1. வானத்திலிருந்து அடையாளம்:
"பரிசேயரும் சதுசேயரும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து:
வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்கவேண்டும் என்று
கேட்டார்கள்".-- மத்தேயு 16:1
2. காலங்களின் அடையாளம்:
"உதயமாகிறபோது செவ்வானமும் மந்தாரமுமாயிருக்கிறது, அதினால் இன்றைக்குக்
காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரரே,
வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின்
அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா?".-- மத்தேயு 16:3
3. தீர்க்கதரிசியின் அடையாளம்:
"யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக்
கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, அவர்களைவிட்டுப்
புறப்பட்டுப்போனார்".-- மத்தேயு 16:4
4. வஞ்சிக்கத்தக்க பெரிய அடையாளம்:
"ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி,
கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய
அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்".-- மத்தேயு 24:24
5. மனுஷகுமாரனுடைய அடையாளம்:
"அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது,
மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல்
வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்".--
மத்தேயு 24:30
"வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே, நீங்கள் அவைகளாலே
கலங்காதிருங்கள்" -- எரேமியா 10:2