நோவா ஒரு நீதிமான் மட்டுமல்ல..
அவர் ஒரு பணக்காரராகவும் இருந்ததால் தான் அவ்வளவு பெரிய பேழையை செய்ய முடிந்தது...
அவர் 120 வருடங்கள் “பேழைக்குள் வா, பேழைக்குள் வா” என்று அழைத்தாரே... எத்தனை பேர் வந்தனர் ?? குறைந்தபட்சம் அந்த பேழையை செய்த வேலைக்காரர்கள் யாராவது அவர் பேச்சை கேட்டார்களா ?? இல்லையே...
அதுபோன்று தான் இந்த கடைசி கால ஜனங்களும்... குறிப்பாக கிறிஸ்தவர்கள்...!!
கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையினரும்... இறுமாப்புள்ளவர்களாகவும், அகங்காரிகளாகவும்... தேவனுடைய கற்பனைகளை அசட்டை பண்ணுகிற பரியாசக்காரர்களாகவும் இருக்கிறார்கள்...!!
பிறருக்கு பிரசங்கம் செய்துவிட்டு.. அதை செயலில் காண்பிக்கவில்லையென்றால் கிறிஸ்தவனாக பெயரில் மட்டும் இருந்து என்ன பிரயோஜனம் ??
கிறிஸ்துவுக்கும் அவருடைய கற்பனைகளுக்கும் முழுமையாக கீழ்ப்படிய மனதுள்ளவர்கள் எங்கிருந்தாலும்...
எந்த மார்க்கத்தில் இருந்தாலும்... தேவன் அவர்களை தமது ராஜ்ஜியத்திற்கு செல்லத்தக்கதாக இந்த கடைசி நாட்களில் தகுதிப்படுத்துவார்...!!
சத்தியத்தை சத்தியமாக போதித்துவிட்டு செல்வது தான் நல்லது...!!
“அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.” - (மத்தேயு 22 : 14)
“கிறிஸ்து கிறிஸ்து” என்று கூறும் எல்லோரும் பரலோகம் வருவதில்லை... தெரிந்த கொஞ்சத்தில் உண்மையும் உத்தமுமாக இருப்பவர்களே பரலோகம் செல்வர்...!!
நான் எப்படி❓