Prakash Pathi “சொல்லப்படும்’

1. செய்யவேண்டியது சொல்லப்படும்:

"அப்போஸ்தலர் 9:6 அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்னசெய்யச்
சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து,
பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும்
என்றார்"

2. செய்யும்படி நியமிக்கப்பட்டதெல்லாம் சொல்லப்படும்:

அப்போஸ்தலர் 22:10 "அப்பொழுது நான்: ஆண்டவரே, நான் என்னசெய்யவேண்டும்
என்றேன். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, தமஸ்குவுக்குப் போ; நீ
செய்யும்படி நியமிக்கப்பட்டதெல்லாம் அங்கே உனக்குச் சொல்லப்படும்
என்றார்"

3. செய்ததும் சொல்லப்படும்:

மத்தேயு 26:13 "இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ
அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று
மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்"

4. ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும்:

வெளி 11:8 "அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய்ச்
சொல்லப்படும்; அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார்"

"முதல்-முதல் தரிசனம்"

1. ஒருவருக்கு இயேசு தரிசனமானார்:

"வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா
மரியாளுக்கு
முதல்-முதல் தரிசனமானார்". (மாற்கு 16:9)

2. இரண்டு பேருக்கு இயேசு தரிசனமானார்:

"அதன்பின்பு அவர்களில் இரண்டு பேர் ஒரு கிராமத்துக்கு நடந்துபோகிறபொழுது
அவர்களுக்கு மறுரூபமாய்த் தரிசனமானார்". (மாற்கு 16:12)

3. பதினொருவருக்கு இயேசு தரிசனமானார்:

"அதன்பின்பு பதினொருவரும் போஜனபந்தியிருக்கையில் அவர்களுக்கு அவர்
தரிசனமாகி". (மாற்கு 16:14)

4. பன்னிருவருக்கு இயேசு தரிசனமானார்:

"கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்". (I கொரிந்தியர் 15:5)

5. ஐந்நூறு பேருக்கு இயேசு தரிசனமானார்:

"அதன்பின்பு அவர் ஐந்நூறு பேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரே வேளையில்
தரிசனமானார்".
(I கொரிந்தியர் 15:6)

6. பவுலுக்கு இயேசு தரிசனமானார்:

"எல்லாருக்கும் பின்பு, அகாலப் பிறவி போன்ற எனக்கும் தரிசனமானார்". (I
கொரிந்தியர் 15:8)

7. நமக்கு இயேசு தரிசனமாவார்:

"கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம்
பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை
அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்". (எபிரெயர் 9:28)

"J-o-y-f-u-l H-e-a-r-t"

*.1. இருதயம்
சந்தோஷப்படும்:

"அதுபோல நீங்களும் இப்பொழுது துக்கமடைந்திருக்கிறீர்கள். நான் மறுபடியும்
உங்களைக் காண்பேன், அப்பொழுது உங்கள் இருதயம் சந்தோஷப்படும், உங்கள்
சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான்". (யோவான்
16:22)

*.2. இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறது:

"கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச்
சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும்,
கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது". (சங்கீதம் 19:8)

*.3. சந்தோஷமும், இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது:

"உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய
வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு
மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நாமம்
எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது". (எரேமியா 15:16)

*.4. இருதயத்தைச் சந்தோஷப்படுத்து:

"என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவுகொடுக்கத்தக்கதாக, நீ
ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து". (நீதிமொழிகள் 27:11)

"நல் வார்த்தை"
(எபிரெயர் 6:5)

1. கிருபையுள்ள வார்த்தை:

லூக்கா 4:22 "எல்லாரும் அவருக்கு நற்சாட்சி கொடுத்து, அவருடைய
வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து
ஆச்சரியப்பட்டு"

2. இரட்சிக்கப்படுவதற்கேதுவான வார்த்தை:

அப்போஸ்தலர் 11:14 "நீயும் உன் வீட்டாரனைவரும் இரட்சிக்கப்படுவதற்கேதுவான
வார்த்தைகளை அவன் உனக்குச் சொல்லுவான் என்று அந்தத் தூதன் தனக்குச்
சொன்னதாகவும் எங்களுக்கு அறிவித்தான்"

3. வாக்குத்தத்தமான வார்த்தை:

ரோமர் 9:9 "அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது: குறித்த காலத்திலே
வருவேன், அப்பொழுது சாராள் ஒரு குமாரனைப் பெறுவாள் என்பதே"

4. பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தை:

I கொரிந்தியர் 2:13 "அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே
பேசாமல்,பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை
ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறோம்"

5. விசுவாசத்திற்குரிய வார்த்தை:

I தீமோத்தேயு 4:6 "இவைகளை நீ சகோதரருக்குப் போதித்துவந்தால்,
விசுவாசத்திற்குரிய வார்த்தைகளிலும் நீ அநுசரித்த நற்போதகத்திலும்
தேறினவனாகி, இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல ஊழியக்காரனாயிருப்பாய்"

6. புத்திமதியான வார்த்தை:

எபிரெயர் 13:22 "சகோதரரே, நான் சுருக்கமாய் உங்களுக்கு எழுதின இந்தப்
புத்திமதியான வார்த்தைகளை நீங்கள் பொறுமையாய் ஏற்றுக்கொள்ளும்படி
வேண்டிக்கொள்ளுகிறேன்"

7. ஜீவ வார்த்தை:

I யோவான் 1:1 "ஆதிமுதலாய் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள்
கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே
தொட்டுப்பார்த்ததுமாயிருக்கிற ஜீவ வார்த்தையைக் குறித்து உங்களுக்கு
அறிவிக்கிறோம்"

"அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே" - வெளி 19:13

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.