Prakash Pathi “வெளிச்சமாயிருக்கும்”

"உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்" (மத்தேயு 6:22)

1. கர்த்தர் வெளிச்சமானவர்:

சங்கீதம் 27:1 "கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர்,
யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு
அஞ்சுவேன்?"

2. வேதமே வெளிச்சம்:

நீதிமொழிகள் 6:23 "கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவ வழி"

3. நீங்கள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்:

மத்தேயு 5:14 "நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்
மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது"

(a). வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம்:

மத்தேயு 5:15 "விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத்
தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும்
வெளிச்சம் கொடுக்கும்"

(b). மனுஷர் முன்பாக வெளிச்சம்:

மத்தேயு 5:16 "இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு,
பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம்
அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது"

(c). இருளில் இருக்கும் ஜனங்களுக்கு வெளிச்சம்:

மத்தேயு 4:15 "இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக்
கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது"

*."உங்களில் எவன் கர்த்தருக்குப்பயந்து, அவருடைய தாசனின்
சொல்லைக்கேட்டுதனக்கு வெளிச்சமில்லாததினால் இருட்டிலே நடக்கிறானோ, அவன்
கர்த்தருடைய நாமத்தைநம்பி, தன் தேவனைச்சார்ந்துகொள்ளக்கடவன்" (ஏசாயா
50:10)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.