1. இயேசுவின் நாமத்தினாலே அடையாளங்கள்:
அப்போஸ்தலர் 4:30 "உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே
அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக்
குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய
வசனத்தை முழுதைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு
அநுக்கிரகஞ்செய்தருளும் என்றார்கள்"
2. அப்போஸ்தலருடைய கைகளினாலே அடையாளங்கள்:
அப்போஸ்தலர் 5:12 "அப்போஸ்தலருடைய கைகளினாலே அநேக அடையாளங்களும்
அற்புதங்களும் ஜனங்களுக்குள்ளே செய்யப்பட்டது. எல்லாரும் ஒருமனப்பட்டு
சாலொமோனுடைய மண்டபத்தில் இருந்தார்கள்"
3. ஜனங்களுக்குள்ளே அடையாளங்கள்:
அப்போஸ்தலர் 6:8 "ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும்
நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும்
செய்தான்"
4. வசனத்திற்குச் சாட்சியாக அடையாளங்கள்:
அப்போஸ்தலர் 14:3 "அவர்கள் அங்கே அநேகநாள் சஞ்சரித்துக் கர்த்தரை
முன்னிட்டுத் தைரியமுள்ளவர்களாய்ப் போதகம்பண்ணினார்கள்; அவர் தமது
கிருபையுள்ள வசனத்திற்குச் சாட்சியாக அடையாளங்களும் அற்புதங்களும்
அவர்கள் கைகளால் செய்யப்படும்படி அநுக்கிரகம்பண்ணினார்"
5. பிலிப்புவினால் நடந்த அடையாளங்கள்:
அப்போஸ்தலர் 8:13 "அப்பொழுது சீமோனும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று,
பிலிப்பைப்பற்றிக்கொண்டு, அவனால் நடந்த அடையாளங்களையும் பெரிய
அற்புதங்களையும் கண்டு பிரமித்தான்"