*ஆச்சரியமான சாட்சி❗❗*
http://www.ps6811.in/mobile/all-posts.html
👆🏾 *இந்த வலைதளம் ஒரு சகோதரனால் டிசைன் பண்ணப்பட்டு வேதாகமம் பற்றி சொல்லுகிறது. மேலும் அதை முகநூலிலும் வெளியிடுகிறார்.*
https://www.facebook.com/Ps68eleven/
*கீழே அவர் சாட்சியை படியுங்கள்.*
Psalm68eleven Bro வின் சிறிய சாட்சி !
_இரண்டு மாதம் முன்னே ஒரு தொழிற்சாலையில் இயந்திரங்களை துடைத்து பராமரிப்பவனாக இருந்தேன். நான் அங்கேயே இரண்டு வருடம் தங்கினதால், அழுக்கு சட்டை, விகாரமான தோற்றத்தில் தான் நான் எப்போதும் இருப்பேன்._
_இரவில் கம்பெனியில் யாரும் இல்லாத போது, அங்கிருக்கும் லேப்டாப் மூலம் இந்த செய்திகளை எழுதவும், வடிவமைத்து அனுப்பவும் தேவன் கிரியை செய்தார். மற்றபடி நான் ஒரு பாஸ்டரோ, அல்லது வேதாகம கல்லூரி படித்தவனோ அல்ல என்பது என்னை அறிந்தவர்களுக்கு நன்றாக தெரியும்._
_அதுவும் நானா இப்படியெல்லாம் எழுதுகிறேன் என கேட்பவர்களும் உண்டு. தீக்குச்சிகள் சிறியதாக இருந்தாலும் அதை பற்ற வைப்பவர் பெரியவராக இருக்கிறார் என நம்புகிறேன். எனவே தீக்குச்சிகளுக்கு எந்த மதிப்பும் இல்லை என்றே சொல்லுவேன்._
_"பிரயோஜனமற்ற விசுவாசி, செய்ய வேண்டிய கடமையை மட்டும் செய்தேன்"_
_சமீபத்தில் அந்த தொழிற்சாலையை வேறு ஒரு இடத்துக்கு அதன் உரிமையாளர்கள் மாற்றினதால், என் வேலை போனது. ஆனால் நல்ல தேவன் அடுத்த இரண்டே வாரத்தில் இன்னொரு வேலையை எனக்கு கொடுத்து என் நிந்தை நீங்கும் படி செய்தார்._
_இப்பொழுது இந்த வேலையில் 2 மாதம் கடந்து விட்டது. அமெரிக்காவின் டீவி மற்றும் கம்பயூட்டர்களில் உள்ள குறைகளை இங்கிருந்தே சரி செய்வது தான் என் வேலை._
_இங்கே பயிற்சி முடித்து அனேக நாளாக என் வேலை சார்ந்த அறிவில் எந்த வளர்ச்சியும் இல்லை. டிகிரி முடிக்காத இந்த விசுவாசி, அநேக படித்தவர்களுக்கு முன்னே ஒதுக்கப்பட்டு இருந்தேன். ஆனாலும் என்னை இந்த வேலைக்கு அழைத்து வந்த தேவன், என்னை எந்த சூழ் நிலையிலும் நடத்துவார் என நம்பினேன்._
_சமீபத்தில் அநேக டீவிக்களில் ஒரு குறிப்பிட்ட பழுது ஏற்பட அதை எந்த திருத்த முறையை கொண்டும் சரி செய்ய முடியாமல் போனது. இந்த நேரத்தில் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு இதை முடிந்தால் சரி செய், இதுவரை அனேக ஆட்களுக்கு தொடர்பு கொண்டேன், பல மணி நேரம் செலவழித்து இருக்கிறேன், ஒரு பிரயோஜனமும் இல்லை...முடிந்தால் சரி செய் என சவால் விட...எனக்கு என்ன செய்வதென தெரியவில்லை._
_நானும் செயல்முறைகளை தொடங்கலாம் என நினைத்து..." ஆண்டவரே, நீர் சர்வ பூமிக்கும் ஆண்டவராக இருக்கிறீர், உமது ஆளுகைக்கு கீழாக எல்லாம் இருக்கிறது " என மனதில் சொன்னேன்._
_நான் எந்த , செயல்முறைகளையும் செய்யாமல் இருக்கும் போதே, அந்த அமெரிக்க ஆள்....." இது திடீரென சரியாகி விட்டது, மிக மிக நன்றி" என கூறி சந்தோஷப்பட்டார். இத்தனைக்கும் நான் கணிப்பொறியில் அவரது கணக்கை கூட தேட வில்லை. அந்த மனிதர் என்னை பற்றி பாராட்டி என் அலுவலகத்துக்கு ஒரு அஞ்சலை அனுப்பினார்._
_இதே போல முந்தைய வேலையிலும்....ஒரு நாள் வேலையில் தவறுதலாக ஒரு பிழையை செய்து விட்டேன்.அதை யாராலும் மீண்டும் சரி செய்ய முடியாது,_
_இதை செய்த எவ்வளவோ பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்._
_மறு நாள்....அலுவலகத்தில் இயேசுவை பற்றி ஒரு பாடலை எழுதி கொண்டு இருந்தேன். பொதுவாக அடிக்கடி பாடல் எழுதுவது என் வழக்கம்._
_திடிரென என் மேலதிகாரிகள் என்னை சூழ்ந்து கொண்டு, ஏன் இப்படி செய்தாய் என சொல்ல நெருங்கி வர...._
👇🏾👇🏾மீதி கீழே 👇🏾👇🏾
[1/13, 3:12 PM] Pr.தமிழ்மணி: _அப்போது....இன்னொரு மேலதிகாரி என்னுடைய பிழையை மீண்டும் சரி பார்த்தார். அது ஆச்சரியமாக சரியாகி இருந்தது. அவர் உடனே என்னிடம் வந்து இதை எப்படி செய்தாய்.....சொல்...எல்லாருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்._
*_எனக்கெப்படி தெரியும்....என வியந்தேன். பின்னர் தான் கர்த்தர் இதையெல்லாம் செய்கிறார் என உணர்ந்து கொண்டேன்._*
_இப்போது வேலையில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றத்தை தேவன் தருகிறார். நானும் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை சிறிய ஜெபத்துடனே வேலையை செய்கிறேன்._
*கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை.* சங்கீதம் 9:10
மேலும் இந்த ஆண்டில் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்க பட்டது, அதற்காக என்னை மனதளவில் தேவன் தயார்ப்படுத்தி கொண்டு இருக்கிறார். என்னை புரிந்து கொண்ட... நல்லதொரு துணையையும் ஏற்ப்படுத்தி இருக்கிறார்.
*கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.*
.........................................................
*எங்கள் கைகளினாலே வேலைசெய்து, பாடுபடுகிறோம். வையப்பட்டு, ஆசீர்வதிக்கப்படுகிறோம். துன்பப்பட்டு, சகிக்கிறோம்.*
(1 கொரிந்தியர் 4 :12)