந்தையை தொடாமல் வெறும் உணவு மட்டும் கொடுத்து வளர்த்து வந்தால், அந்த குழந்தை வளர்ந்த பின்பு பண்டைய நியாண்டர்தால் மனிதன் போல தான் காட்சியளிப்பான். இதை யாரவது மறுத்து பேச முடியுமா? இவ்வாறு குழந்தைகளுடைய குணங்களும், உடல் அமைப்பும் அவர்கள் வாழ்கின்ற இடத்தின் தன்மைக்கேற்பவும் அவர்களின் உணவு பழக்கங்களுக்கேற்பவும், அவர்கள் பெற்று கொள்ளும் அறிவிற்கேற்பவும் தான் மாறுகின்றன. இதை இன்றைய விஞ்ஞானத்தால் நிரூபிக்க முடியும்.
இன்று கிராமங்களில் வாழ்கின்ற மனிதர்களின் உடல் அமைப்பும், பழக்க வழக்கங்களும், நகரங்களில் வாழ்கின்ற மனிதர்களின் உடல் அமைப்பும் பழக்க வழக்கங்களும் ஒன்றுக்கொண்டு மாறுபட்டிருப்பதை நாம் எல்லோரும் பார்த்திருக்கிறோம். அதுபோல பெரியவர்களுக்கு தொந்தி என்று சொல்லப்படுகின்ற வயிற்றின் அமைப்பு வெள்ளைக்காரர்களுக்கு 10 இல் மூவருக்கு இருக்கிறது. ஆனால் இந்தியர்களுக்கு 10 இல் ஏழு பேருக்கு இருக்கிறது. எனவே இந்த தொந்தியை வைத்து கொண்டு வெள்ளைக்காரர்கள் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவர்கள் என்றும், இந்தியர்கள் யானையில் இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவர்கள் என்றும் யாராவது கூறமுடியுமா? இந்த தொந்தி எதனால் வருகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அந்தந்த நாட்டின் சீதோஷண அமைப்புக்கும், உணவு பழக்க வழக்கத்திற்கு ஏற்பவும் தான் மனிதனின் உடல் அமைப்பு மாறுகிறது. அதுபோல் இந்தியர்களில் 6 அடி மனிதர்களை பார்ப்பது மிக குறைவு. ஆனால் ஜெர்மனியர்களில் 6 அடிக்கும் குறைவான மனிதர்களை பார்ப்பது மிக குறைவு. இவ்வாறு நாம் சாப்பிடுகின்ற உணவுக்கேற்ப தான் நம்முடைய உடலும் எலும்புகளும் மாற்றம் பெறுகிறது என்பது மருத்துவ விஞ்ஞானத்தின் உண்மை. உதாரணத்திற்கு பிறந்ததிலிருந்து தாய் பால் குடிக்காமல் பசுவின் பாலை மட்டும் குடித்து வளர்கின்ற குழந்தைக்கு கால்சியம் சத்து அதிகமாக கிடைப்பதால் எலும்பு மற்றும் பற்கள் அதிகம் வளர்ச்சி பெறுகின்றன என்பது மருத்துவ உண்மை. ( பசு பால்- கால்சியம் 12 % , தாய் பால் - கால்சியம் 0.03 % ) எனவே பண்டைய மனிதனின் உணவு பழக்கத்தினால் அவனுடைய உடல் அமைப்பும், எலும்புகளும் இன்றைய மனிதனின் உடல் அமைப்பையும் எலும்புகளையும் விட மாற்றம் பெற்றிருந்தது என்பதே உண்மை. இதை எல்லாம் இன்றைய மனிதன் அறிந்திருந்தும், மனிதன் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்து வந்தவன் என்று சொன்னால் இதை என்ன சொல்ல முடியும்? எனவே உடல் அமைப்பின் படி சிந்திக்காமல் அறிவின் படி சிந்தியுங்கள்.
ஒரு உயிரி பூமியின் தகவமைப்புக்கேற்ப தன்னை படிப்படியாக மாற்றிக்கொள்கிறது என்று பரிணாம வளர்ச்சிக்கு அவர்கள் ஆதாரமாக காட்டுவது உயிரினங்களின் எலும்புகளின் அமைப்பையும், உடலின் அமைப்பையும் மட்டுமே. ஆனால் ஆதாரமாக அறிவை காட்டுவதில்லை. அப்படியானால் பகுத்தறிவு என்று சொல்லக்கூடிய மனித அறிவு எந்த பரிணாமத்தின் படி குரங்கிலிருந்து மனிதனுக்கு வந்தது? உடல் படிப்படியாக வந்தது என்றால் பகுத்தறிவும் படிப்படியாக தானே வந்திருக்க வேண்டும்? ஆனால் நமக்கு தெரிந்திருந்த படி ஒரு பாம்புக்கும், குரங்குக்கும் உடல் அளவில் தான் வித்தியாசமே தவிர அறிவில் வித்தியாசம் இல்லையே? ஒருவேளை பகுத்தறிவு என்பது மனிதன் தோன்றியவுடன் மாயாஜாலம் போல் அவனுக்குள் உடனே வந்து விட்டதா?
7. பகுத்தறிவு என்பது மனிதனுக்கு பரிணாமத்தின் படி வருவதல்ல அது மனிதனுக்கு மட்டும் கடவுளால் கொடுக்கப்பட்ட விசேஷித்த தன்மை. பரிணாமத்தின் படி பகுத்தறிவு இப்படி வருகிறது என்று யாராலும் சொல்ல முடியாது. காரணம் பகுத்தறிவு என்பது எந்த உடல் உறுப்பிலிருந்து தோன்றுவதும் கிடையாது, எந்த உடல் உறுப்பும் பகுத்தறிவாய் மாறுவதும் கிடையாது. மூளையில் இருந்து தோன்றுகிறது என்றால் நாய்க்கும் பூனைக்கும் மூளை இருக்கத்தானே செய்கிறது. ஆனால் அவைகளால் சிந்திக்க முடிவதில்லையே. மனித அறிவின் படி மனிதன் பிரித்து வைத்திருக்கிற ஒவ்வொரு அறிவுக்கும் ஒரு உடல் உறுப்பு அவசியம். ஓரறிவு தொடுதல் உணர்வுடையது. இதற்கு உடல் அவசியம். இரண்டாம் அறிவு சுவை அறிதல். இதற்கு நாக்கு அவசியம். மூன்றாம் அறிவு நுகர்தல். இதற்கு மூக்கு அவசியம். நான்காம் அறிவு பார்வை. இதற்கு கண் அவசியம். ஐந்தாம் அறிவு கேட்கும் அறிவு. இதற்கு காது அவசியம். ஆனால் ஆறாம் அறிவுக்கு அல்லது பகுத்து அறிவதற்கு எந்த உடல் உறுப்பு அவசியம் யாராவது சொல்ல முடியுமா? மனிதனும் ஐந்து அறிவு உயிரினம் தான். ஆனால் இந்த பகுத்தறிவினால் தான் எல்லா உயிரினங்களிடமிருந்தும் மனிதன் வேறுபட்டு இருக்கிறான். இந்த பகுத்தறிவால் தான் மனிதனுக்கு இத்தனை சந்தேகங்களும் வந்திருக்கிறது. ஐந்தறிவு குரங்கோ, யானையோ, நாயோ அது எதிலிருந்து தோன்றியது என்று சிந்தித்து கொண்டிருக்கிறதா? பிறப்பு இறப்பை பற்றி சிந்தித்து கொண்டிருக்கிறதா? அதன் குட்டிகளுக்கு சொத்து சேர்த்து வைக்கிறதா? இதைவிட மிகப்பெரிய கேள்வி மனிதன் உடை அணிவதை பார்த்து மனிதனை போல் அவைகள் உடை அணிகிறதா? பார்த்து கொண்டிருப்பவைகளையே அவைகளால் செய்ய முடியாத போது, சிந்திப்பது என்பது எங்கே இருந்து வரும்?
8. இன்று மனிதனின் உடல் அமைப்பையும், விலங்குகளின் உடல் அமைப்பையும் வைத்தது ஆராய்ந்து கொண்டிருக்கிற மனிதன் அதே உடல் உறுப்புகளை மாற்றி பொருத்தி ஒரு குரங்கை மனிதனாக மாற்றி காட்ட முடியுமா? மனித உடல் உறுப்புகள் எல்லாவற்றையும் வெட்டி எடுத்து குரங்குக்கு பொருத்தங்கள். ஏன் மூளையை கூட பொருத்தி பாருங்கள். குரங்கு ஒரு போதும் மனிதனாக மாறவே மாறாது. உயிரினங்களில் பன்றியின் இதயம் மட்டுமே மனிதனுக்கு பொருந்தும் என்று சோதனைகளின் மூலமாக உறுதிப்படுத்திய விஞ்ஞானம், மனித மூளையை பன்றிக்கு பொருத்தி அதை சிந்திக்க வைக்க முடியுமா? கண்ணுக்கு தெரிகின்ற உடல் உறுப்புகளை எல்லாம் வெட்டி எடுத்து இன்றைய நவீன விஞ்ஞானத்தின் வழியாக விலங்குகளுக்கும் மனிதனுக்கு மாற்றி மாற்றி பொருத்தலாம். ஆனால் கண்ணுக்கு தெரியாத பகுத்தறிவை எங்கிருந்து வெட்டி எடுத்து மாற்றுவது.
9. பரிசுத்த வேதாகமத்தின் படி மனிதனுக்கு பகுத்தறிவை கொடுப்பது மனிதனின் ஆன்மா. அது மனிதனுக்கு கடவுளிடமிருந்து கடவுளால் மட்டுமே கொடுக்கப்பட்டது. உலகின் வேறு எந்த உயிரினங்களுக்கும் இந்த ஆன்மா கொடுக்கப்படவில்லை. உடல் அழிந்தாலும் இந்த ஆன்மா அழிவதே இல்லை. அழிவே இல்லாதவரிடமிருந்து அது வந்ததால் அந்த ஆன்மாவுக்கும் அழிவு இல்லை. மனிதனின் இந்த ஆன்மா மூன்று முக்கிய செயல்களை செய்கிறது. அவைகள் 1. சுதந்திரம் 2. எல்லாவற்றிலும் சிந்தித்து செயல்படுதல் 3. எல்லாவற்றையும் ஆண்டு கொள்வது. இந்த மூன்று செயல்களும் மனிதனின் எந்த உடல் உறுப்பில் இருந்தும் வருவது கிடையாது. மாறாக மனிதனின் ஆன்மா தான் இவைகளை மனிதனுக்குள் செயல்படுத்துகிறது. இந்த மூன்றும் பரிணாமத்தின் படியும் மனிதனுக்கு வரவே முடியாது. ஏனென்றால் பரிணாம வளர்ச்சியில் உயிரினங்களுக்கு ஏற்கனவே இருக்கிற ஓன்று தான் பூமியின் தகவமைப்புக்கேற்ப இன்னொன்றாக மாறுகிறது. உதாரணத்திற்கு மீனுக்கு இருக்கிற செவுள்கள் மனிதனுக்கு நுரையீரலாக மாறியது என்று வைத்து கொள்வோம். மீனுக்கு இருக்கிற துடுப்புகள் பறவைகளுக்கு இறக்கைகளாக மாறி மனிதனுக்கு கைகளாக மாறியது என்று வைத்து கொள்வோம். ஆனால் மீனுக்கோ குரங்குக்கோ இல்லாத இந்த மூன்றும் மனிதனுக்குள் எப்படி வரமுடியும்? சிந்தித்து பாருங்கள். இந்த மூன்றினால் தான் மனிதன் பாவம் உட்பட எல்லாவற்றிலும் சுதந்தரமாக இருக்கிறான். எல்லாவற்றிலும் சிந்தித்து பார்த்து செயல் படுகிறான். எல்லாவற்றையும் ஆளவேண்டும் என்று நினைக்கிறான். ஆளவும் செய்கிறான். இந்த மூன்றையும் பற்றி பிறகு விரிவாக தெரிந்து கொள்ளலாம். சிலர் சொல்கிறார்கள் ஆன்மா என்று ஓன்று கிடையாது. அப்படியானால் விலங்குகளை போல உடலும் உயிரும் கொண்ட மனிதனுக்கு மட்டும் இந்த மூன்று தன்மைகள் எப்படி வந்தது? விளக்கம் தாருங்கள். குறைந்த பட்சம் பூமியில் தோன்றிய எல்லா உயிரினங்களும் பிறந்த மேனியாகவே இருக்கும் போது மனிதனுக்கு மட்டும் ஆடை அணியவேண்டும் என்ற சிந்தனை ஏன் வந்தது? பூமியில் எதை பார்த்து இந்த ஆடையை அணிய ஆரம்பித்தான்? இதற்காவது விளக்கம் தாருங்கள். எனவே எப்படி ஆராய்ந்து பார்த்தாலும் மனித என்பவன் ஒரு தனிப்பட்ட படைப்பு என்பது மிக தெளிவாக தெரிய வரும்.
பகுத்தறிவு உள்ள மனிதன் தனக்கு மேலானவைகளை தேடுவதை விட்டு விட்டு தனக்கு கீழான ஒரு உயிரினத்தோடு தன்னை ஒப்பிட்டு பார்க்கிறான். இது எவ்வளவு மடத்தனமான ஒரு செயல். இதிலும் சிரிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தனக்கு கீழான குரங்கிலிருந்து வந்ததை நினைத்து பெருமை படுகிறான், அதை ஏற்று கொள்ளவும் செய்கிறான். ஆனால் தன்னை விட மேலான செயல்களை கொண்ட கடவுளின் சாயல் என்பதை நினைத்து வெட்க படுகிறான், அதை ஏற்று கொள்ளவும் மறுக்கிறான். எப்படிப்பட்ட வேடிக்கையான நினைப்பு. இது மட்டுமல்லாமல் மனிதன் பரிணாமத்தின் படி தோன்றியவன் அல்ல என்பதற்கு இன்னும் எவ்வளவோ விளக்கங்கள் இருக்கின்றன. அவைகள் என்னவென்று நான் சொல்லாமலே உங்களுக்கு தெரியும். எனவே நான் குரங்கிலிருந்து வந்தவன் என்று சொல்லி கொள்வது உங்களுக்கு பெருமையா? அல்லது சர்வ வல்லமையுள்ள கடவுளின் சாயல் என்று சொல்லி கொள்வது உங்களுக்கு பெருமையா? நீங்களே முடிவெடுத்து கொள்ளுங்கள். விஞ்ஞான ஆராய்ச்சி என்ற பெயரில் சிலர் மக்களை குழப்பி கொண்டு தான் இருப்பார்கள். எனவே தெளிவாக இருக்க நினைப்பவர்கள் தெளிவாக இருங்கள். குழம்புகிறவர்கள் குழம்பி கொண்டே இருங்கள்.
