யாரோ ஒருவர் சொன்னது "எங்கெல்லாம் நாகரீகம் வளர்ந்துள்ளதோ அங்கெல்லாம்
தோண்டிப் பாருங்கள் ஒரு மிசனெறியின் கல்லறை இருக்கும்." இந்த வார்த்தை
நூற்றுக்கு நூறு உண்மை. பரிசுத்த வேதத்தில் பார்க்கும் போது
அப்போஸ்தலர்கள் எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் மாற்றம்
ஏற்ப்பட்டது. மந்திரவாதிகள் மனம் திரும்பினார்கள், சிலை வியாபாரம்
பாதிக்கபட்டது. உலக ஐஸ்வர்யத்தில் தரித்திரராயிருந்த மக்கதொனியர்கள்
ஆவிக்குரிய வாழ்வில் ஐஸ்வர்ய சம்பன்னனானார்கள்.
அயல் நாட்டு மிசனெறிகளால் இருண்ட ஆப்பிரிக்க கண்டம் வெளிச்சம் பெற்றது.
அயல் நாட்டு மிசனெறிகள் நம் நாட்டிற்கு வந்ததும் ஆதிவாசிகள் ஆண்டவருக்கு
சொந்தமானார்கள், பார்த்தாலே பாவம் என்றென்னப்பட்டவர்கள் கூட பரமனால் பனை
மரத்தை விட மேலான உயரத்திற்கு கொண்டு போகப்பட்டார்கள், தீண்டத்தகாதவர்கள்
கூட பரலோக தேவனின் பிள்ளைகளானார்கள்.இந்த மாற்றங்கள் ஏற்பட காரணம்:
அவர்களின் ஒரே தாரக மந்திரம் "அவர் பெருக வேண்டும் நாங்கள் சிறுக
வேண்டும்" என்பதே, அவர்களின் அடிப்படை தத்துவம் "தேவ ராஜ்ஜியம்
வார்த்தையில் அல்ல பெலத்தில் உள்ளது அதாவது கிரியையில் உள்ளது" என்பதே,
உன்னைப் போல் பிறனை நேசி" என்கிற கிறிஸ்தவ அன்பும் சகோதரத்துவமுமே.இத்தனை
மாற்றங்களும், நாகரிக முன்னேற்றங்களும் எந்தவிதமான விஞ்ஞான
முன்னேற்றங்களும் இல்லாத காலத்தில் ஏற்ப்பட்டது என்பதுதான் இங்கு
கவனிக்கப்பட வேண்டியது.
அன்றைக்கு ஏற்ப்பட்ட மாற்றங்களையும் நாகரீக முன்னேற்றங்களையும்இன்றைய
நவீன கால ஊழியங்களாலும் மிசனெறி இஸ்தாபனங்களாலும் ஏற்படுத்த முடியவில்லை.
இதற்க்கு காரணம்: இன்றைய மிசனெறிகள் மற்றும் மிசனெறி இஸ்தாபன தலைவர்களின்
குறுகிய மனப்பான்மை. ஆதிவாசிகள் ஆதிவாசிகாளாகவே இருக்க வேண்டும்,
சேரிவாசிகள் சேரிவாசிகளாகவே இருக்கவேண்டும் என்கிற குறுகிய மனப்பான்மை.
ஆதிவாசிகளும், சேரிவாசிகளும்மாறிவிட்டால் அவர்களின் பிழைப்பு
பாதிக்கப்படும் என்கிற சுய நலமுமே. இந்தியாவில் உள்ள ஊழிய
இஸ்தாபனங்களும், மிசனெறி இஸ்தாபனங்களும் இதுவரை கொடுத்துள்ள ஊழிய
அறிக்கையை பார்த்தால் இதுவரை நூறு முறை இந்தியா இரட்சிக்கப்பட்டிருக்க
வேண்டும். ஆனால் இந்தியாவில் கிறிஸ்தவம் இன்னும் பத்து சதவிகிதத்தை
தாண்டவில்லை என்பதே இதற்க்கு சிறந்த எடுத்துகாட்டாகும்.
இந்தியாவில் கால் நூற்றாண்டு, அரை நூற்றாண்டு ஏன் நூறு ஆண்டுகளை கடந்த
மிசனெறி இஸ்தாபனங்களும், ஊழிய நிறுவனங்களும் உண்டு. ஆண்டுகளை தாண்டி
இவர்களின் சொத்து மதிப்புகள் கூடின அளவிற்கு மாற்றங்கள் ஏற்படவில்லை
என்பது இவர்களின் சுயநலத்திற்கும், குறுகிய மனப்பான்மைக்கும் மற்றொரு
எடுத்துக்காட்டாகும். எனவே இனிவருகிற காலங்களிலாகிலும் சுயநலம் தவிர்த்து
தேவ அன்பை மையமாகக்கொண்டு கிறிஸ்துவின் சுவிசேசத்தை
பிரசங்கிப்போம்இந்தியா இயேசுவுக்குசொந்தமாகும்என்பதை விட இந்தியர்களில்
பெரும்பாலானோர் இயேசுவுக்கு சொந்த மாவார்கள் என்பது அதிநிச்சய