பாவிகளான நமக்கு கடவுள் இரக்கம் பாராட்டியிருக்கிறார், அந்த இரக்கத்தை
அவரதுஒரேபேறான குமாரனின் மூலம் வெளிப்படுத்தி பாவத்திலிருந்து நம்மை
விடுவித்து, நம்முடைய இருட்டான இருதயத்தை வெளிச்சமாக்கி நம்மை
பிரகாசித்திருக்கிறார். இயேசுகிறிஸ்துவினுடைய பரிபூரணத்தினால் நாம்
எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்று பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த
ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின்
பெலன்களையும் ருசிபார்த்தும் இருக்கிறோம்.
நாம் இயேசுகிறிஸ்துவினால் பழைய பாவவாழ்க்கையிலிருந்து விடுவிக்கப்பட்டு,
அவருடைய இரத்தத்தினால் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம். ஆம் இது
உண்மைதான், இங்கு அநேகருடைய கேள்வி - பாவத்திலிருந்து
விடுதலையாக்கப்பட்டபிறகு நாம் எதை தொடர்ந்து செய்யவேண்டும், நாம் எதில்
தொடர்ந்து நிலைத்திருக்க
வேண்டும்?
எனக்கு மூலவியாதி உண்டு, ஆரம்பத்தில் அது இருப்பது தெரியாமல் இருந்தது;
பின்பு ஒருநாள் அந்த நோயின் குணம் தெரியஆரம்பித்தது; இரத்தப்போக்கும்,
தாங்கமுடியாத வலியும், சோர்வும் தொடர்ந்தது.
மருத்துவர் கொடுத்த மருந்து மாத்திரைகளின் மூலம் குணமாகிவிட்டது.பின்பு
ஒருநாள் மருத்துவரை சந்திக்கும்போது அவர் எனக்கு சொன்ன அட்வைஸ் என்ன
தெரியுமா?!
இப்போது நீ மருந்து மாத்திரைகளால் மூலவியாதியிலிந்து குணமாகிவிட்டாய்!!!
மீண்டும் உனக்கு மூலவியாதி வராதபடி எச்சரிக்கையாயிரு!!! தண்ணீர் அதிகமாக
குடி, மசாலா சம்பந்தமான உணவுகளை அதிகமாக சாப்பிடாமல் இருப்பது நல்லது,
தயிர், இளநீர் போன்றவைகளை தினந்தோரும் சாப்பிடுவது நல்லது, ஒரே இடத்தில்
அதிக நேரம் உட்காரக்கூடாது - இவைகளை நீ கைவிடாமல் அனுதினமும்
கடைப்பிடித்து வந்தால் மூலவியாதி உன்னை நெருங்குவதில்லை என்றார்.
"இதோ,நீ சொஸ்தமானாய், ****அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப்
பாவஞ்செய்யாதே****" என்று ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சொல்கிறார்.
இயேசுகிறிஸ்து நம் வாழ்விற்க்கு ஒளியாயிருக்கிறார், நாம் அனுதினமும்
நம்முடைய மனசும், மாம்சமும் விரும்பினவைகளை செய்யாமல், அவரையே பின்பற்றி,
அவரை மட்டுமே சார்ந்து வாழ்ந்தால் நாம் இருளிலே நடவாமல் ஜீவஒளியை
அடைந்திருப்போம்.
"இயேசுகிறிஸ்து எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால்
அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக் கொண்டு,
என்னைப் பின்பற்றக்கடவன்."
இயேசுகிறிஸ்துவானவர் நம் இருதயத்தை முழுவதுமாக (சொஸ்த)சுத்தப்படுத்தி,
உள்ளத்தில் புதிய ஆவியைத்தந்திருக்கிறார்; சாத்தானின் அந்தகார
அதிகாரத்திலிருந்தும், அவனின் பாவகிரியையின் பிடியிலிருந்தும் நம்மை
விடுவித்திருக்கிறார்.
இயேசுகிறிஸ்து நம்முடைய மீறுதல்களை அறிந்திருக்கிறார், நாம் உடைந்து போய்
நம் பாவங்களை ஒப்புக்கொள்ளும்போது இயேசு நம்மை நோக்கி: நானும் உன்னை
ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை, நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே
என்கிறார்.
நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து
எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும்
நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என்
ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும்
வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 18 :4
Edited by Elango Gopal
(Mumbai)