கல்மழை - கல்மழையோடு அக்கினி (எரி கற்கள்) மழை - கந்தக மழை, ( சோதோம் கொமோரா பட்டணம் மீது) உப்பை பொழிதல் ( லோத்து மனைவிமீது)
இவையெல்லாம் கர்த்தரின் நியாயத்தீர்ப்புகள்.
முதல் எக்காளம் ஊதும்போது இரத்தம் கலந்த கல்மழை பூமியின்மீது போடப்படுகிறது. பூமியின் மூன்றிலொரு பங்கு மரங்கள் வெந்து போயின, பசும்புல் எரிந்து போயிற்று.
கடைசி எக்காளம் ஊதும்போது பூமியிலே மனிதர்கள் மீது விழுந்தது. அவர்கள் தேவனை தூஷித்தார்கள்.
முதலாம் தூதன் எக்காளம் ஊதினான், அப்பொழுது இரத்தங்கலந்த கல்மழையும் அக்கினியும்உண்டாகி, பூமியிலே கொட்டப்பட்டது, அதினால் மரங்களில் மூன்றிலொருபங்கு வெந்துபோயிற்று, பசும்புல்லெல்லாம் எரிந்துபோயிற்று.
(வெளி. விசேஷம் 8: 7)
★ சமீப (2014- 2016) ஆண்டுகளில் சவுதி அரேபியா, சீனா, துருக்கி நாடுகளில் கல்மழை பெய்ந்துள்ளது குறிப்பிடத்தக்க நிகழ்வுகள். *இவைகளெல்லாம் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் அடையாளங்கள்.*
எகிப்து தேசத்திலே அவர்கள் தெய்வமாக வணங்கின 10 தேவர்களாலே (ஆவிகள்) கர்த்தர் அவர்களை வாதித்தார்.
தெய்வங்கள் : (எல்லாம் அசுத்த ஆவிகள்)
1. நைல் நதி Habi ஆவி - (நைல் நதி தெய்வத்தாய் )
- தேசமெங்கும் நதி இரத்தமயமானது. மீன்கள் செத்தன, நீரை குடிக்க முடியவில்லை, ஒரு வாரத்திற்க்கு. நதியோர நீரூற்றுகளை எகிப்தியர் தோண்டினார்கள்.
(தேசத்து மந்திரவாதிகளும் நதியை ரத்தமாக்கி தங்கள் வரத்தை காட்டினாலும் நதியை கெடுக்கவே செய்தார்கள்.) (மடையர்கள்!!)
2. Heqet பிறப்பின் தெய்வத்தாய்
- தலை தவளை மாதிரி) - எகிப்து முழுதும் தவளைகளால் நிறைந்தது. இஸ்ரவேலர் பகுதி காக்கப்பட்டது. தவளைகள் இறந்து நாடே நாற்றமெடுத்தது.
3. Set பாலைவன தெய்வத்தாய்
- நாடு முழுதும் வண்டுகள் பரவியது
4. Re. சூரிய தேவர்
- பேன்கள் மனிதர் மீதும் மிருகங்கள் மீதும் மொய்த்தன.
5. கருவுருதலின் தெய்வத்தாய் Hathor
- மாட்டு தலையுடன் தெய்வத்தாய்
- மாடுகள் நோய் வந்து இறந்து போயின. இஸ்ரவேலர் மிருகங்கள் காக்கப்பட்டன.
6. Sehemat நோய்க்கு எதிரான தெய்வத்தாய்
- எரிபந்த கொப்பளங்கள் - மனிதர்கள் மீதும் மிருகங்கள் மீதும்
7. Nut வானத்தின் தெய்வத்தாய்
- கல்மழை அக்கினி - மனிதர்- மிருகம் - பயிர் கைகள் - மரங்கள் அழிந்து எரிந்தது.
8. Nut பயிர்களின் தேவர் & கருத்தரித்தலின் தேவர்
வெட்டுக்கிளிகள் பூமியின் முகம் முழுவதையும் மூடிற்று. தேசம் அவைகளால் அந்தகாரப்பட்டது. கல்மழைக்குத் தப்பியிருந்த நிலத்தின் பயிர்வகைகள் யாவையும் மரங்களின் கனிகள் யாவையும் அவைகள் பட்சித்துப்போட்டது. எகிப்து தேசம் எங்குமுள்ள மரங்களிலும் வயல்வெளியின் பயிர்வகைகளிலும் ஒரு பச்சிலையும் மீதியாயிருக்கவில்லை.
(யாத்திராகமம் 10 :15)
9. Re, சூரிய, Nut பயிர்கள், Hathor தேவர்கள்
- பூமி காரிருள் ஆனது - மூன்று நாள்
10. Min, Hathor, Isis - Isis குழந்தைகளை காக்கும் தேவர், Min மறுபிறப்பு தெய்வத்தாய், Hathor கருவுருதலின் தெய்வத்தாய்,
- தலைச்சான் குழந்தைகள் மடிந்தனர், பார்வோன் குழந்தை மடிந்தது.
கலந்த அக்கினியும் மிகவும் கொடிதாயிருந்தது. எகிப்து தேசம் குடியேற்றப்பட்ட நாள்முதல் அதல் அப்படி ஒரு போதும் உண்டானதில்லை.
(யாத்திராகமம் 9: 24)
கர்த்தர் வானத்திலிருந்து இஸ்ரவேலின் எதிரிகளான எமோரிய படைகள் மீது பெரிய கற்களை விழப்பண்ணினார், அவர்கள் இறந்தனர். பட்டயத்தால் கொல்லப்பட்ட இஸ்ரவேலர்களை விட கல்மழையில் இறந்தவர்கள் அதிகமாய் இருந்தனர்.
(யோசுவா 10: 11)
மீதி கீழே 👇🏾
[1/12, 6:10 PM] Pr.தமிழ்மணி: கர்த்தர் மகத்துவமானவர், தமது சத்தத்தைக் கேட்கப்பண்ணி, உக்கிர கோபத்தினாலும், பட்சிக்கிற அக்கினிஜூவாலையினாலும் இடி பெருவெள்ளம் கல்மழையினாலும், தமது புயத்தின் வல்லமையைக் காண்பிப்பார்.
(ஏசாயா 30: 30)
கர்த்தரோ என்றென்றைக்கும் இருப்பார், தம்முடைய சிங்காசனத்தை நியாயத்தீர்ப்புக்கு ஆயத்தம் பண்ணினார்.
(சங்கீதம் 9: 7)
*கர்த்தரின் நியாயத்தீர்ப்புக்கு முன் தைரியமாய் நிற்போம்.*