கிறிஸ்தவம் - கடவுள் தன் முழுசித்தத்தையும் தன்னுடைய குமாரனான இயேசுகிறிஸ்துவின் மூலமாக நிறைவேற்றுதல்!!!

கிறிஸ்தவம் - கடவுள் தன் முழுசித்தத்தையும் தன்னுடைய குமாரனான
இயேசுகிறிஸ்துவின் மூலமாக நிறைவேற்றுதல்!!!

கடவுள் பரிசுத்தராயிருக்கிறார், அவர் படைத்த அனைத்து சிருஷ்டிகளும்
பரிசுத்தமாயும், நன்மையாயும் இருந்தது.
மனிதனையும் பரித்தமாயும், பூரணமாயும், செம்மையாயும் படைத்தார். கடவுளான
தனக்கு தன்னுடைய சிருஷ்டிகள் அனைத்தும் கீழ்ப்படிய வேண்டுமென்று
விரும்பினார்.கீழ்ப்படிந்து வாழ்ந்தால் நன்மையும், ஜீவனும் உண்டென்றும்,
கீழ்ப்படியாமல் போனால் தீமையும், மரணமும் உண்டென்றும் உறுதியாக
சொல்லியிருந்தார்.

ஆனால் மனிதர்களோ கடவுளுக்கு கீழ்ப்படியாமல் தனது அனேக தந்திரமான
நடக்கைகளால் கடவுளை விட்டுப்பிரிந்து தன் மனதின் இஷ்டத்தில் நடந்து
பாவத்தில் மரித்துபோய் "வாழ்ந்துக்கொண்டிருந்தார்கள்".கடவுள் மனிதர்களை
படைத்த நோக்கம் அவர்கள் மாம்ச வாழ்க்கையை முடித்து மண்ணோடு மண்ணாக
போகவேண்டும் என்பதற்க்காக அல்ல, இந்த உலக வாழ்க்கைக்கு பிறகு ஜீவனுள்ள
கடவுளோடு ஜீவனுள்ளவர்களாய் என்றென்றைக்கும் வாழவேண்டும் என்பதற்க்காகவே!

கடவுள் அன்பாகவே இருக்கிறார். கடவுள் தன் அன்பை மனிதர்களுக்கு
வெளிப்படுத்தினார்; ஆதியிலிருந்தே தன்னோடு இருந்த அந்த ஜீவனின் மூலமாகவே
அந்த அன்பை வெளிப்படப்பண்ணினார்
தன்னைவிட்டு விலகிப்போன மனிதர்களை மீண்டும் தன்னிடமாக திருப்பவும்,
அவர்கள் தன்னோடு அன்பின் ஐக்கியம்கொள்ளவும், பாவிகளான நாம்
பரிபூரணபடவும், நமக்கு ஜுவனுண்டாயிருக்கவும், அழியாமையைக்கொடுக்கவும்
விரும்பி ஆதியிலிருந்தே கடவுளோடு கடவுளாக இந்த ஜீவன் இருந்தது.

அந்த ஜீவனின் மூலமாக சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது. பரலோகத்திலுள்ளவைகளும்
பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல
வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும்,
அதிகாரங்களானாலும், சகலமும் அந்த ஜீவனைக்கொண்டும்,அந்த ஜீவனெக்கென்றும்
சிருஷ்டிக்கப்பட்டது.

வானத்திலும், பூமியிலும், காணப்படுகிறவைகளும், காணப்படாதவைகளும்
உண்டாகுவதற்க்கு முன்பாகவே அந்த ஜீவன் கடவுளோடு இருந்தது, அந்த ஜீவன்
கடவுளாகவே இருந்தது.இந்த ஜீவன் மனுசருக்கு ஜீவனாயிருந்தது, எந்த
மனுசரையும் பிரகாசிப்பிக்கிற ஒளியாயிருந்தது. அந்த ஜீவன் மாம்சமாகி
மனிதனானது - இவரே கடவுளின் ஒரேபேறான குமாரன் - இயேசுநாதர். இவர்
அதரிசமான கடவுளின் தற்சுருபமும், காணக்கூடாத கடவுளின் சாயலும், கடவுளின்
மகிமையின் பிரகாசமும், கடவுளின் தன்மையின் சொருபமும், ஆதியும்,
அந்தமுமானவர்.

நாம் ஜீவனுள்ள கடவுளை விட்டுவிலகி பாவத்தில் மரித்து
ஜீவனற்றவர்களாயிருந்தோம்.தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம்
பிழைக்கும்படிக்குத் கடவுள் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் கடவுள்
நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற
கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு
உண்டாயிருக்கிறது.இந்த உலகத்தில் வேதனைகளும், வலிகளும், மரணமும்,
பசியும், பட்டினியும், இன்னும் பல பிரச்சனைகளும் உண்டு. அதெற்கெல்லாம்
கடவுள் முடிவு வைத்திருக்கின்றார், அந்த முடிவுக்கு தொடக்கமாகவே தம்முடைய
குமாரனை நமக்காக அனுப்பினார்.கடவுள் அவருடைய ஒரேபேறான குமாரனை நமக்காக
அனுப்பி நம்முடைய பாவங்களையெல்லாம் அவர்மேல்வைத்து பாவமறியாத அவரை
பாவமாக்கினார். மூன்றாம் நாள் அவரை உயிரோடெழுப்பி, பரலோகத்தில் தன்னுடைய
வலதுபாரிசத்தில் உட்காரவைத்தார்.

அந்த குமாரனே இன்று வரைக்கும் நமக்காக கடவுளிடம்
பரிந்துபேசிக்கொண்டிருக்கிறார். அந்த குமாரனான இயேசுகிறிஸ்துவே மீண்டும்
இப்பூமிக்கு வந்து நம்மை அவரோடுகூட உயரத்தில் எடுத்துக்கொளளபோகிறார்.
தேவபிள்ளைகளான நாம் என்றென்றைக்கும் கடவுளோடும், இயேசுகிறிஸ்துவோடும்
வாழ்வோம். ஆமென்.நீங்கள் இந்த இயேசுவை விசுவாசித்து, அவரிடம் உங்களுடைய
பாவங்களை சொல்லி அதைவிட்டுவிட்டால் அவர் உங்களுக்கு
சமாதானமும்,சந்தோஷமும் கொடுப்பார். அவரே நம் இருதயத்தை பிரகாசிப்பவர்.
வேதனையான, துக்கம்நிறைந்த நம் மனதை அவரே ஆறுதல் செய்கிறவர், நமக்கு
நித்தியஜீவனை தரக்கூடியவர்.

கடவுள் நமக்காக ஒரு அழியாத புது உலகத்தையும், வானத்தையும்
உண்டுபண்ணியிருக்கிறார், அவரை விசுவாசித்து அவருக்கு கீழ்ப்படிந்து
வாழ்பவர்கள், இறைவனால் உண்டுபண்ணின அந்த அழியாத நரகத்தில் நுழைவார்கள்,
அந்த புது நகரத்தில் கடவுளோடும், இயேசுகிறிஸ்துவோடும் வாழ்வார்கள்,
சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீதசத்தமும் அதில் உண்டாயிருக்கும்.

அந்த புதிய உலகத்தில் கடவுள் தாமே நம்முடைய கண்ணீர் யாவையும் துடைப்பார்,
இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை;அங்கே
நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேல் இருக்கும்; சந்தோஷமும்
மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.


Edited by Elango Gopal
(Mumbai)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.