*_வாழ்வு தரும் வார்த்தைகள்!_*
ரூத் 3:18
அப்பொழுது அவள், *"என் மகளே, இந்தக் காரியம் என்னமாய் முடியும் என்று நீ அறியுமட்டும் பொறுத்திரு. அந்த மனுஷன் இன்றைக்கு இந்தக் காரியத்தை முடிக்குமுன் இளைப்பாற மாட்டான்,"* என்றாள்.
நீங்கள் *"வியர்வை"* சிந்தி கடினமாய் பிரயாசப்பட வேண்டும் என்பதை தேவன் விரும்புவதில்லை. இங்கே வியர்வை என்பது உங்களுடைய சரீரத்திலிருந்து வடியும் உப்பு நீரைக் குறிக்கவில்லை.
மாறாக, *இது உங்களுடைய சுய முயற்சிகளையும், உங்களையே நீங்கள் சார்ந்து கொள்வதையும் குறிக்கிறது.* நீங்கள் ஒன்றையும் செய்யவில்லை என்றால், ஒன்றும் நடக்காது என்று நீங்கள் விசுவாசிப்பதை தேவன் விரும்பவில்லை.
ஒருவருடைய வாழ்க்கையில் தேவன் இல்லையென்றால், அவருக்கு வேண்டுமானால், இது உண்மையாக இருக்கலாம்.
ஆனால் உங்களுடைய வாழ்க்கையில் தேவன் இருக்கிறபடியால், இது உங்களுக்கு உண்மையாக இருக்க முடியாது. தேவன் உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும்போது, *"தேவன்"* என்ற _அந்த ஒரு விஷயம் சகலத்தையும் மாற்றி விடும்!_
நீங்கள் தேவனுக்குள் இளைப்பாறிக் கொண்டிருக்கும்போது, அவர் உங்களுக்காக வேலை செய்வார்.
*_உண்மையில், அவர் வேலை செய்யும்போது, முடிவில் உங்களுக்கு அதிக நன்மைகள் உண்டாகியிருக்கும்._*
அவர்தான் உங்களுக்குக் கொடுக்கிறவராய் இருக்கிறார். உங்களுக்கு நீங்களே கொடுக்கும்படி முயற்சிக்கின்ற ஒரு விஷயம் இதுவல்ல.
இதுதான் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் வாழ்ந்த ரூத்திற்கு நிகழ்ந்தது. காலையிலிருந்து சாயங்காலம் வரை, கோதுமை வயலில் கடினமாய் உழைத்து கதிர்களைப் பொறுக்கிய பிறகு, அவளால் ஒரு மரக்கால் அளவிற்கு வாற்கோதுமை மணிகளை சேகரிக்க முடிந்தது (ரூத் 2:17).
அது பத்து நாட்களுக்குப் போதுமான அளவு வாற்கோதுமையாகும். நிச்சயமாக, இது அவளுக்கு நல்ல ஒரு ஆசீர்வாதம்தான்.*
ஆனால் அவள் கடினமாய் உழைக்காமல், தன் சுதந்தரவாளியும், மீட்பருமான போவாஸின் பாதத்தில் இளைப்பாறியபோது, அவளுக்கு ஆறு மரக்கால் வாற்கோதுமை கிடைத்தது (ரூத் 3:15).
*அது அறுபது நாட்களுக்குப் போதுமான அளவு வாற்கோதுமையாகும்! ரூத் தன்னுடைய ஆசீர்வாதத்தைத் தானே தேடியபோது, அவளுக்கு ஒரு மரக்கால் வாற்கோதுமைதான் கிடைத்தது.*
ஆனால் அவள் தன்னை ஆசீர்வதிக்கிறவரை நாடியபோது, அவளுக்கு இன்னும் அதிகமாய் கிடைத்தது.
ரூத்தின் ஆசீர்வாதங்கள் அதோடு நின்று விடவில்லை. ரூத் தன்னுடைய மாமியார் நவோமி அறிவுறுத்தினபடி, அவள் அமைதலாய் அமர்ந்திருந்து, இளைப்பாறிக் கொண்டிருந்த நேரத்தில்,
அந்த வயலுக்குச் சொந்தக்காரனாகிய போவாஸ் , சில காரியங்களைச் செய்ய ஆரம்பித்தான், அவைகளைச் செயல்படுத்தினான், ரூத்தின் சார்பில் பேசினான்.
இவை எல்லாவற்றின் மத்தியிலும், ரூத் அமைதியாக, அமர்ந்திருந்து இளைப்பாறினாள். முடிவில், அந்தக் கோதுமை வயலுக்குச் சொந்தக்காரனாகிய போவாஸ் ரூத்தை திருமணம் செய்து கொண்டான் (ரூத் 4).
இதற்கு அர்த்தம், *_இனி மேல் ஆறு மரக்கால் வாற்கோதுமை என அளந்து போடப்படுகிற நிலைமை கிடையாது. அந்த வயல் முழுவதன் ஒட்டுமொத்த அறுவடையும் அவளுக்குச் சொந்தம்!_*
போவாஸ், நம்முடைய பரலோக சுதந்தரவாளியும், மீட்பருமான இயேசுவுக்கு அடையாளமாக இருக்கிறார்.
*நாம் கர்த்தருக்குள் இளைப்பாறும்போது, அவர் ஒன்றும் செய்யாமல் சும்மா இருக்க மாட்டார். அவர் நம் சார்பில் வேலை செய்வார். அப்பொழுது நாம் என்ன செய்வோம்? நம் மீதான அவருடைய அன்பின் மீது நாம் நம்பிக்கை வைத்து, அதை அனுபவிப்போம்.*
பிரியமானவர்களே, உங்களுடைய சொந்த பெலனில் முயற்சிகளை எடுப்பதை நிறுத்துங்கள். இளைப்பாறுங்கள்.
சிலுவையில் இயேசு செய்து முடித்த வேலையில் இளைப்பாறுவதன் மூலம், மிகப் பெரிய ஆசீர்வாதமாகிய இரட்சிப்பே நமக்குக் கிடைத்திருக்கும்போது,
மற்ற ஆசீர்வாதங்களெல்லாம் இன்னும் எவ்வளவு அதிகமாய் அதன் மூலம் நமக்குக் கிடைக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்.
*நம்முடைய சிந்தனைக்கு:*
*_சிலுவையில் இயேசு செய்து முடித்த வேலையில் இளைப்பாறுவதன் மூலம், மிகப் பெரிய ஆசீர்வாதமாகிய இரட்சிப்பே நமக்குக் கிடைத்திருக்கும்போது, மற்ற ஆசீர்வாதங்களெல்லாம் இன்னும் எவ்வளவு அதிகமாய் அதன் மூலம் நமக்குக் கிடைக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்._*
வெற்றி உங்களுடையதே ஆமென்!
*Bro. JOHN DURAI*