யார் மனம் திரும்ப வேண்டும் ?


    ஏசாயா 55:7

    துன்மார்க்கன் தன் வழியையும் அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன். அவர் அவன் மேல் மனதுருகுவார். நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன். அவர் மன்னிக்கத்தயை பெருத்திருக்கிறார்

எவைகளில் இருந்து மனம் திரும்ப வேண்டும் ?

கேடான / அக்கிரம / தீய சிந்தனைகளில் இருந்து ரோமர் 1:28 -31

1. அநியாய சிந்தனை /செயல்கள்

2. வேசித்தனத்தின் சிந்தனை/ செயல்கள். ஒரு ஆண் பிற பெண்களை இச்சையோடு நினைத்தல்(மனைவி தவிர). ஒரு பெண் பிற ஆண்களை இச்சையோடு நினைத்தல் (கணவன் தவிர) மற்றும் உறவு வைத்துக்கொள்ளுதல், இச்சையோடு பார்த்தல்.

3. துரோக சிந்தனை / செயல்கள்

4. பொருளாசையின் சிந்தனை / செயல்கள் - லஞ்சம் வாங்குதல், அநியாயமாய் ஏமாற்றி சம்பாதித்தல்

5. குரோத சிந்தனைகள் / செயல்கள் - காரணமில்லாமல் பிறரை பகைத்தல்

6. பொறாமையின் சிந்தனை இதன் விளைவாக பிறர்க்கு தீங்கு செய்தல்

7. கொலை வெறியின் சிந்தனை / செயல்கள்

8. வாக்குவாத சிந்தனை - எதற்கெடுத்தாலும் பிறரிடம் சண்டையிடும்படி வாக்குவாதம் செய்தல்

9. வஞ்சக சிந்தனை - பிறரை நம்ப வைத்து ஏமாற்றுதல்

10. வன்ம சிந்தனை - பிறரை பழிவாங்குதல்

11. புறங்கூறுதல் / செயல்கள் அடுத்தவர்கள் இடையே பகையை உண்டாக்குதல்

12. தேவ பகைஞராதல் - தேவனுடைய சித்த்த்துக்கு (விருப்பத்துக்கு) விரோதமான செயல்கள்

13. துரோகிரதம் பண்ணுதல் - நம்பினவர்களுக்கு துரோகம் செய்தல்

14. அகந்தை பிறரை மதிக்காதது

15. வீம்பு செய்தல் பிறர்க்கு காரணமில்லாமல் இடையூறு செய்தல்

16. பொல்லாதவைகளை யோசித்து பிணைத்தல் - பொல்லாத காரியங்களை செய்ய ஆலோசனை / உதவுதல்.

17. பெற்றோருக்கு கீழ்ப்படியாமை

18. உணர்வு இல்லாமை (தேவனுடைய வார்த்தைகளை கேட்டும் அதற்கு கீழ்படியும் உணர்வு இல்லாமை)

19. உடன்படிக்கை மீறுகிறவர்கள் (ஆண்டவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியும்படி தீர்மானம் எடுத்தவர்கள் அதை மீறுதல்)

20. சுபாவ அன்பு இல்லாதவர்கள் (சக மனிதர்கள் மீது அன்பு இல்லாமை)

21. இணங்காதவர்கள் - சரியென்று தெரிந்தும் அதை ஒத்துக் கொள்ளாதவர்கள்.

22. இரக்கம் இல்லாதவர்கள்

மேலே கொடுக்கப்பட்டவைகளை சிந்தனை செய்கிறவர்கள், இந்த சிந்தனைகளையும் செயல்களையும் விட்டு ஆண்டவரை நோக்கி திரும்ப வேண்டும். இத்தகைய சிந்தனைகள் செயல்கள் ஒரு மனிதனை ஆட்கொள்ளக் காரணம் என்ன? தேவனை அறியும் அறிவை பற்றிக் கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாத படியால் தகாதவைகளை செய்யும்படி தேவன் அவர்களை கேடான சிந்தனைக்கு ஒப்புக்கொடுத்தார். (ரோமர் 1:28)

ஆகவே கேடான சிந்தனை / செயல் செய்யும்படி ஒரு சக்தி நம்மை இழுக்கிறது. (தீய சக்தி). ஆனால் ஆண்டவரை அறியும் அறிவை நாம் பற்றிக்கொண்டிருக்கும்போது, நம் தேவன் அத்தகைய சிந்தனைகளில் நாம் விழாதபடிக்கு காக்கிறார். பொல்லாத சிந்தனைகள் நம்மை தீட்டுப்படுத்துகிறது. அல்லது நம்மை அருவருக்க செய்கிறது. அதற்கு தீங்காகிய பலன் உண்டு.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.