*.1. வாசஸ்தலங்களில் வெளிச்சம்:
"இஸ்ரவேல் புத்திரர் யாவருக்குமோவெனில் அவர்கள் வாசஸ்தலங்களிலே
வெளிச்சமிருந்தது". -- (யாத்திராகமம் 10:23)
*.2. இரவில் வெளிச்சம்:
"அவர் மேகத்தை மறைவுக்காக விரித்து, இரவை வெளிச்சமாக்குகிறதற்காக
அக்கினியையும் தந்தார்". -- (சங்கீதம் 105:39)
*.3. இருளில் வெளிச்சம்:
"செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்". -- (சங்கீதம் 112:4)
*.4. மரண இருளில் வெளிச்சம்:
"அவர் அந்தகாரத்திலிருக்கிற ஆழங்களை வெளியரங்கமாக்கி, மரண இருளை
வெளிச்சத்தில் கொண்டுவருகிறார்". -- (யோபு 12:22)
*.5. மறைவிடத்தில் வெளிச்சம்:
"ஒரு துளியும் கசியாதபடி ஆறுகளை அடைக்கிறான்; மறைவிடத்திலிருக்கிறதை
வெளிச்சத்திலே கொண்டுவருகிறான்". -- (யோபு 28:11)
"அவர்கள் வெளிச்சமற்ற இருளிலே தடவித் திரிகிறார்கள்" -- (யோபு 12:25)