கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
Apostle. c.k.Kirubakaran
தேவனுடைய கிருபையால் நாம் தொடர் தியானமாக வெளிப்படுத்திய விசேஷம் தியானத்து வருகிறோம்...
இன்றும் கூட நாம்.
வெளிப்படுத்தின விசேஷம் 1:20
*என் வலதுகரத்தில் நீ கண்ட ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது; அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம்; நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம்.*
இந்த வசனம் ரெண்டு காரியத்தை கூறுகிறது.
*1. நட்சத்திரம்.*
*2. குத்து விளக்கு*
இதில் நட்சத்திரம் ரகசியமா?
தூது ரகசியமா?
நட்சத்திரம் ரகசியம் அதேவேளையில்அவர்கள் கொண்டு வரும் தூது ரகசியம் தேவனுடைய ரகசியம் சபையின் மூலமாகவே வெளிப்பட வேண்டும்.
எபேசியர் 3:10-11
*உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது சபையின் மூலமாய் இப்பொழுது தெரியவரும் பொருட்டாக,*
[11]இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
நெகேமியா 13:2
*அவர்கள் என்றைக்கும், அந்தச் சாபத்தை ஆசீர்வாதமாகத் திருப்பின*
எங்கள் தேவனுடைய சபைக்குட்படலாகாது என்று எழுதியிருக்கிறதாகக் காணப்பட்டது,
தேவ ஜனம் எப்போதும் தேவ வார்த்தையை போதிப்பதில் முழு கவணம் செல்லுத்த வேண்டும்.
மாற்கு 4:13
*பின்பு அவர் அவர்களை நோக்கி: இந்த உவமையை நீங்கள் அறியவில்லையா? அறியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படி அறிவீர்கள்?*
ஒருவர் ஊவமைகளை அறியா விடில் கெட்டுப் போவார்கள்.
மாற்கு 4:11-12
[11]அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.
*அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார்.*
எனவே தான் வேதம்.
மாற்கு 13:14
[14]மேலும் பாழாக்குகிற அருவருப்பைக்குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே; *வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்;*அது நிற்கத்தகாத இடத்திலே நீங்கள் அதை நிற்க காணும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 13:18
[18]இதிலே ஞானம் விளங்கும்; அந்த *மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக் கடவன்*;
அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.
சபையை குறித்து நாம் தொடர் பேசக்காரியம் அது ரகசியம்.,............
எனவே தேவ ஜனம் தேவ வார்த்தையை தொடர்ந்து சிந்தித்து பரலோக ராஜ்ஜியத்தின் ரகசியம் அறிந்து அவரை பின் தொடர்வோம்.
மத்தேயு 13:11
*அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை.*
