Prakash Pathi "பெ று வீ ர் க ள்" - (மத்தேயு 21:22)

1. இரக்கம் - பெறுவார்கள்:

மத்தேயு 5:7 "இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்"

2. இரக்கத்தினாலே இரக்கம் - பெறுவார்கள்:

ரோமர் 11:31 "அவர்களும் இப்பொழுது கீழ்ப்படியாமலிருந்தும், பின்பு
உங்களுக்குக்கிடைத்த இரக்கத்தினாலே இரக்கம் பெறுவார்கள்"

3. வரம் - பெறுவீர்கள்:

அப்போஸ்தலர் 2:38 "பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி,
ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே
ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப்
பெறுவீர்கள்"

4. பரிபூரணம் - பெறுகிறவர்கள்:

ரோமர் 5:17 "அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே அந்த ஒருவன்மூலமாய்,
மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின்
பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை
அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே"

5. கிரீடம் - பெறுவீர்கள்:

I பேதுரு 5:4 "அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது
மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்"

6. வாக்குத்தத்தம் - பெறும்படிக்கு:

எபிரெயர் 10:36 "நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து,
வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு
வேண்டியதாயிருக்கிறது"

7. ராஜ்யம் - பெறுகிறவர்கள்:

எபிரெயர் 12:28 "ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம்
பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி
கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்"

*."நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்" -- (I கொரிந்தியர் 9:24)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.