*"உன் தேவனை சந்திக்கும்படி ஆயத்தப்படு" ஆமோஸ் 4-12*


கடந்த வாரம் ஒரு கிறிஸ்தவ நண்பனை சந்தித்தேன். அவர் ஆவிக்குரிய சபைக்கு செல்கிறார். அவர் என்னை பார்த்து இந்த வருடம் உங்களுக்கு என்ன வாக்குதத்த வசனம் கிடைத்தது பிரதர் என்று கேட்டார். அதற்கு நான் எங்கள் சபையில் அப்படி வாக்குதத்த வசனம் கொடுப்பது கிடையாது. வேதத்தில் உள்ள அனைத்து வாக்குத்தத்தங்கள் நமக்கு சொந்தம் என்றேன்.

உன் தேவனை சந்திக்கும்படி ஆயத்தப்படு (ஆமோஸ் 4-12) இதுதான் எனக்கு இந்து வருட வாக்குத்தத்த வசனம் என்றேன். இந்த வருடம் மட்டுமல்ல, எல்லா வருடமும் இந்த வசனம்தான் எனக்கு வாக்குத்தத்த வசனம் என்றேன். இன்றைக்கு அநேக சபைகளில் கொடுக்கும் வாக்குத்தத்த வசனங்கள் உலக ஆசிர்வாதம் பற்றியதாகவே காணப்படுகிறது.

இயேசுவின் வருகையை குறித்து சபைகளில் போதிக்கும் ஊழியர்கள் மிகவும் குறைவு. அடியேன் செல்லும் சபையின் போதகர் பிரசங்கத்தில் வருகையை பற்றி செய்தி எல்லா வாரமும் காணப்படும்.

இயேசுவின் முதல் பிரசங்கம் "மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்யம் சமிபத்திருக்கிறது" மத் 4:17

உலக ஆசிர்வாதத்திற்காக கர்த்தரை தேட கூடாது. முதலாவது தேவனுடைய ராஜ்யத்தை தேடுங்கள்.  எல்லாம் (உலக ஆசிர்வாதங்கள்) கூட கொடுக்க படும். (மத் 6:33)

இம்மைக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.
1கொரி 15 :19

இயேசுவின் வருகை தான் நமது குறிக்கோள்/நோக்கம்.  இயேசு மத்திய ஆகாயத்தில் வரும் போது உயிரோடு இருந்தால் மறுருபம் அடைய வேண்டும். மரித்தால் உயிர்த்தெழ வேண்டும்

நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். பிலிப்பியர் 3:20

கர்த்தர் வருகையில் காணபட மிகுந்த பரிசுத்தம் தேவை. அதற்காக பிரயாசபடுங்கள். முயற்சி செய்யுங்கள்.
கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.