சபை
சபை என்பது தேவனுடைய ஆலயம் கிறிஸ்துவின் சரீரம் தேவ ஞானத்தை வெளிப்படுத்துமிடம் எனவே சபை கூடுவதை விடலாகாது. எபி10:25
பெற்றோர்களிடம் பேச எதுமில்லையென்றாலும் கேட்க நிறைய இருக்கும். அதுபோலத் தான் தேவனும் . தேவனிடம் நமது தேவைகளை கேட்கிறோமே தவிர அவருடைய சித்தத்தை கேட்கத் தவறுகிறோம்.
சபை என்பது இரட்சிக்கும் நற்செய்தியை உலகெங்கும் சர்வ சிருஷ்டிக்கும் போதிக்கும் இடம். தேவனை மகிமைப்படுத்துமிடம். மத்28:18-20
குழந்தைக்கு சின்னச் சின்ன விஷயத்தை கற்றுக் கொடுப்பது போல தேவன் நமக்கு கற்பிக்கிறார்.தேவ கட்டளைகளையும் கற்பனைகளையும் கற்று வளர்ச்சியடையவும் சபைக்கு செல்ல வேண்டும்.
நாம் நமது நண்பர்கள் fb whats up காக நேரம் செலவிடுகிறோம். கர்த்தருக்காக நாம் எவ்வளவு நேரம் ஒதுக்குகிறோம். மத் 18:20
நாம் இவ்வுலகில் எதை ஆதாயப்படுத்தினாலும் கிறிஸ்துவை பற்றும் அறிவில் வளர்வதே நமது ஆதாயம்.2பேதுரு 3:18
பவுலைப் போல நம் வாழ்வில் நல்ல போராட்டத்தை போராடி ஓட்டத்தை முடித்து பந்தய பொருளை அடைய வேண்டும். பிலி :12'14
நம்மீது தேவன் எவ்வளவு அன்பு வைத்தார் என்பதை இயேசு மரணத்தாலே நிரூபித்தார். ஆபிராமும் ஈசாக்கு மூலம் தமது விசுவாசத்தை நிரூபித்தார். யாக் 2:18 கிரியை இல்லா விசுவாசம் செத்தது.
நாம் நமது ஞானத்தினாலும் இச்சையடக்கத்தாலும் நற்பண்புகளை தேவனுக்கேற்றவைகளாக வளர வேண்டும்.2பேதுரு 1:5
யோபு தன்னுடைய வீழ்ச்சிக்கெதிராக போராடி தாங்கி நின்றார்.ஆதலால் அவன் பின்னிலைமை ஆசீர்வதித்தார்.யூதாஸ் தேவ அறிவை விட்டு விலகியதால் வீழ்ந்து போனார். எனவே வீழ்ச்சிக்கெதிராக விசுவாசத்தை கைக்கொள்ள வேண்டும்.2பேதுரு2:20'22
நல்லதோ கெட்டதோ அப்போஸ்தலர்கள் இயேசுவுக்காய் வாழ்ந்து மரித்து தமது அன்பை நிரூபித்தனர். பிதாவும் இயேசு வை நமக்காக தந்து நம்மேல் அன்புகூர்ந்தார். நாம் நமது அன்பை நிரூபிக்க வேண்டும்.யோவா14:15
சபை கூடிவருதலை தவிர்பது அலட்சியம் செய்வதாகும். முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் நமக்கு முன்னுதாரணமாக உள்ளனர்.அப் 2:46 எபி 10:25
சபை கூடுதலை தவிர்த்தல் குறைவான அன்பை வெளிப்படுத்துகிறது.எபி 12:24-25
ஆவிக்குரிய வளர்ச்சியின்மை ஆகிறது.2பேதுரு 2:6 நோவாவின் நாட்களும்,சோதோம்.கொமோராவும் விளக்கும்.
வளர விரும்பாத பிள்ளை
நாம் அனைவரும் பிள்ளைகளைப் போல் தேவனிடத்தில் திரும்ப வேண்டும் 1பேதுரு 2:2
எரியும் விறகானது அனல் குறைந்தால் கரியாகிடும். அது வீணே. ஆவியிலே அனலாயிருக்க வேண்டும்.வெளி 3:15-16
ஆபேல் கர்த்தருடைய சமூகத்தை தேடினான். அதனால் ஆபேலின் ரத்தம் இன்று வரை நம்மிடையே சாட்சியாகவும் நம்மிடம் பேசுகிறது.எனவே சபை கூடி வருதலை விட்டு விடாமல் ஆவியிலே அனலாயிருப்போம்.🙏🏻

Amen. Glory to God
ReplyDelete