Pr. ஐசக் சாமுவேல் பஞ்சாப்: ! கோலியாத்தின் பட்டயம்- அதற்கு நிகரில்லை.. 1 சாமு 21:9

கோலியாத் செத்துப் போனான்..பாருங்கள்..
அவன் இல்லை..

அவன் ஒரு கூழாங்கல்லினால் சாகவில்லை- நின்று நிமிர்ந்தவனை கூழாங்கல் வீழ்த்தியது உண்மை தான்..ஆனால் அவன் மடிந்ததோ தன் சொந்தப் பட்டயத்தினாலேயே..

சிறிது நாட்களில் சூழ்நிலை மாற,இப்போது சவுலுக்குப் பயந்து ஓடுகிறான் தாவீது.
நிராயுதபாணியாக..
கையில் ஆயுதம் எதுவுமின்றி..

இப்போது இன்னும் பல எதிரிகளை எதிர்கொள்ளும் நிலை.நோபிலே வந்த போது அங்கிருந்த ஆசாரியன் அகிமலேக்கிடம் கேட்கிறான்..

"இங்கே உம்முடைய வசத்தில் ஒரு ஈட்டியானாலும் பட்டயமானாலும் இல்லையா ?"

ஆசாரியன் சொல்கிறான்.."நீர் ஏலே பள்ளத்தாக்கிலே கொன்ற பெலிஸ்தியனாகிய கோலியாத்தின் பட்டயம் இதோ ஏபோத்துக்குப் பின்னாக ஒரு புடவையிலே சுருட்டி வைத்திருக்கிறது.அதுவேஅல்லாமல் வேறொன்றும் இங்கே இல்லை.."

தாவீதின் எலும்புகள் சில்லிட்டது..கேட்டதோ ஏதோ ஒன்று..
கிடைப்பதோ கோலியாத்தின் பட்டயம்."அதற்கு நிகரில்லை அதை எனக்குத் தாரும் என்றான்.."

கோலியாத்தைக் கொன்ற அதே கோலியாத்தின் பட்டயம்.ஆனால் இப்போதோ அது தாவீதினுடையது.

அநேக நேரங்களில் பிசாசின் தாக்குதல்கள் நமக்கு மறைமுகமான லாபத்தையே தருகிறது.

மிகச் சரியாகக் கையாளப்பட்டு, முறியடிக்கப்பட்ட சாத்தானின் ஒவ்வொரு தாக்குதலும் நமக்கு ஒரு புதிய ஆயுதத்தை அவனிடமிருந்தே பெற்றுத் தருகிறது..

உங்கள் வாழ்க்கையில் இருதயத்தை உடைத்து நொறுக்கிய உங்களது அநேக அனுபவங்களை சற்று உற்று ஆராய்ந்து பாருங்கள்.

ஒவ்வொரு முறையும் ஒரு புதிய பெலத்துடனும் அனுபவத்துடனும் இதுவரை நீங்கள் பெற்றிராத ஒரு நிகரற்ற ஆவிக்குரிய ஆயுதத்துடன் அடுத்த யுத்தத்துக்கு தயாராகி வெளி வந்திருப்பீர்கள் !
[1/13, 7:46 AM] Pr. ஐசக் சாமுவேல் பஞ்சாப்: 4 கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெரு வெள்ளத்தைப்போல் இருக்கையில், நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்.

ஏசாயா 25 :4

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.