1. கேளுங்கள்.
கொடுக்கப்படும்:
மத்தேயு 7:7 "கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்;
தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத்
திறக்கப்படும்"
2. கேட்பவையெல்லாம் கொடுக்கப்படும்:
எஸ்தர் 2:13 "இப்படி ஜோடிக்கப்பட்ட பெண் ராஜாவினிடத்தில் பிரவேசிப்பாள்;
கன்னிமாடத்திலிருந்து தன்னோடேகூட ராஜ அரமனைக்குப்போக, அவள் தனக்கு
வேண்டுமென்று கேட்பவையெல்லாம் அவளுக்குக் கொடுக்கப்படும்"
3. விரும்புகிற காரியம் கொடுக்கப்படும்:
நீதிமொழிகள் 10:24 "துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து
நேரிடும்; நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்"
4. அப்பம் கொடுக்கப்படும்:
ஏசாயா 33:16 "அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்; கன்மலைகளின்
அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக்
கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்"
5. ஆளுகை கொடுக்கப்படும்:
தானியேல் 7:27 "வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரீகமும்
ஆளுகையும் மகத்துவமும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்குக்
கொடுக்கப்படும்; அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம்; சகல
கர்த்தத்துவங்களும் அவரைச் சேவித்து, அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்
என்றான்"