சகோ.மோகன்.சி.லாசரஸ் அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் இயேசு கிறிஸ்து வெளிப்படுத்திய 2017 ம் ஆண்டில் இந்தியாவில் நடைபெறப் போகிற தீர்க்கதரிசனம வார்த்தைகள்.
2017 prophetic words revealed by our *Almighty Lord JESUS CHRIST* to Brother Mohan. C. Lazarus and his prayer team about India
1. பஞ்சம், கொள்ளை நோய், பூமி அதிர்ச்சி அதிகம் உண்டாகும்.
2. இந்தியாவின் மத்திய மாநிலத்தில் கலவரம் உண்டாகும்,
3. அரசியலில் சுத்திகரிப்பு உண்டாகும்
4. சபைகளில் சுத்திகரிப்பு உண்டாகும்
5. அரசாங்கத்தின் புதிய உத்தரவு மூலம் சபைகள் மற்றும் ஊழியர்கள் நெருக்கபடுவர். ஆனால் இதன் மூலம் சபையில் ஒரு சுத்திகரிப்பு உண்டாகி தேசம் எழுப்புதலுக்கு ஆயத்தபடும்,
6. ஆவிக்குரிய எழுப்புதல் உண்டாகும். திரள் கூட்டம் இரட்சிக்கப்படும்.
7. அரசியல்வாதிகள், திரைப்பட துறையினர் இரட்சிக்கப்பட்டு தேவனை வெளியரங்கமாய் மகிமைபடுத்துவர்.
8. புதிய கல்வி முறை நன்மை போல தோன்றும் ஆனால் அதன் மூலம் ஆபத்து வரும்.
9. தீவிரவாதிகள் தேசத்தில் ஊடுருவ அரசியல்வாதிகள் துணை புரிவர், ஆனால் நாம் ஜெபிக்கும் போது தேவன் அதை வெளியரங்கமாக்குவார்.
10. தண்ணீரால் பஞ்சம், கொடுமை, மரணம் உண்டாகும்.
11. மீனவர்கள் பாதிக்கபடுவர்
12. காற்றால் பயங்கரம் உண்டாகும். பல நாட்கள் இருக்கும். இதன் மூலம் தோல் வியாதி, கொப்பளம் உண்டாகும். இது இயற்கையாய் நடப்பது அல்ல இது ஒரு கொடிய விஞ்ஞானம்.
13. பொருளாதார மையம் ஆரம்பிக்கப்பட்டு அதன் மூலம் சிறு வியாபாரிகள் பாதிக்கபடுவர்.
14. விவசாயிகள் மேல் தீமை வரும், விவசாயிகளின் தற்கொலைகள் பெருகும்.
15. விவசாயிகளின் தற்கொலைகளினிமித்தம் தேசத்தில் சாபம் அதிகரிக்கும்.
16தேசத்தில் விதவைகள் பெருகுவார்கள்.
17. அதிகாரிகள் ஏழைகளை விழுங்குவர்.
18. மருத்துவ துறையில் ஒரு பயங்கரம் உண்டாகும்.
19. தேசத்தில் திடுக்கிடும் பல சம்பவங்கள் நடைபெறும்.
20. சென்னையை மையமாக வைத்து ஒரு கள்ள உபதேசம் பரவும்.
என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத
திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக்கொடுப்பேன். 2 நாளாகமம் 7 :14.
நாம் யாவரும் நம் தேசத்திற்காக ஜெபம் செய்வோம்.
குறிப்பாக விவசாயிகளுக்காக ஜெபம் செய்வோம்.
அரசாங்கம் விவசாயிகள் மீது கவனம் செலுத்த ஜெபம் செய்வோம்.