​வேதத்திலே அண்ணகர்கள் (- சகோ.தமிழ்மணி)

வேதத்தில் அண்ணகர்கள் என்பவர்கள் இக்காலத்திய திருநங்கைகள் அல்ல என ஒரு
கருத்து இருக்கிறது. நானும் அப்படித்தான் இருந்தேன். அதில்
விதையடிக்கப்பட்டவர்கள் என்று ஒர் இனத்தை பார்த்தேன். அது ஆண்கள்
திருநங்கை ஆக செய்வது. பின் நானும் அண்ணகர் திருநங்கைதான் என முடிவுக்கு
வந்தேன். இதையும் தவறு என்று சொன்னாலும் வேதத்தில் மூன்று புத்தகத்தில்
உள்ள வசனங்களைக்கொண்டு திருநங்கைகளை ஊழியத்திற்க்கு வரவேற்கலாம். ஆண்
பெண்ணாக மாறுவதில் எந்தவிதமான கலப்பு வித்து இல்லை. ஆணாக இருக்கும்போதே
பெண்ணின் பாவனை வர கலப்பு வித்து காரணமல்ல. கர்த்தருக்கு பிடிக்காதது
கலப்பு வித்து.
வேதத்திலே அண்ணகர்கள்
தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு,
மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு, பரலோகராஜ்யத்தினிமித்தம்
தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு, இதை ஏற்றுக்கொள்ள வல்லவன்
ஏற்றுக்கொள்ளக்கடவன் என்றார். (மத்தேயு 19 :12)

1. திருநங்கைஆண் பையன் கொஞ்சம் கொஞ்சமாக பெண் தன்மை அடைந்து பெண்ணாக
தன்னை அறுவை சிகிச்சையில் தன்னை மாற்றிக்கொள்வது.
இந்தியாவிலும் மற்ற இடங்களிலும் இருப்பார்கள். தாம்பத்திய வாழ்க்கை
வாழ்ந்து குழந்தை பெற முடியாது.

அண்ணகர்கள்பெண்ணாக பிறந்து ஆண் தன்மையாக மாறும். விதையடிக்கப்பட்டவர் –
கோசுரு இவர்கள்தான். குழந்தை பெற முடியாது. இது முதல் வகை

2. பிறப்பிலேயே அண்ணகர் – திருநங்கை –குழந்தை பாக்கியம் இல்லை.

3. திருமணம் பண்ணாத அண்ணகர்கள். இவர்கள் நம்மைப்போல ஆண் பெண் சாதுக்கள்.
1& 2 ஆணும் பெண்ணும் இல்லாதவர்கள். ஆகவே பைபிள்படி அண்ணகர் – திருநங்கை ஒண்ணுதான்.

தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக
உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்.
அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில்
மாம்சமுமாய் இருக்கிறாள். இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி
என்னப்படுவாள் என்றான். (ஆதியாகமம் 2 :22- 23)

தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு,
மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு, பரலோகராஜ்யத்தினிமித்தம்
தங்களை அண்ணகர்கள் ஆக்கிக்கொண்டவர்களும் உண்டு, இதை ஏற்றுக்கொள்ள வல்லவன்
ஏற்றுக்கொள்ளக்கடவன் என்றார். (மத்தேயு 19 :12)

யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை. அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை,
ஆணென்றும் பெண்ணென்றுமில்லை. நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள்
ஒன்றாயிருக்கிறீர்கள். (கலாத்தியர் 3 :28)

எப்படி இவர்களை ஏற்றுக்கொள்ள முடியும்? என கேட்பவர்கள் பலர் உண்டு.

திருநங்கை பிள்ளைப்பேறு பெற முடியாத ஆண்கள் வெறுக்கும் பெண்கள்
வெறுக்கும் இன மக்கள். ஒரு வழியில் திக்கற்றவர்கள். கர்த்தர்
திக்கற்றவராய் விடுவாரா?

நம் கண்ணோட்டம் பாலியல் பார்வையாயிருக்கிறது. அண்ணகர் வேதத்தின்படி
திருமணம் செய்யாத சாதுக்களையும் குறிக்கும். திருநங்கை ஆணும் அல்ல
பெண்ணும் அல்ல, Trans gender. விதையடிக்கப்பட்டவர்கள் இவர்களும்
பாவம் அண்ணகர்கள்தான். இவை எல்லாவற்றையும் ஒப்புக்கொள்ளாவிடினும் அவர்கள்
விபச்சாரி ஆனாலும் கிறிஸ்தவராக ஏற்கிறோமே. கலப்பு வித்து இல்லாத
யாவைரையும் தேவன் உயர்த்துவார். ஆணோ பெண்ணோ தமிழனோ முஸ்லீமோ சிங்களனோ
யாவருமே ஏற்கப்படுவார்களே
யாருக்குமே பிடிக்காதவனைத்தானே கர்த்தருக்கு பிடிக்கும். குஷ்டரோகியை
தொட்டவர். அண்ணகர்களை உலகம் விபச்சாரியாய் பார்க்கிறது. நாம் கிறிஸ்வரா
பார்ப்போம். அப்படித்தானே இயேசு பார்க்கிறார்.

முதல் கற்பனையில் வாழ்கிறோம், இரண்டாம் கற்பனையும் சேர்த்து
கிறிஸ்தவ திருநங்கை பேட்டி
https://youtu.be/QKk-x7gtAzI

வேதாகமத்திலே அண்ணகர் என்றால் யார்?
அண்ணகர்களுக்கு கர்த்தர்
(EUNUCHS) உத்தமமான இடத்தை கொடுப்பேன் என்கிறார். ஏனென்றால் அவர்கள்
பரிசுத்தமாக வாழ்வது இந்த உலகத்தில் மிகவும் கடினமான ஒன்று.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிடிக்காத இனமாக இருப்பதால் அவர்கள் எங்கே
போவார்கள்?
குழந்தைப்பேறு இல்லாதவர்கள். யார் இவர்களை மனமுவந்து வரவேற்பார்கள்?
அண்ணகர்கள் அரண்மனைகளில் பெரிய பதவிகளிலும் பொறுப்புகளிலும் இருந்தமைக்கு
வேதாகமம் சான்று சொல்கிறது. வேதாகமத்தில் அண்ணகர்கள் பற்றி 50 முறை
சொல்லப்பட்டுள்ளது.

அண்ணகர்கள் வகித்த பதவிகள்:

★ பிரதானிகள்
(2 இரா 9 :32, எரே 38: 7,
ஆதி 37: 36, எஸ்தர் 1 :11)
ராஜாவின்
அரண்மனைகளில்
பிரதானிகள்,
★ பானபாத்திரக்காரரின்
தலைவன்,
★ சுயம்பாகிகளின் தலைவன்
(ஆதி 40:: 2)
★ தலையாரிகளுக்கு அதிபதி
(ஆதி 37: 36)
★ ராஜஸ்திரீக்கு மந்திரி
(அப் 8 :27)
உபா 23: 1 படி இவர்கள்
முன்னைய காலங்களில் ஆலய ஆராதனைகளில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

பிற் காலங்களில் சிறப்பான முறையில் அங்கீகரிக்கப் படுவதாக கர்த்தர் எசாயா
தீர்க்கதரிசி மூலமாக
கூறியுள்ளார்.

"என் ஓய்வுநாட்களை ஆசரித்து, எனக்கு இஷ்டமானவைகளைத் தெரிந்துகொண்டு, என்
உடன்படிக்கையைப்பற்றிக் கொள்ளுகிற அண்ணகர்களைக் குறித்துக் கர்த்தர்
சொல்லுகிறது என்னவென்றால்:

(ஏசாயா 56 :4)
"நான் அவர்களுக்கு என் ஆலயத்திலும், என் குமாரருக்கும்
குமாரத்திகளுக்குமுரிய இடத்தையும் கீர்த்தியையும்பார்க்கிலும், உத்தம
இடத்தையும் கீர்த்தியையும் கொடுப்பேன், என்றும் அழியாத நித்திய நாமத்தை
அவர்களுக்கு அருளுவேன்."
(ஏசாயா 56 :5)

எவ்வளவு பெரிய பாக்கியம் பாருங்கள். உத்தமமான இடத்தைத் தருவேன் என்கிறார் கர்த்தர்.

தேவாலயத்தில் சேர்க்கப்படாதவர்கள் பின் எவ்வாறு சிறந்த அங்கீகாரம்
பெற்றனர் என்பதை அறிந்திருப்பீர்கள்.

மத்தேயு நற்செய்தியில்
மத் 19: 12 தாயின் கருவில் அண்ணகர்கள் ஆனவர்கள் உண்டு. பிறரால்
அண்ணகர்கள் ஆனவர்கள் உண்டு.பரலோக ராஜ்ஜியத்தின் நிமித்தம் தங்களை
அண்ணகர்கள் ஆக்கிகொண்டவர்கள் உண்டு. இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்று
கொள்ளகடவன் என்று இயேசு சொன்னார்.

★ தாயின் வயிற்றிலிருந்து அண்ணகராய் பிறந்தவர்கள் – பிறக்கும்போதே
அவர்களுடைய பிறப்பு உறுப்பு ஆணுறுப்பும் பெண் உறுப்பும் இராமல்
உறவிற்க்கு தகுதியற்றதாய் இருக்கும், இவர்கள் அண்ணகர்கள்.

★ பரலோக ராஜ்ஜியத்தின் நிமித்தம் அண்ணகர் என்றால் ஆண்களோ பெண்களோ (ஆண்கள்
அதிகம்) கல்யாணம் செய்து கொள்ளாமல் வெறுமனே சாது ஆகி கர்த்தருக்கு
அர்ப்பணித்து வாழ்பவர்கள் அண்ணகர்கள். அப். பவுலை கூட சொல்லலாம்.

மேலும் அப்போஸ்தலர்
8:: 26-40 ல் இயேசுவின் சீடர்களில் ஒருவரான பிலிப்பு என்பவர்
எத்தியோப்பியா ஊரை சேர்ந்த நிதி அமைச்சராக பணி புரிந்த அண்ணகர்
ஒருவருக்கு திருமுழுக்கு கொடுத்து அவரை இறைப்பணியில் ஈடுபடுத்தியதாக
வேதாகமம் சொல்லுகிறது. நாமும் அண்ணகர்களுக்காக ஜெபிப்போம். அவர்களுக்கு
சுவிசேசம் அறிவிப்
அண்ணகர்கள் என்றால் இக்காலத்திலே திருநங்கைகள் என்று கூறலாம்.

மற்றபடி திருமணமே செய்து கொள்ளாமல் சில ஆண்கள் கர்த்தருக்காக வாழ்பவர்களை
அண்ணகர்கள் என்றும் சொல்லுவார்கள். சாது என்று தங்கள் பெயர் முன்னே
இணைத்துக் கொள்வார்கள். சிலர் இணைக்க மாட்டார்கள். கர்த்தருக்கென்றே
தன்னை அர்ப்பணம் செய்து விடுவார்கள்.

இன்று நிறைய திருநங்கைகள் இயேசுவை ஏற்றுக்கொண்டு வாழ்ந்து ஊழியம் செய்து
வருவது ஆச்சரியமல்ல.

பல நிலையில் உயர்ந்தும் வாழ்கிறார்கள். பதவிகளிலும் இருக்கிறார்கள்.

இந்தியாவில்
சில ஊழியங்கள் திருநங்கைகளுக்காக ஊழியம் செய்து வருகிறார்கள்.

பிலிப் – அண்ணகர் ஞானஸ்நானம்
இந்த விசயத்தில் நிறையக்கற்றுக்கொள்ளலாம்.

*PHILIP AND THE EUNUCH*

TEXT: ACTS 8:26-40

*PURPOSE: TO SHOW THAT CHRIST CAN MAKE A DIFFERENCE IN A PERSONS LIFE
AND THAT YOU NEED TO RESPOND TO HIM*

INTRODUCTION:

The portion of Scripture that we are going to look at is read most of
the time when there is a baptism, but is baptism the real theme of
this Scripture? I want you to see, as we read, if you can determine
what the main theme is in this passage.
I think that we find the real theme is not baptism, but Christ
reaching out into the world and including the untouchables into His
Kingdom. Immediately preceding today's text, we see Philip preaching
to and reaching the Samaritans, untouchables to the Jews. In the
verses that follow, we see the conversion of Saul, an untouchable to
the Christians. In today's text we see the conversion of an Ethiopian
Eunuch lets examine this conversion._

★ 1. GOD HAD PLANNED A DIVINE APPOINTMENT (V26)

★ 2. WITH AN UNTOUCHABLE_ WAS A GENTLE HE_

★ 3. WAS A EUNUCH (DEUT. 23:1)_

★ 4. SOME HOW HE HAD BECOME. L GOD FEARER

HE HAD WENT TO JERUSALEM TO WORSHIP (BUT WOULD NOT HAVE BEEN ALLOWED
IN THE TEMPLE)HE HAD OBTAINED A COPY OF ISAIAH HE BECAME A CHRISTIAN
HE HAD QUESTIONS ABOUT WHAT HE WAS READING IN ISAIAH PHILIP STARTING
FROM THIS SCRIPTURE (IS. 53-56 THE SUFFERING SERVANT)THEN HE PREACHED
JESUS TO HIM THE EUNUCH BELIEVED AND ASKED FOR BAPTISM. TRADITION HAS
IT HE BECAME A MISSIONARY TO ETHIOPIA.

CONCLUSION: The message of Jesus is being taken over the entire world
as Jesus commanded. People are believing and having their lives
changed. Christ is making a difference in their life. Christ can make
a difference in your life. He can make you a new person, if you let
Him.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.