*True Story*
அது ஒரு கிறிஸ்மஸ் தினம்.
1968ம் ஆண்டு. அமெரிக்காவின் *அப்பொல்லோ-8* விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
அது நிலாவின் பின்பகுதியை முதன்முதலாக சுற்றி ஆராய்ச்சி செய்தது.
அதில் மூன்று விண்வெளி வீரர்கள் இருந்தனர். அவ்விண்கலத்தின் கண்ணாடி வழியாகப் பார்த்த அவர்கள் ஒருவரும் கண்டிராத ஒரு அற்புதக் காட்சியைக் கண்டனர்.
முழு நிலவு பூமியின் அடிவானத்திலிருந்து தோன்றினால் எப்படியிருக்குமோ அது போல, நிலாவின் அடிவானத்திலிருந்து பூமி எழுவதைக் கண்டனர்.
*பூமியின் அழகை*க் கண்ட அவர்களின் உடல் சிலிர்த்தது.
வெண்மையும், நீலநிறமும் கலந்ததாய் காரிருளில் மிதந்து வந்த ஒரு அழகு பந்து போல, பூமி அவர்கள் முன் வலம் வந்தது.
அதன் பின்புறமாக இருந்த சூரியனின் வெளிச்சமும் அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பதாய் அமைந்தது.
உடனே பூமியிலுள்ள தங்கள் சகாக்களோடு இந்த அழகு காட்சியை விளக்க கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டனர்.
இந்த அற்புதக் காட்சியை விளக்க கவிஞர்களின் வார்த்தைகளைத் தேடினர் பொருத்தமானதாக ஏதும் கிடைக்கவில்லை. தத்துவஞானிகளின் சொற்றொடர்களை தேடினார்கள்; அதிலும் ஏற்றதாக எதுவும் இல்லை.
சிறிது நேரம் தடுமாறிய அவர்கள் தாங்கள் விண்கலத்திற்கு கொண்டு சென்ற *வேதாகமத்தை* திறந்து முதற்பக்கத்தை எடுத்து,
*ஆதியிலே தேவன் வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்தார்* என்ற வார்த்தையை மட்டுமே வாசித்தனர்.
அவ்வசனம் ஒன்றே பொங்கிவரும் உணர்வின் முழு ஆழத்தையும் வெளிப்படுத்துவதாய் இருந்தது.
இப்படியாக கிறிஸ்மஸ் தினத்தில் அண்ட சராசரங்களை படைத்த *தேவனுடைய வல்லமையை* நிலாவிலிருந்து பூமியிலுள்ளோருக்கு அறிவித்தனர்....!!!
கிறிஸ்மஸ் தினத்தை மகிழ்ச்சியாய் கொண்டாட தேவன் நமக்கு கிருபை செய்தார்
தன்னுடைய ஒரே பேறான குமாரனை நமக்கு கொடுத்த அன்பை நினைத்து தாழ்பணிந்து *நன்றிகளை* செலுத்துவோம்.
அந்த குமாரனாகிய இயேசுகிறிஸ்து ஒரு சிறு குழந்தையாக மட்டும் இன்று நம் கண்முன்பாக இருக்கக்கூடாது.
அவர் *சர்வ வல்லமையுள்ள* தேவன் என்பதையும் நினைவிற்கொள்ள வேண்டும்.
அன்று அப்பொல்லோ-8 ராக்கெட்டில் சென்ற அமெரிக்க விண்வெளி வீரர்கள் அந்நாளில் கர்த்தரை மகிமைப்படுத்தி, அவருடைய மாட்சிமைகளை பூமிக்கு அறிவித்ததுபோல,
நாமும் மகத்துவமுள்ள குமாரனின் வல்லமைகளையும், அவருடைய ஆச்சரியமிகும் செய்கைகளையும் அவர் *மீண்டும் வரப்போவதையும்*
பூமியெங்கும் சொல்ல இந்த நாளிலே உறுதியான தீர்மானத்தை எடுப்போம்.
_____________________________
By s j s k
