"உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை
உணர்வுள்ளவர்களாக்கும்" -- (சங்கீதம் 119:130)
1. கர்த்தரின் வெளிச்சம்:
ஏசாயா 2:5 "யாக்கோபின் வம்சத்தாரே, கர்த்தரின் வெளிச்சத்திலே நடப்போம் வாருங்கள்"
2. முகத்தின் வெளிச்சம்:
சங்கீதம் 89:15 "கெம்பீரசத்தத்தை அறியும் ஜனங்கள் பாக்கியமுள்ளவர்கள்;
கர்த்தாவே, அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள்"
3. விடியற்கால வெளிச்சம்:
II சாமுவேல் 23:4 "அவர் காலையில் மந்தாரமில்லாமல் உதித்து,
மழைக்குப்பிற்பாடு தன் காந்தியினால் புல்லைப் பூமியிலிருந்து
முளைக்கப்பண்ணுகிற சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருப்பார்
என்றார்"
4. பெரிய வெளிச்சம்:
மத்தேயு 4:15 "இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக்
கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது"
5. நித்திய வெளிச்சம்:
ஏசாயா 60:20 "உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை, உன் சந்திரன்
மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன்
துக்கநாட்கள் முடிந்துபோம்"
*.ஏசாயா 30:26 "கர்த்தர் தமது ஜனத்தின் முறிவைக் கட்டி, அதின்
அடிக்காயத்தைக் குணமாக்கும் நாளிலே, சந்திரனுடைய வெளிச்சம் சூரியனுடைய
வெளிச்சத்தைப்போலவும், சூரியனுடைய வெளிச்சம் ஏழத்தனையாய் ஏழு பகலின்
வெளிச்சத்தைப்போலவும் இருக்கும்"
*.யோபு 18:18 "அவன் வெளிச்சத்திலிருந்து இருளில் துரத்திவிடப்பட்டு,
பூலோகத்திலிருந்து தள்ளுண்டுபோவான்"