Prakash Pathi “கேளுங்கள் - கொடுக்கப்படும்”

1. கேளுங்கள் - கொடுக்கப்படும்:"கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக்
கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள்
அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்". -- (மத்தேயு 7:7)

2. தேடுங்கள் - கொடுக்கப்படும்:"முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய
நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக்
கொடுக்கப்படும்". (மத்தேயு 6:33)

3. கொடுங்கள் - கொடுக்கப்படும்:"கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும்
கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து,
உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த
அளவினால் உங்களுக்கும் அளக்கப்படுமென்றார்". -- (லூக்கா 6:38)

4. உள்ளவனுக்கு - கொடுக்கப்படும்:"ஆதலால் நீங்கள் கேட்கிற
விதத்தைக்குறித்துக் கவனியுங்கள்; உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்;
இல்லாதவனெவனோ அவன் தனக்குண்டென்று நினைக்கிறதும் அவனிடத்திலிருந்து
எடுத்துக்கொள்ளப்படும் என்றார்". -- (லூக்கா 8:18)

5. கனி தருகிறவர்களுக்கு - கொடுக்கப்படும்:"ஆகையால், தேவனுடைய ராஜ்யம்
உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற
ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்". -- (மத்தேயு 21:43)

6. கொடுக்கிறவர் - கொடுக்கப்படும்:"உங்களில் ஒருவன் ஞானத்தில்
குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும்
ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது
அவனுக்குக் கொடுக்கப்படும்". -- (யாக்கோபு 1:5)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.