Prakash Pathi - “உனக்குச் சொல்லப்படும்”

1. மந்திரவாதம் இல்லை என்று சொல்லப்படும்:

எண்ணாகமம் 23:23 "யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை,
இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை; தேவன் என்னென்ன செய்தார்
என்று கொஞ்சக் காலத்திலே யாக்கோபையும் இஸ்ரவேலையும் குறித்துச்
சொல்லப்படும்"

2. மகிழுவோம் என்று சொல்லப்படும்:

ஏசாயா 25:9 "அக்காலத்திலே: இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக்
காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்; இவரே கர்த்தர், இவருக்காகக்
காத்திருந்தோம்; இவருடைய ரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம் என்று
சொல்லப்படும்"

3. பியூலா என்று சொல்லப்படும்:

ஏசாயா 62:4 "நீ இனிக் கைவிடப்பட்டவள் என்னப்படாமலும், உன் தேசம் இனிப்
பாழான தேசமென்னப்படாமலும், நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும்
சொல்லப்படும்; கர்த்தர்உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம்
வாழ்க்கைப்படும்"

4. பிள்ளைகள் என்று சொல்லப்படும்:

ஓசியா 1:10 "என்றாலும், இஸ்ரவேல் புத்திரரின் தொகை அளக்கவும் எண்ணவுங்
கூடாத கடற்கரை மணலைப்போலிருக்கும்; நீங்கள் என் ஜனமல்ல என்று
அவர்களுக்குச் சொல்வதற்குப் பதிலாக நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள்
என்று அவர்களுக்குச் சொல்லப்படும்"

5. தளரவிடாதே என்று சொல்லப்படும்:

செப்பனியா 3:16 "அந்நாளிலே எருசலேமைப் பார்த்து, பயப்படாதே என்றும்,
சீயோனைப் பார்த்து உன் கைகளைத் தளரவிடாதே என்றும் சொல்லப்படும்"

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.