வெளி 1:19

கர்த்தர்க்கு ஸ்தோத்திரம்.

தேவனுடைய கிருபையால் இன்று

Rev.1.19 தியானிப்போம்.

வெளிப்படுத்தின
விசேஷம் 1:19
[19]நீ கண்டவைகளையும் இருக்கிறவைகளையும், இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது;

இந்த வசனம் மூன்று காரியத்தை கூறுகிறது
1. கண்டவை

2. இருக்கிறவை

3. இனி சம்பவிக்க
போகிறவைகள்.

இந்த புத்தகம் வாசிக்கும் போது மேற்க் கொண்ட மூன்று காரியத்தையும் புரிந்து கொண்டால் இந்த புத்தகத்தின் முழு செய்தியும் கோர்வையாக புரியும்.
வெளிப்படுத்திய விசேஷத்தின் முதல் அதிக கம் 4ம் அதிகரமே முதல் அதிகாரம்.....

1. 10-17 வரை இருக்கிறதையும்.

4 - 22 அதிகாரம் இனி சம்பவிக்க வேண்டியவைகளையும்...
கூறுகிறது

இனி சம்பவிக்க வேண்டியவையை குறித்து வேதம் கூறுகிறது.

எரேமியா 5:30
*திகைத்துத் திடுக்கிடத்தக்க காரியம் தேசத்திலே நடந்துவருகிறது.*

2 இராஜாக்கள் 5:26

[26]அப்பொழுது அவன் இவனைப்பார்த்து: அந்த மனுஷன் உனக்கு எதிர்கொண்டுவர தன் இரதத்திலிருந்து இறங்கித் திரும்புகிறபோது என் மனம் உன்னுடன்கூடச் செல்லவில்லையா? பணத்தை வாங்குகிறதற்கும், வஸ்திரங்களையும் ஒலிவத்தோப்புகளையும் திராட்சத்தோட்டங்களையும் ஆடுமாடுகளையும் வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் *வாங்குகிறதற்கும் இது காலமா?*

ரோமர் 13:11-14
*நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப்பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது.*

*இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று; ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம்.*

*களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும், பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்.*
*துர்யிச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்

தாவீது இப்படி கூறினார்?!

சங்கீதம் 11:3
*அஸ்திபாரங்களும் நிர்மூலமாகின்றனவே, நீதிமான் என்னசெய்வான்?*??????
இதற்க்கு பதில் .

சங்கீதம் 112:7
[7]துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்; *அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும்.*

இனி வரும் காலம் மிக கடினமான காலம்.,
இதற்க்கு நாம் தப்ப ஒரே ஒரு வழிதான் உண்டு அதுதான் ஜெபம்.

லூக்கா 21:36
*ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.*

1 பேதுரு 4:7
*எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு  ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.*
எபேசியர் 6:18
*எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனவுறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள*்.
யூதா 1:20
*நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி,*

*Apostle.c.k.Kirubakaran*
27/12/3026 பதிவு

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.