தேவ பண்டிகைகள் ஏழு. இவைகள் யூதர்களுக்கே உரியதல்ல. இது
தேவ பண்டிகைகள் - பொதுவானது.
அதில் வரும் *முதற்பலன் பண்டிகை அல்லது அறுவடை பண்டிகை அல்லது பெந்தேகொஸ்தே பண்டிகை.*
ஏழு ஒய்வு வாரங்கள் முடிந்து அடுத்தநாள் ஐம்பதாவது நாளன்று தேவன் முதற்பலனான இரண்டு அப்பத்தை காணிக்கையாக கொண்டுவர சொல்லுகிறார். அந்த நாளே முதற்பலன் பண்டிகை - பெந்தேகொஸ்தே பண்டிகை எனப்படுகிறது. பெந்தேகொஸ்தே என்றால் 50 என அர்த்தம்.
ஏழு ஓய்வுநாட்களுக்கு மறுநாளாகிய ஜம்பதாம் நாள் அன்று கர்த்தருக்குப் புதிய போஜனபலியைச் செலுத்தக்கடவீர்கள்.
நீங்கள் ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டுபங்காகிய மெல்லிய மாவிலே புளிப்பாகப் பாகம்பண்ணப்பட்ட அசைவாட்டும் காணிக்கையாயிருக்கிற இரண்டு அப்பங்களை உங்கள் வாசஸ்தலங்களிலிருந்து கர்த்தருக்கென்று முதற்பலனாகக் கொண்டுவந்து,
(லேவியராகமம் 23 :16-17)
இதே பெந்தேகொஸ்தே நாளன்றுதான் இயேசு கிறிஸ்து கூறியபடி
அப்போஸ்தலர்களும் விசுவாசிகளும் மொத்தம் 120 பேர் எருசலேமிலே மேல்வீட்டு அறையிலே காத்திருந்தார்கள். சகல நாட்டிலிருந்தும் யூதர்கள் வந்திருந்தார்கள். பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.
அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.
அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது.
அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.
(அப்போஸ்தலர் 2 :4)
ஆக, கர்த்தர் நமக்களித்த ஏழு பண்டிகைகள் தேவ பண்டிகைகள் (லேவி 23: 44) என்றே வேதம் கூறுகிறது. தேவன் எல்லாவற்றையும் காரணமாகவே வைத்திருக்கிறார். இந்த முதற்க்கனி பண்டிகை, அறுவடை நாள், வாரங்களின் பண்டிகை, பெந்தேகொஸ்தே என்றும் அழைக்கப்படுகிறது.
பொதுவாக தற்போது இந்த நாள் திருச்சபையின் பிறந்தநாள் என்கிறார்கள். இயேசு கிறிஸ்துவின் தியாகத்திற்க்குப்பிறகு பரிசுத்த ஆவியானவரின் திருவருகையாயிருந்ததால் ப. ஏ. காலங்களைவிட இது வரவேற்புக்குரிய நாளாயிருக்கிறது. முக்கியமாக இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்ததற்க்கு பிறகு வரும் 50வது நாள் என்பது சிறப்பானதாகும்.
தேவ பண்டிகைகள் (லேவி 23: 44) இரண்டு விதமான காரணங்களுக்காக முன்னமே குறிக்கப்பட்டதாயிருக்கிறது, வரக்கூடியதை வைத்து. நடப்பவைகளை நோக்கிப்பார்த்து நிறைவேறுதலைக் கொண்டு தீர்க்கதரிசனப்படி உள்ளது.
*வசந்த கால நாட்களில் வரும் பண்டிகையெல்லாம் இயேசு கிறிஸ்துவின் முதல் வருகைப்பற்றியதாயுள்ளது.*