நமக்கு தேவன் மூன்று முக்கியமானவைகளை நமக்கு கொடுத்துள்ளார். *இவை இல்லாமல் நாம் வாழ முடியாது. சுவாசம் - பசி - தண்ணீர்.* நாம் கடைசி வரை சரீரத்தோடும் மற்ற மனிதர்களோடும் பழகி வருவதால் இச்சை நம்மைச்சுற்றியே இருக்கும். கர்த்தர் ஆவியின் கனியில் சுயக்கட்டுப்பாட்டை (இச்சையடக்கம்) வைத்தார். ஏனென்றால் நாம் ஆவியில் இரட்சிக்கப்பட்டோம். சரீரத்தை கட்டுப்படுத்தி ஒடுக்கி ஆவியை மேலோங்கச்செய்வது நம்முடைய வேலை. இல்லயென்றால்
யாக்கோபு சொல்லுவதுபோபோல,
'உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது, உங்கள் அவயவங்களில் போர்செய்கிற இச்சைகளினாலல்லவா?"
(யாக்கோபு 4: 1)
அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
(யாக்கோபு 1: 14)
இந்த பாவச்செயலைத்தான் சாத்தான் கடைசி காலத்திலே ஆயுதமாக எடுத்துக்கொண்டிருக்கிறான். உலகில் சபைகள் பெருகிக்கொண்டே வருகிற இந்நிலையில் சபையை கெடுத்தால் தேவனை விட்டு விலகுவார்கள் என்று சபைக்குள் நல்லவனைப்போல் இருந்து தந்திரமாக கெடுப்பான். அதில் ஒரு வழி இச்சை. ஏனென்றால் கடைசி நாட்களில் பரிசுத்தவான்களோடும் இந்த இந்த இச்சை ஆயுதத்தை பயன்படுத்தி வீழ்த்துவான் என வேதம் சொல்லுகிறது. பரிசுத்தவான்களோடு இந்த யுத்தம் ஒன்றைத்தவிர
வேறு ஒன்றும் செய்ய முடியாது.
மேலும், பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி அவர்களை ஜெயிக்கும் படிக்கு அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டதுமல்லாமல், ஒவ்வொரு கோத்திரத்தின்மேலும் பாஷைக்காரர்மேலும் ஜாதிகள்மேலும் அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது.
(வெளிப்படுத்தின விசேஷம் 13: 7)
ஆகவே சாத்தானை எதிர்த்து நில்லுங்கள். அவன் உங்களை ஓடிப்போவான். (யாக் 4: 7)
நாம் எப்படி இருக்க வேண்டும்?
1. தேவனுக்கு கீழ்படிந்து இருங்கள்
2. பிசாற்க்கு எதிர்த்து நில்லுங்கள்
3. தேவனிடத்தில் சேருங்கள், அவர் நம்மிடத்தில் சேருவார்.
4. இருதயத்தை சிந்னையை பரிசுத்தமாக்குங்கள்.
5.நீங்கள் துயரப்பட்டுத் துக்கித்து அழுங்கள். உங்கள் நகைப்பு துக்கிப்பாகவும், உங்கள் சந்தோஷம் சஞ்சலமாகவும் மாறக்கடவது.
6. சகோதரரே ஒருவருக்கொருவர் விரோதமாக பேசாதிருங்கள்.
7. உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை, விட்டு விலகுங்கள்.
*யாரையும் குற்றப்படுத்தாதிருங்கள்*
நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர். *மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்?*
(யாக்கோபு 4 :12)
சாத்தான் வெகு சுலபமாக சரீரத்தின் இச்சையை ஆயுதமாக்குவான். நமக்குள்ளே யுத்தங்களை உண்டாக்குவான். சரீரத்தை ஒடுக்குவோம். துக்கித்து அழுது ஜெபித்து இச்சையடக்கத்தை பெற ஆவியை உயர்த்துவோம். கர்த்தர் உறுதிப்படுத்துவார் கடைசி காலம் வரை.
*நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவுபரியந்தம் அவர் உங்களை ஸ்திரப்படுத்துவார்.*
(1 கொரிந்தியர் 1: 8)