இந்த உலகத்தில் மாயை எவை ?

இந்த உலகத்தில் மாயை எவை ?

மாயை, மாயை எல்லாம் மாயை - பிரச 1-2

1) மாயையான பட்டம், பதவி:-

தானியேல் தேவ பக்தன் அரசனுக்கு அடுத்த ஸ்தானத்தில் எல்லா அதிகாரங்களோடு இருந்து வந்தார். ஆனால் அவருடைய பதவி சத்துருவின் சதித்திட்டத்தால் பறிக்கபட்டு, ஒரு கொலை பாதகனை போல சிங்க கெபியில் தள்ளபட்டார்
(2) 127 நாடுகளுக்கு மன்னன் ஆக இருந்த  ஆகாஸ்வேருக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்த ஆமான் எவ்வளவு புகழோடு வாழ்ந்து இருப்பான்.
முந்தின நாள் இரவு சக்கரவர்த்தியான ஆகாஸ்வேருக்கு அடுத்த மிகப் பெரிய ஸ்தானம். ஆனால் மறுநாள் மொர்தெகாய் என்ற யூத மனிதனை குதிரையில் ஏற்றி அந்த குதிரையை  வழி நடத்தி செல்லும் குதிரைக்காரன் வேலை அவனுக்கு கிடைத்தது (எஸ்தர் 6-11)

மாயையான மனைவி:-

(1) கர்த்தருடைய தாசனாகிய யோபுக்கு ஒரு மனைவி இருந்தாள். ஆஸ்தியும், ஜசுவரியம், மக்கள் செல்வம் யோபுக்கு குறைவின்றி இருந்த நாளில் அவரை நேசித்து கனப்படுத்தினாள். ஆனால் சுழ்நிலை மாறிய போது அவள் தலைகிழாக மாறிவிட்டாள். தன் புருஷனை சாகும்படியாக ஆலோசனை சொல்லுகிறாள். எத்தனை பயங்கரமான காரியம்.

மாயையான பிள்ளைகள்:-

யாக்கோபுக்கு "உமக்கு தலை பிள்ளையாக அழகு குமாரன் பிறந்திருக்கிறான்" என்று அவனிடம் சொன்ன போது அவன் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருப்பான். ஆனால் பின் நாளில் அந்த மகனை சபிக்கும் வார்த்தைகளை பாருங்கள் "நீ மேன்மை அடைய மாட்டாய்" ஆதி 49-4
(2) தகப்பன்,தாய், சகோதரன் லாபான் ரெபேக்காளை மிகவும் அதிகமாக நேசித்து வந்தார்கள். ரெபேக்காளுக்கு திருமணம் ஒழுங்கானது. அவள் முன்பின் அறியாத இடத்திற்கு, பழக்கமில்லாத மனிதன் உடன் புறப்பட ஆயத்தமாகிறாள். அப்போது பெற்றோரும், சகோதரரும் 10 நாட்கள் தங்களுடன் தங்கி செல்ல மன்றாடி கேட்கின்றனர். ஆனால் ரெபேக்காள் அவர்கள் விருப்பத்திற்கு இணங்காமல் தன்னுடைய மணவாளன் ஈசாக்கை சந்திக்க புறப்பட்டு செல்கிறாள். (ஆதி  24-55) இது தான் மக்கள் என்ற மாயையின் காரியம்

மாயையாகிய ஜசுவரியம், ஆஸ்தி, செல்வம்:-

யோபுக்கு 7000 ஆடு, 3000 ஒட்டகம், 500 ஏர் மாடு,  500"கழுதை, ஏராளமான வேலைக்காரர்களை ஒரே நாளில் இழந்தான் (யோபு 1:14-17
தேவ பிள்ளையே உலக மாயைகளான கணவன், மனைவி, உற்றார், உறவினர், பட்டம், பதவி, ஆஸ்தி, ஜசுவரியம், உத்தியோகம், வீடு, வாசல் எதின் பேரிலும் உன் பற்றையும், பாசத்தையும், நம்பிக்கையும் ஒருக்காலும் வைத்து விடாதே. இவை எல்லாம் தங்களுக்கு சிறகுகளை ஊண்டு பண்ணி கொண்டு ஒரு நாள் உன்னை விட்டு ஆகாய மார்க்கமாய் பறந்து போய் விடும் (நீதி 23-5)

பொய்யான மாயைப் பற்றிக்கொள்கிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்.
யோனா 2:8

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.