*பொங்கள் பண்டிகையை கொண்டாடலாமா?*‼

*வேடிக்கையான செயல்களில் ஒன்று*
*பொங்கல்*
*பண்டிகைக்கு கிறிஸ்தவனுடைய வாழ்த்து*.

வாழ்த்துச் சொல்லுகின்ற தலைவா்கள் தங்கள் தவறுகளை மறைப்பதற்காக இது தமிழர் திருநாள் என்று சொல்லுவதுதான் வேடிக்கை.

*கிறிஸ்தவா்களையும் கொண்டாட கிறிஸ்தவா்கள்* என்பவா்களாலேயே தூண்டி விடப்படுகிற
“பொங்கல் பண்டிகை ” பற்றி..,

பொங்கல் பண்டிகை சூரியனுக்கு நன்றி சொல்லி துவங்ககிறது சூரியனுக்கு எதற்காக நன்றி என்றால் “தூரத்தே நெருப்பை வைத்துச் சாரத்தைத் தருபவன் சூரியன்’ என்று கவி பாடுகிறார் கண்ணதாசன். ஆக

யூதா்கள் மற்றும் கிறிஸ்தவா்கள் தவிா்த்து மற்ற எல்லா ஜனங்களும் ஏதோ ஒரு வகையில் இயற்கையையும் சுடா்களையும் வழிபட்டு வருகின்றனா்.

உதாரணமாக..,

பல்வேறு வடிவங்களாக பிரிந்து அதேநேரம் மறைந்து காணப்படுகின்ற மத்திய கிழக்கு நாடுகளின் “மித்திர மதத்தினர் ” டிசம்பர் 24 -ன் நடுஇரவை புனிதமான நேரமாக கருதி நம்பிக்கைக் கொண்டனா்....! எப்படியெனில்..,

டிசம்பா் 24 இரவுதான் சூரியன் வடக்கு நோக்கிய பயணத்தை துவங்குகிறான் எனவும் அதையே சூரியனுடைய பிறந்தநாள் எனவும் நம்பி வந்தனா். இந்த மித்ர மதத்தவா்கள் கத்தோலிக்கா் ஆக்கப்பட்டபோது அவா்கள் பண்டிகைகளும் புது வடிவத்திற்கு உருமாறின..!

கோடைக்காலத்தை கொண்டு வரும் சூரியனின் வட திசைப்பயணம் இந்தியாவில் 14 நாட்களுக்குப் பின்னர் “உத்தராயணம்”அதாவது தேவர்களின் பகல்பொழுது என்றும் அதனுடைய தொடக்கமே பொங்கல் அல்லது “மகர சங்கரமணம்’ என்றெல்லாம் அறிவித்து..,

அந்த நாளில் சூரியனை வணங்குவது மிகவும் பொருத்தமானதும் புண்ணியம் தரக்கூடியது என்றெல்லாம் அறிவித்து அந்த நாளில் தங்களது மூட நம்பிக்கையை அனைவருக்கும் பொதுவாக்குகின்றனர்.

கிரேக்க நாட்டு மக்கள் சூரியன்தான் “இவ்வுலகைப் படைத்தவர்’ எனக்கருதி வழிபடுகின்றனர்.

மெக்சிகோவாசிகளும் அப்படியே நம்புகின்றனர். அவர்களின் திருமணச் சடங்குகளில் சூரிய ஆராதனை முக்கிய இடம்பெற்றுள்ளது. அது மட்டுமல்ல

இந்தியர்களைப் போலவே கிரேக்கர்கள் சூரியபகவான் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் கிழக்கிலிருந்து கிளம்பி மேற்கு நொக்கி பயணம் செய்து இரவில் தன் மாளிகைக்குத் திரும்பிச் செல்லுகிறார் என்று கூறி சூரியனை ஆராதிக்கின்றனர்.

முகமதியர்கள் என்ற முஸ்லீம்கள் பைபிளைப் படித்து தங்களுக்கென்று ஒரு மதத்தை சமைத்தவர்களல்லவா? எனவே அவர்கள் சூரியனை சற்று சின்னதாக்கி..! அல்லாவை (சந்திரனை) பெரியவனாக்கி அந்த அல்லாவின் சிங்காசனத்திற்குக் கீழே தாழ விழுந்து பணிந்து கொள்ளத்தான் சூரியன் போகிறான் என்று கட்டுக் கதைகளை கட்டி விடுகின்றனர்.

பொங்கல் பூமத்திய ரேகைக்கு வடக்கில் அமைந்துள்ள இந்திய தேசத்துக்கான கோடையின் தொடக்கம். வடமாநிலத்தவர் மகா சங்கராந்தி என்கின்றனர். கிறிஸ்தவன் அதையும் விட்டுவிடாமல் தமிழர் திருநாள் அது இது என்று கிறிஸ்தவனுக்கு கிடைத்த ஏராளமான பண்டிகைகளில் ஒன்றாக மாற்றிக் கொண்டதுதான் அதிசயம். இதில்..,

எந்த ஒன்றையும் பரிசுத்த வேதாகமமோ, கிறிஸ்துவோ அறிவிக்கவில்லை..! அங்கீகரிப்பதும் இல்லை. அதேநேரம் பொங்கல் கொண்டாடுகிறவர்கள்..

சூரியனின் சாரமாகிய வெப்பம் மற்றும் வெளிச்சத்தின் சக்தியைக் கொண்டுதான் இப்புவியில் மரம் செடி கொடி புல் பூண்டு மற்றும் மிருகம் பறவை இன்னும் புழு பூச்சி இனங்கள்… ஏன்? மனிதன்வரை..,

அனைத்துமே சூரியனால்தான் தோன்றி வளர்ந்து இப்புவியைத் தழைக்கச் செய்கின்றன என்கிறார்கள். இதை கிறிஸ்தவர்கள் ஏற்க முடியுமா? மேலும்..,

சூரியனின் பேருதவியின்றி எந்த ஓர் உயிரினமும் தனது உணவைப் பெற்றுவிட முடியாது. அதுமட்டும் அல்ல பூமியின் அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு ஒவ்வாதவற்றை அழிப்பதுடன் சுகாதாரமான வாழ்வை உறுதி செய்வதும் சூரியனே..!

இயற்கைப் படைப்புகளின் அழகை வெளிப்படுத்திக் காட்டுவதுடன் இயற்கையின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கும் மூலாதாரக் காவலனாக விளங்குவதும் சூரியன்தான். என்பதையெல்லாம் உலகத்தார் போன்று கிறிஸ்தவர்களும் ஏற்கிறார்களா?

பொங்கல் திருநாளன்று என்ன செய்கிறார்கள்?

பொங்கல் தினத்துக்கு முன்தினம் போகிப் பண்டிகை. பழையன கழித்துப் புதியனப் புகுத்துகிறார்களாம். பெரும்பாலும் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றபின் பிரசங்கியானவர்கள் இந்த நாளுக்காகவும ஒரு செய்தி தயாரித்து விடுவார்கள் அதில் ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புதிய சிருஷ்டி என்ற வசனம் பேசுவது நகைப்புக்குரியதாக இருக்கும்.

மறுநாள் உழவுக்குத் துணை நின்ற மாடுகளுக்கான மாட்டுப்பொங்கல் மற்றும் கனு எனும் கன்னிப் பொங்கலும் கொண்டாடப்படுகின்றன.

பசும்பாலில் உலைவைத்து அதில் புத்தரிசியும் புதுவெல்லமும் சேர்த்துப் பொங்கல் செய்து சூரியனுக்குப் படைக்கிறார்கள். அச்சமயத்தில் புதிய அறுவடையாகக் கிடைக்கும் புதுமஞ்சள் புது இஞ்சி ஆகியவற்றைக் கொத்தோடு படைக்கிறார்கள். வாழைப்பழம், வெற்றிலைப் பாக்கு போன்றவற்றையும் சூரியனுக்கு நிவேதனம் செய்து மகிழ்கிறார்கள்.

இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல பகுதிகளிலுமே சூரியனை ஏதாவது ஒரு வகையில் கிறிஸ்மஸ் போன்று வெவ்வேறு வடிவத்தில் கொண்டாடி வழிபட்டு வருகின்றனா்.

ஜப்பானியர்கள் தங்கள் நாட்டின் அரசன் சூரியவம்சத்தில் பிறந்துள்ளதாகக் கருதுகின்றனர். எனவே தங்கள் அரசனுடைய மூதாதையரான சூரியனை பயபக்தியுடன் வழிபட்டு வருகின்றனர்.

பண்டைய எகிப்தியர்கள் உதயசூரியனை “ஹோரஸ்’ என்றும் நண்பகல் சூரியனை “ஆமென்ரர்’ என்றும் மாலைச் சூரியனை “ஓசிரில்’ என்றும் அழைத்தனர். “டைஃபோ’ என்ற இருள் அரக்கன் முதலை உருவத்தில் வந்து மாலை நேரத்தில் “ஓசிரிலை’ விழுங்கிவிடுவதாகவும் மறுநாள் காலையில் “ஹோரஸ்’ அவனை வென்றுவிடுவதாகவும் நம்பிக் கொண்டனர். பண்டைய எகிப்தில் பல சூரியக் கோயில்கள் இருந்துள்ளன. என்பது வரலாறு.

இப்படியிருக்க.. கிறிஸ்தவர்களாகிய நாம் பொங்கலன்று என்ன சொல்லி? என்ன வடிவத்தில், பொங்கலிடலாம்? என்று கேட்பீா்களாகில்..,

சகோ மோகன் சி லாசரஸ் போன்றோர் தீபாவளிக்கு ஒரு விளக்கம் கொடுத்தது போன்று இதற்கும் ஒரு வசனத்துடனான விளக்கம் தருவார்கள்.

*Now my opinion*

!! எதை செய்தாலும் அதை சீர்தூக்கி பார்க்க வேண்டிய நிலைபாடுகளில் ஒரு சில‼

*தகுதி,பக்திவிருத்தி,தேவ நாம மகிமை*

            

*1 கொரி 6:12.*

*எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு,* ஆகிலும் *எல்லாம் தகுதியாயிராது;* எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, *ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்.*

All things are lawful unto me, but all things are not expedient: all things are lawful for me, but I will not be brought under the power of any.

*1கொரி 10:23.*

*எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு,* ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, *ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது.*

All things are lawful for me, but all things are not expedient: all things are lawful for me, but all things edify not.

*கொலே 3:17*

*வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும்,* அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.

And whatsoever ye do in word or deed, do all in the name of the Lord Jesus, giving thanks to God and the Father by him.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.