_தற்போது ரோபேட் தொழிற்நுட்பம் கண் - வாய் - கைகள் - கால்கள் இணைக்கப்பட்டு மனிதன் - மனுஷிபோல பேசுகிறது. வித்தியாசம் கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தாலும் 100 சதவீதம் மனிதனாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இயல்பான சுபாவம் இல்லை._
_இதேபோல்தான் அந்திக்கிறிஸ்துவை குறிப்பிடும்போது மிருகமாக டிராகனைப்போல இருக்கிறவன் என்கிறது வேதம்._ *ஆனால் இவன் (மெயின்) கள்ளத்தீர்க்கதரிசியால் ஒரு சொரூபம் கொடுக்கப்படுவான்.*
_அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாக மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி (கிரேக்க மொழியில் சரியான அர்த்தம் - The key sequential Greek words in verse fourteen are poieō eikōn thērion, meaning that the *fully deceived men of the earth of that time will be called upon by the False Prophet to construct a likeness of the Antichrist.*)_
_அதற்குச் சத்துவங் கொடுக்கப்பட்டது, மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும் சத்துவம் கொடுக்கப்பட்டது._
(வெளி. விசேஷம் 13 :15)
_இதுதான் ரோபோட்டின் கடைசி நிலை. அதாவது அந்திக்கிறிஸ்து மிருகமாகயிருந்து பூமியின் மக்களை வணங்கும்படி (வெ.வி 13:14) செய்தவன் கள்ளத்தீர்க்கதரிசியாலே (வெ. வி. 13:11) (ஆட்டுக்குட்டிக்குட்டிக்கு ஒப்பாக வலுசர்ப்பம்போல பேசும்) அந்திக்கிறிஸ்துவுக்கு ஒரு உருவத்தை கொடுப்பான், அதுவே பேசும், நடக்கும், தன்னை வணங்காதவர்களை கொலை செய்யும். ரோபோட் தொழிற்நுட்பத்தில் உயர்தரமான கண்டுபிடிப்பு மனிதனாகவே மாறுவதால் உலகம் வஞ்சிக்கப்பட்டு அவனை வணங்குவார்கள். கன்னி மரியாளின் வயிற்றில் பிறந்த தேவனாகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் இதை மேசியா என்றும் தேவன் என்றும் ஏற்றுக்கொள்வார்கள்._
*இதை ஏன் சொல்ல வருகிறேன் என்றால் ரோபோட் தொழிற்நுட்பம் இன்றைய தேதியில் வரப்போகிற அந்திக்கிறிஸ்துவின் பொய் சொரூபத்தின் நிலைக்கு ஒரு அடி பின்னே உள்ளது. ஆக காலம் மிக நெருங்கி விட்டது.* _கள்ளத்தீர்க்கதரிசியான ஆட்டுக்குட்டிக்கு ஒப்பானவனும் வலுசர்ப்பம்போல பேசுபவனும் எழுந்து விட்டான். கிருபையின் காலம் முடிவுக்கு வருகிறது. கடைசி காலத்தை நாம்தான் தொட்டு துவக்கப்போகிறோம்._
*நம் தலைமுறயிலே இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை காணப்போகிறோம். மாரநாதா!*