1. உத்தம இருதயம்:
I நாளாகமம் 29:9 "உத்தம இருதயத்தோடே உற்சாகமாய்க் கர்த்தருக்குக் கொடுத்தார்கள்".
2. உத்தம இடம்:
ஏசாயா 56:5 "நான் அவர்களுக்கு என் ஆலயத்திலும், என் மதில்களுக்குள்ளும்
குமாரருக்கும் குமாரத்திகளுக்குமுரிய இடத்தையும்
கீர்த்தியையும்பார்க்கிலும், உத்தம இடத்தையும் கீர்த்தியையும்
கொடுப்பேன்".
3. உத்தம குணம்:
பிலிப்பியர் 2:22 "தகப்பனுக்குப் பிள்ளை ஊழியஞ்செய்வதுபோல, அவன்
என்னுடனேகூட சுவிசேஷத்தினிமித்தம் ஊழியஞ்செய்தானென்று அவனுடைய உத்தம
குணத்தை அறிந்திருக்கிறீர்கள்".
4. உத்தம ஜனம்:
லூக்கா 1:17 "பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும்,
கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான
ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும்
பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான்".
5. உத்தம ஆசீர்வாதம்:
சங்கீதம் 21:3 "உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டுவந்து,
அவர் சிரசில் பொற்கிரீடம் தரிப்பிக்கிறீர்".