ஆதியில் கொண்டிருந்த அன்பு

அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது, அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப்பற்றிய சந்தோஷத்தினாலே போய்.,தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று அந்த நிலத்தைக் கொள்ளுகிறான் (மதேயு 13:44)

ரேச்சலினால் நம்பவே முடியவில்லை.,திரும்ப திரும்ப தன்  கையில் ஜொலிக்கும் அந்த விலையேறப்பெற்ற கல்லை திரும்ப பார்த்து, தன் தந்தைத்திடம்,' அப்பா இதை எனக்கா கொடுக்கிறீர்கள் ' தன் தாந்தை தனக்கு ஒரு வைர மோதிரத்தை  பரிசாக கொடுத்ததை அவளால் தினைத்து கூட பார்க்க முடியவில்லை.

ஆம் மகளே., இதை  உனக்குத்தான் தந்தேன், அதை சந்தோஷமாய் வாங்கி அணிந்து கொண்டு.,டௌஉன் நினைவில். எப்போதும் என் அன்பை நினைத்து கொள் என்று தந்தை கவளிடாம் அன்புடன் குறினார். ரேச்சல் தன் தந்தையின் கழுத்தை கட்டி கொண்டு, ' நான் உங்களை நேசிக்கிறேன், டாடி..என்று முத்தமிட்டாள் தன் தகப்பன் எவ்வளவு நல்லவர் , எத்தனையாய் தன்னை நேசிக்கிறார் என்று நினைத்து மகிழ்ச்சியடைந்தாள்.

தகப்பன் வைர மோதிராத்தை கொடுத்த சில மாதங்கள். அவள் அதை தன் உயிரை போல நேசித்தாள். அதை எடுத்து அநேக நேரம் உற்ற பார்த்து கொண்ட்யிருந்தாள்.பின் தனக்கு அதை கொடுத்த தகப்பனின்  அன்பை தனக்கு தெரீந்த அனைவருக்கும் சொல்ல ஆரம்பித்தாள்.  அவளது செய்கையில்.  தகப்பனுக்கு தான் எப்படி நன்றி கடன் பட்டிருக்கினாள்  என்பதை வெளி காட்ட ஆரம்பித்தாள். மற்றவர்களை நேசித்து, அதன் மூலம் தன் தந்தையின் அன்பு இப்படித்தான் என்று மற்றவர்களுக்கு வெளிப்படுத்த முயன்றாள். எப்பொழுதும் அவள்  இருதயம் முழுவதும் தகப்பனின் அன்பால் நிறைந்திருந்தபடியால்.,அவருடைய புகழை பாடி. களிகூர்ந்தாள்,

ஆனால் நாளாக, நாளாக அவளிடம் இருந்து வைர மோதிரத்தின் மேல் இருந்த மோகம் குறைய ஆராம்பித்தது, வைரத்தின் மதிப்பு கொஞ்சமும்  குறையவில்லை என்றாலும், அவளுக்கு அதன் மீதிருந்த நாட்டம் குறைய அரம்பித்தாது. அவள் இன்னும்மற்றவர்களிடம் அன்பு  செலுத்தி தன் தகப்பனின் அன்பை கூறினாலும், முதலில் இருந்ததை போன்று முழு இருதயத்தோட செய்யாமல், கடமைக்காக செய்ய ஆரம்பித்தாள். ஒரு  நாள்.,அவளுடைய தோழி.,அவளிடம்.,' உன் தகப்பன். கொடுத்த வைர மோதிராத்தை  பற்றி எனக்கு சொல்வாயா ,' என்று கேட்டபோது, அவளால் முன்பு இருந்ததை போல உற்சாகத்தோடு சொல்ல முடியாவில்லை. அப்போது தான் உணர ஆரம்பித்தாள்..தன் தகப்பன் மேல் தனக்கு முன்பிருந்த அன்பை போல இப்போது இல்லை என்பதை உணர தொடங்கியபோது, தன் தகப்பனின் அறைக்கு சென்று கதவை தட்டினாள்,தகப்பனும் அறிந்திருந்தார், அவளுக்கு அந்த மோதிரத்தின் மேல் முன்பிருந்த உற்சாகமும் நேசமும் இல்லை என்று.அவளை அழைத்து,: வா நிம் திரும்ப அந்த மோதிரத்தை சேர்ந்து பார்ப்போம்  'என்றழைத்து, இருவரும் சேர்ந்து, அதை பார்த்தாபோது, அவளுடைய உள்ளத்தில் அன்பு பொங்க ஆரம்பித்தது.  கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது எத்தனை அருமையான. பொக்கிஷத்தை என் தகப்பன் எனக்கு கொடுத்திருக்கிறாரே, நான் அதை மறந்து ஜீவித்து விட்டேனே என்று நி னைத்த போது அவள் மனம் வருந்த ஆரம்பிதேதது. தன் தகப்பனின் கரத்தை பிடித்து , அப்பா  .நான் இந்த அன்பை நான் என்றும் மறக்காதிருக்க உதவி செய்யுங்கள் ' என்று அவரை வேண்டி கொண்டிள்,

நாமூம் அந்த ரேச்சலைபோல நமக்கு தேவன் தந்த அந்த விலையேறாப்பெற்ற இரட்சிப்பை பெற்று கொண்ட நாட்களில் நாம் கொண்டீருந்த சந்தோஷமும் ,அதை குறித்து  அநேகரிடாம் பகிர்ந்த கொண்ட காரியங்களும் நம்மால் மறக்க முடியாது. கர்த்தரை மிகவும் அதிகமாய்  நேசித்தோம். ஆனால்,காலங்கள்  கடந்து சென்றபோது., அன்று இருந்த ஆனந்தம் இப்போது ஒரு கடமையாக மாறி இருப்பதை நம்மால் உணர முடிகிறதல்லவா?  இரட்சிப்பின் சந்தோஷமும் ஆனந்தமும் கொஞ்சம் கூட மாறாமால் அப்பாடியே இருந்தாலும் நம்முடைய உணர்வுகளில் மாற்றாம் ஏற்பட்டிருக்கிறதல்லவா?

நம்முடைய உணர்வுகளில் மாற்றம் ஏற்பட்டாலும் தெவனுடைய அன்பு  மாறாததாக, அவருடைய இரட்சிப்பு மாறாததாக,அவர் நமக்கு கொடுத்த கிருபை வரங்கள் என்றும் மாறாததாகவே இருக்கிறது. நாம் மீண்டும் ஆதியில் கொண்டிருந்த அன்பிள்கு திரும்ப வருவோமா?  ஆனாலூம், நீ  ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறைஉண்டு ' (வெளிப்படுத்தின விசேஷம் 2:4)என்று இயேசுகிறிஸ்து நம்மிடத்தில் குறையை கயாண்கிறவராக இல்லாதபடி.,அவரிடாத்தில் நாம் ஆதியில்  கொண்டிருந்த அன்பில் மீண்டும் நிலைத்து.,அவர் நமக்கு கொடுத்த கிருபை வரங்களை பிரயோஜனப்படுத்தி அவருக்கு மகிமையாக ஜீவிப்போமாக

கண்டு கொண்டேன் ஒரு புதையல் பெற்றுக் கொண்டேன் ஒரு பொக்கிஷம் இயேசுதான் என் இரட்சகர் இயேசுதான் என் ராஜா

ஊரேல்லாம் சொல்லிடுவேன் உலகமெங்கும் பறைசாற்றுவேன் ஜீவிக்கின்றார் ஊன் இயேசு சீக்கிரமாய் வந்திடுவார்

ஜெபம் சேய்வும் எங்கள் மேல் பிபிறியமாய் நேசித்து வழிநடத்தும் தகப்பனே, நீர் எங்களுக்கு கொடுத்த இரங்களும் மாறாததாக இருக்க நாங்கள் மாத்திரம் எல்லாவற்றிலும் மாறி.,ஆதியில் நாங்கள் உம்மகொுடைய. அன்பிலிருந்து விலகிஎன்றேன்றும் உம்முடைய  அன்பில்  சேர்ந்து இருக்க எங்கள் ஜெபத்தை கேட்டு எங்கள் இருதயாங்களை பதுக்காத்துக்கொள்ளும்தகப்பனே எங்கள் ஜெபத்தை கேட்டு பதில் கொடுப்பவாரே உம்க்கே நன்றிஇயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென் அல்லேலூயா! 🙏🙏🙏🙋

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.