""தானியேலுக்கு பெல்தெஷாத்சார்...என்றும் பெயரிட்டான்'' (தானி 1:7)
"தானியேல்'' என்ற பெயரை , பாபிலோனிய அதிகாரிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை!
"தானியேல் '' என்றால் ,"தேவன் நீதி செய்கிறவர்'' என்று அர்த்தம். தெய்வீக நியாயாதிபதியைப் பற்றி
எண்ண பயப்பட்ட பாபிலோனியர், தானியேலின் பெயரை மாற்ற தீர்மானஞ் செய்தார்கள் ! அவருக்கு
"பெல்தெஷாத்சார்' என்று பெயர் சூட்டினார்கள். அதற்கு" பாகாலே இவனை காப்பாற்று'' என்பது அர்த்தம்.
இவனுடைய எருசலேமின் தேவன் இவனைக்கா ப்பாற்றவில்லை; இனி பாபிலோனிய தெய்வங்களாவது
காப்பாற்றட்டும் என்ற அர்த்தத்தில், அவ்வாறு பெயர் சூட்டினார்கள்.
தமிழ் மொழியில்" தானியேல் என்ற சொல்லின் அர்த்தத்தை "தா+நீ+ஏல்'' என்று பிரிக்கலாம்,
"தா நீ எல்லாவற்றையும்'' என்று பொருள்படும். எந்த ஒரு மனிதன் தன்னையும், தனக்குண்டான
எல்லாவற்றையும் கர்த்தருக்குத் தருகிறானோ, அவனை வல்லமையாய்ப் பயன்படுத்த தேவன்ஆ
யத்தமாய்இ ருக்கிறார்.
ஒரு நாள் டி.எல் .மூடி பக்தன், இரண்டு பேர் பேசிக்கொண்டிருப்பதை உற்றுக் கவனித்தார்.
அவர்களில் ஒருவர் சொன்னார். "முற்றிலும் ஒப்படைக்கப்பட்ட ஒரு மனிதனை தேவன் எவ்வளவாய்
பயன்படுத்த வல்லமையுள்ளவராய் இருக்கிறார் என்றார். உடனே டி.எல் . மூடி பக்தனின் உள்ளம், "நான்
ஏன் அந்த மனிதனாக இருக்கக்கூடாது'' என்று எண்ணலாயிற்று. அன்று தன்னை கர்த்தருக்கு பூரணமாய்
ஒப்புக்கொடுத்தார். உலகத்தை அசைக்கும் தெய்வீக மனுஷரானார். அப்படித்தான் தானியேலும்!
கர்த்தருக்கு முற்றிலும் தன்னை அர்ப்பணித்தார். கர்த்தர் அவரை அத்தனை பெரிய பாபிலோனிய
சாம்ராஜ்யத்திற்கு பிரதம மந்திரியாக உயர்த்தி ஆசிர்வதித்தார்.
"தேவன்... தானியேலைச் சகல தரிசனங்களையும், சொப்பனங்களையும்,
அறியத்தக்க அறிவுள்ளவனாக்கினார்'' (தானி 1:17)
